ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வாரத்தில் 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தை 19 பில்லியன்
டாலர் தந்து வாங்கியிருக்கிறது. இந்த 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தைத்
தொடங்கியவர்கள் பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கோம் என்கிற இருவர். பிரையன் ஆக்டன், யாகூ நிறுவனத்தில் ஏறக்குறைய 11 ஆண்டுகள் வேலை
செய்துவிட்டு, புதிய வாய்ப்பைத் தேடி அதிலிருந்து வெளியேறி, டிவிட்டர்
நிறுவனத்திடம் வேலை கேட்டார். 'ஸாரி, வேலை இல்லை’ என்ற பதில் வரவே, அடுத்து
ஃபேஸ்புக் நிறுவனத்தை அணுகினார். அங்கும் 'வேலை இல்லை’ என்கிற பதிலே வர,
தன் நண்பரான ஜான் கோமுடன் இணைந்தார்.

'வாட்ஸ்அப்’ என்பது ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என
அனைத்தையும் ஒரு போனிலிருந்து இன்னொரு போனுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன்.
எந்தவித விளம்பரமும் செய்யாமல், இந்த ஆப்ஸை புழக்கத்தில்விட, இன்றைக்கு 45
கோடி பேர் இதை பயன்படுத்துகின்றனர். ஒருநாளைக்கு 10 லட்சம் புதிய
வாடிக்கையாளர்கள் 'வாட்ஸ்அப்’புக்கு வருகின்றனர்.இந்த 'வாட்ஸ்அப்’பைத்தான் இப்போது ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இது தொழில்நுட்ப உலகின் மிகப் பெரிய வியாபாரமாகக் கருதப்படுகிறது.தோல்விகளையும், நிராகரிப்பு களையும் கண்டு துவளாமல் செயல்பட்டால் வெற்றி
நிச்சயம் என்கிற பாடத்தைத்தான் இந்த இருவரும் நிரூபித்துக்
காட்டியிருக்கிறார்கள்.
வாட்ஸ் ஆப் உலகமக்கள் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கூடியது என்பதை நன்றிகலந்த மகிழ்ச்சியுடன் அதன் கண்டுபிடிப்பாளருக்கும் வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDelete