Search This Blog

Friday, June 01, 2012

எது பிரார்த்தனை?


* கடவுள் நம் குறைகளைத் தீர்த்து வைக்கும்போது நாம் கடவுளை நம்புகிறோம்; நம் குறைகளைத் தீர்க்காதபோது, கடவுள் நம்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

* கவலைகள், நாளைய துன்பத்தை நீக்காது; ஆனால் அவை இன்றைய அமைதியைக் குலைத்து விடும்

* நாம் மற்றவர்களுக்காக வேண்டும் போது கடவுள் அவர்களுக்கு அருள்புரிகிறார்; நாம் அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருந்தால் யாரோ நமக்காக வேண்டிக் கொண்டார்கள் என்று அர்த்தம்.

* பிரார்த்தனை என்பது அவசரத்துக்கு மாற்றிக் கொள்ளும் ஸ்டெப்னி போன்றதல்ல; தொடர்ந்து சரியான பாதையில் பயணிக்க உதவும் ஸ்டியரிங் வீல் போன்றது.

* நம்பிக்கையை இழந்து எல்லாம் முடிந்துவிட்டது என்றெண்ணாமல் ‘இது முடிவு இல்லை; ஒரு சிறிய வளைவுதான்’ என்றெண்ணி நாம் முன்னேற வேண்டும்.


No comments:

Post a Comment