Search This Blog

Friday, April 15, 2011

தெரிந்து கொள்ளுங்கள் ..

அன்றாடம் பயன்படும் மற்றும் கேள்வி பட்ட கருவிகளின் அறிவியல் விளக்கங்களை இங்கு பார்போம்.

பால் ஏன் பொங்குகிறது? 


 தண்ணீரைப் போல பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது. வேதியலில் பாலை ஒரு கொலாட் (colloid) என்பார்கள். அதாவது அதில் பல பொருள்கள் இணைந்து காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை புரதம் மற்றும் கொழுப்பு.தண்ணீரைப் போல பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது. வேதியலில் பாலை ஒரு கொலாட் (colloid) என்பார்கள். அதாவது அதில் பல பொருள்கள் இணைந்து காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை புரதம் மற்றும் கொழுப்பு.

பால் என்றால் அதில் தண்ணீர் கலந்துதான் இருக்கும். பால்காரர் சாமர்த்தியமாக கலக்கும் தண்ணீரை சொல்லவில்லை. இயல்பாகவே பாலில் நீர்சத்து உண்டு. பால் காச்சப்படும்போது வெப்பம் மெல்ல மெல்ல அதிகமாகிறது. அப்படி அதிகமாகும்போது தண்ணீரில் ஒரு பகுதி நீராவியாக மாறி மேற்புறத்தை அடைகிறது. அங்கே சிறுசிறு குமிழ்களாக மாறி வெடிக்கின்றன. 

படலம் முழுமையாகப் பரவாதபோதோ, மிக மெலிதாகவோ இருந்தால் இந்த நீராவி வெளியேறிவிடுகிறது. படலம் நன்கு முழுவதுமாகப் பரவி விட்டிருந்தால், கீழே கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும் நீராவி ஒரு கட்டத்தில் அந்தப் படலத்தை மேலே தள்ளுகிறது. அதாவது பால் பொங்குகிறது. 

பேஸ்மேக்கர் கருவியைப் பொதுவாக உடலின் எந்தப் பகுதியில் பொருத்துவார்கள்? 


பேஸ்மேக்கர் என்பது ஒரு மின்கருவி. இதயம் தானாக சரியாகத் துடிக்காதபோது பேஸ்மேக்கர் அதைத் துடிக்க வைக்கும்.சிலர் எண்ணுவதுபோல் பேஸ்மேக்கர் இதயத்தினுள்ளாகவோ இதயத்துக்கு வெகு அருகிலோ பொருத்தப்படுவதில்லை. உடலின் முன்புறத்தில் தோள்பட்டையில் காலர் எலும்புக்குக் கீழே தோலுக்குள் பொருத்தப்படுகிறது. அங்கிருந்து ஒரு ஒயர் இதயப் பகுதிக்குச் செல்லும். 

(உலோகத்தால் செயப்பட்டது பேஸ்மேக்கர். நம் உடல் எந்த வெளிப்பொருளையும் ஏற்காது எனும்போது பேஸ்மேக்கரை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறது? பேஸ்மேக்கர் கிருமி நீக்கம் செயப்பட்டது. நன்கு சீல் செயப்பட்டிருப்பதால் உள்ளிருந்தும் எதுவும் வெளியேறாது. திசுக்களிலிருந்தும் அதற்குள் எதுவும் புக முடியாது. என்றாலும் இது ஒரு வெளிப்பொருள் என்பதால் அதைச் சுற்றிலும் ஒரு திசுப் படலம் உருவாகும்).  

ப்ளாஸ்டிக் சர்ஜரியில் எந்த வகை ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது? 

ப்ளாஸ்டிக் சர்ஜரியில் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. பின் எதற்காக இந்தப் பெயர்? கிரேக்க மொழியில் ப்ளாஸ்டிக் என்றால் TO MOLD அதாவது ‘அச்சில் வார்த்தல் அல்லது ஒழுங்கமைத்தல்’ என்று பொருள். அதனால்தான் இதை ப்ளாஸ்டிக் சர்ஜரி என்கிறார்கள். 

குறிப்பு :

எதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் ..


நான் இந்த வலை தளம் ஆரம்பித்ததின் நோக்கம் நான் படித்தவற்றை  முகம் அறிந்த மற்றும் முகம் அறியா நபர்கள் படித்து தெரிந்து கொள்ள தான். என்னால் நாலு பேருக்கு நாட்டு நடப்பு தெரியுது ஒரு சின்ன சந்தோசம் .  நான் படித்த  சில விசயங்களை கூறுகிறேன். 

இது தப்பா???

எனக்கு நான் செய்யும் வேலையை பற்றி யோசிக்க நேரம் இல்லை.. உங்களுக்கு பிடித்து இருந்தால் வாசியுங்கள்.. இல்லை என்றால் உங்கள் வேலையே பார்த்து கொண்டு போங்கள். நான் யாரையும் கட்டாய படுத்தி வாசிக்க சொல்ல வில்லை என்பதை இங்கே தாழ்மையுடன் பதிவு செய்கிறேன் ..

2 comments:

  1. அண்ணாமலை, பயனுள்ள தகவல்கள் இவை. இவை போன்றவற்றை http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D போன்ற கட்டுரைகளாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதலாமே? பல்லாயிரக்கணக்கானோர் நாள்தோறும் படித்து வருவதால் பெரும்பயன் தரும்.

    ReplyDelete