Search This Blog

Sunday, April 10, 2011

மாப்பிள்ளை, நஞ்சுபுரம் - விமர்சனம்


மாப்பிள்ளை


சன் பிக்சர் வெளியீட்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாப்பிள்ளை. சுராஜ் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைபடத்தின் அவுட் லைன் எடுத்துட்டு இப்போ இருக்கிற ட்ரெண்டுக்கு ஏற்ற மாதரி கொஞ்சம்  மாற்றி அமைத்து படம் எடுத்து உள்ளார்.

கதை  

முதல் காட்சியில் விவேக்கை காட்டுகிறார்கள்.. கிட்டத்தட்ட சுமார் முப்பது நிமிடம் அவர் தான் பேசி கொண்டே உள்ளார் (நமீதா ரசிகர் மன்ற தலைவனாக ).. சரி மெயின் லைன் கதைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்கள்..


நாயகி ஹன்சிகா மோத்வாணி தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.பல காட்சிகளுக்கு பிறகு தனுஷ் இவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் இவர்களின் காதலுக்கு விவேக் மறைமுகமாக பயன்படுத்த படுகிறார்.  ஹன்சிகா அம்மாவாக மனிஷா கொய்ரால.. ( கொடுமை ) .. காதலுக்கு ஒத்து கொள்ளும் போதும் தனுசின் உண்மையான கேரக்டர் தெரிய வருகிறது.. திருமணதிற்கு தடை போடுகிறார். அதனையும் மீறி தனுஷ் கல்யணம் செய்கிறார் .. பின்பு அத்தை மருமகனுக்கு இடையே  நடக்கும் காட்சிகள் தான் இந்த மாப்பிளை..ஏற்கனவே சீடன் என்ற மொக்கை படத்தில் நடித்த தனுஷ் இந்த படத்தை ஏன் நடித்தார் என தெரிய வில்லை. இப்படத்தில் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  நாயகி வேஸ்ட் ஒ வேஸ்ட்..

இப்படத்திற்கு முக்கிய பலம் நடிகர் விவேக். விவேக்கின் டயலாக் மிக  மிக சூப்பர்.  

நான் பார்த்த படங்களில் மிக மொக்கையான படங்களில் இதுவும் ஒன்று.. இன்டர்நெட்டில் பார்த்த எனக்கே இவளோ கடுப்பா இருக்கு.. தியேட்டரில் படம் பார்த்த நண்பர்களுக்கு எப்படி இருக்கும்.. :(


 நஞ்சுபுரம்

 நஞ்சுபுரம் பேருக்கு தகுந்தது போல, ஊர் நிறைய விஷப்பாம்புகள் நடமாட்டம் நிறைந்த ஊர், எப்போது யாரை வந்து பாம்பு கடிக்கும் என யாருக்கும் தெரியாது. ஷப்பற்களோடு திரியும் நாகங்களை, வேடிக்கையாக து£க்கி வீசுகிற அளவுக்கு தைரியமுள்ள ராகவ் ( நாயகன் ). அந்த ஊரில் ஜாதி தீ பற்றி எரிகிற வழக்கமான ஒரு ஊரு.. ராகவ் மோனிகாவை காதலிக்கிறார், ஆனால் மோனிகா கீழ் ஜாதி பெண்.  மோனிகாவை ஒரு முறை பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார் ராகவ். ஆனால் அந்த பாம்பை கொல்வதற்குள் அது தப்பித்து விடுகிறது. 

அந்த ஊரில் அடிபட்ட பாம்பு நாற்பது நாளுக்குள் அடித்தவனை கொன்று பழிதீப்பதாக நம்பப்படுகிறது.படமெடுக்கும் நாகத்தை படக்கென்று பற்றிக் கொண்டு வாலை திருகி விசிறியடிக்கும் ராகவ் திடீரென்று கோழையாக மாறி கயிறை கூட 'அது'வாக நினைத்து அலறுவதெல்லாம் பரிதாபம். ஒரு மண்டலத்திற்கு பரணில்தான் இருக்க வேண்டும் என்று பாம்பு ஏற முடியாத பாதுகாப்பு அரண் அமைக்கிறார்கள். இதற்கு நடுவே இருவருக்கும் காதலாகி, பின்பு வீட்டில் அனைவருக்கு தெரிந்து, ஜாதி சண்டை ஆகி, இருவரும் இணைத்தார்கள என்பதே இந்த நஞ்சு புறம்..


 தம்பி ராமய்யா இதில் வில்லன். பாம்பின் விஷத்தைவிட கொடுமையானது ஜாதி விஷம் என்ற விஷயத்தை சொல்ல நன்றாகவே பயன்பட்டிருக்கிறார்.  மோனிகாவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார், ராகவ்வும் நன்றாக செய்திருக்கிறார்.

படம் எந்த லாஜிக் இல்லாமல் பார்த்தால் ஓகே.. மோனிகா நடித்தால் பார்க்கலாம்..

1 comment:

  1. ஹன்சிகா மேத்வானி நல்ல மைதா மாவு மாதிரி இருக்கா... தமிழ்ல கண்டிப்பா ஒரு ரவுண்டு வருவா..

    SECONDED:: // நான் பார்த்த படங்களில் மிக மொக்கையான படங்களில் இதுவும் ஒன்று.. இன்டர்நெட்டில் பார்த்த எனக்கே இவளோ கடுப்பா இருக்கு.. தியேட்டரில் படம் பார்த்த நண்பர்களுக்கு எப்படி இருக்கும்.. :( //

    ReplyDelete