Search This Blog

Tuesday, June 05, 2012

சிந்திக்க... சிறக்க!


உன்னை யாராவது அவமானப்படுத்தினால் கோபம் வருகிறது. சந்தர்ப்பத்தைத் தவற விடாதே. ஏன் இந்தக் கோபம் வருகிறது என்று புரிந்து கொள்ள முயற்சி செய். அதை ஒரு தத்துவமாக ஆக்காதே. நூலகங்களுக்குப் போய் கோபம் பற்றி ஆய்வு செய்யாதே. கோபம் உனக்குள் நிகழ்கிறது. அது ஒரு உயிர்ப்பான அனுபவம். உன் முழு கவனத்தை அதன் மீது திருப்பு. அது உனக்குள் ஏன் எழுந்தது என்று புரிந்து கொள்ள முயற்சி. இது ஒரு தத்துவார்த்த சிக்கல் அல்ல. கோபம் உனக்குள் நிகழ்கிறது. நீ அதைத் தொட முடியும். நீ அதை ருசிக்க முடியும். இது ஏன் நிகழ்கிறது என்று யோசித்துப் பார்.

இது எங்கிருந்து வந்தது? எப்படி என் மீது ஆளுமை செலுத்துகிறது? எப்படி இதில் நான் பைத்தியமாகிப் போய்விடுகிறேன்?’ என்று புரிந்து கொள்ளப் பார்.

கோபம் முன்பும் நிகழ்ந்தது. இப்போதும் நிகழ்கிறது. ஆனால் இப்போது ஒரு புதிய அம்சம் சேர்ந்துள்ளது. புரிந்து கொள்ளும் அம்சம். இது சேர்ந்தவுடன் அந்தக் கோபத்தின் தரமே மாறி விடுகிறது.

மேலும் மேலும் கோபத்தைப் புரிந்து கொண்டால் அது குறைந்து கொண்டிருக்கும். முழுமையாகப் புரிந்து விட்டால் அது காணாமலே போய்விடும். புரிதல் கொதிக்கச் செய்வது போன்றதாகும். குறிப்பிட்ட டிகிரிக்குப் பின் தண்ணீர் மறைந்து விடுகிறது.

பாலுணர்வு உள்ளது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். புரியப் புரிய அது குறைந்து விடும். ஆழமாகப் புரிய வரும்போது தவறு மறைகிறது. சரியானது மேலும் வேரூன்றுகிறது. பாலுணர்வு மறைந்து அன்பு வேரூன்றுகிறது. கோபம் மறைந்து கருணை வேரூன்றுகிறது. பேராசை மறைந்து பகிர்ந்து கொள்ளல் வேர் கொள்கிறது.

ஆழமான புரிதலில் எதுவெல்லாம் மறைந்து விடுகிறதோ, அவையெல்லாம் தவறு எனலாம். வேர் கொள்வது சரியானது எனலாம். இப்படித்தான் நான் பாவத்தையும் புண்ணியத்தையும் அடையாளம் காண்கிறேன். புனிதமான மனிதன், புரிந்து கொண்டவன். பாவம் செய்பவன், புரியாதவன். அவ்வளவுதான். புனிதனுக்கும் பாவிக்கும் உள்ள வேறுபாடு, பாவம் - புண்ணியம் சம்பந்தப்பட்டதல்ல - புரிதல் சம்பந்தப்பட்டது.



No comments:

Post a Comment