Search This Blog

Monday, May 05, 2014

2014 ஐ.பி.எல். என்ன நடக்கும்?

 
வழக்கமாக ஐ.பி.எல். ஆரம்பித்த பிறகு தான் சர்ச்சைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பும். ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் மோதல், கம்பீர் - கோலி மோதல் என்று பரபரப்புகளுக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், இந்த முறை எல்லாம் கொஞ்சம் முன்கூட்டியே ஆரம் பித்துவிட்டன. தினம் தினம் புதுக்காட்சிகள் சர்ச்சைகளோடு புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது ஐ.பி.எல்.தான். இந்த ஐ.பி.எல்.லில் என்ன மாதிரியான சர்ச்சைகள், புதிய வாய்ப்புகள் எல்லாம் உருவாகும்?
 
தோனியும் சி.எஸ்.கே.வும்!

சென்னைக்கு ஐகான் வீரர் என்று யாரும் இல்லாத காரணத்தால், 2008 ஐ.பி.எல். ஏலத்தில் ரூ. 5.80 கோடிக்கு (1.5 மில்லியன் டாலர்) தோனியைத் தேர்ந்தெடுத்தது சி.எஸ்.கே. பதிலுக்கு, சி.எஸ்.கே.வை ஐ.பி.எல்.ன் மிகச் சிறந்த அணியாக உருவாக்கினார் தோனி. 6 ஐ.பி.எல்.களில் 5 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது சி.எஸ்.கே. எல்லா ஐ.பி.எல்.களிலும் அரையிறுதி/ ப்ளே ஆஃப்புக்கு தகுதி பெற்ற ஒரே அணி சி.எஸ்.கே.தான். கடைசி இரண்டு இடங்களில் இதுவரை எல்லா அணிகளும் ஒரு முறையாவது இடம்பிடித்திருக்கின்றன. சி.எஸ்.கே. இதுவரை அப்படியொரு சங்கடத்தை ரசிகர்களுக்கு அளிக்கவேயில்லை. இந்த நன்மதிப்பால் இந்தியா சிமென்ட்ஸின் துணைத் தலைவராகவும் ஆனார் தோனி. எல்லாமே சுமுகமாகப் போக் கொண் டிருந்த நேரத்தில் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் சிக்கிக்கொண்டதுதான் பெரிய சிக்கலாகிவிட்டது. உச்ச நீதிமன்றம் அமைத்த முட்கல் கமிட்டியின் சூதாட்ட வழக்கு அறிக்கையில், ஸ்ரீனிவாசனின் பெயரும் இடம்பெற்றிருப்பது சி.எஸ்.கே.வுக்கு மேலும் பேரிடியாக இருக்கிறது. தோனி, குருநாத் மெயப்பன் பற்றி முட்க லிடம் தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார் என்றொரு விவாதமும் உச்சநீதி மன்றத்தில் நடந்துள்ளது. மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரத்தில் தமக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தமக்கு ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் தோனி.

தோனி வழக்குத் தொடர்ந்தது தனிக்கதை.

எல்லாம் எதனால்? அவர் சி.எஸ்.கே.வுடன் இணைந்திருப்பதால் தான். இதனால் தோனிக்கு நேரும் பாதிப்புகள்? தோனியின் விளம்பர வரு வா பாதிக்கப் படும் சூழல் உருவாகியுள்ளது. பெப்சி, லேஸ், அசோக் லேலண்ட் என மொத்தமாக 17 பிராண்டுகள் தோனியை நம்பிப் பணத்தை இறைத்துள்ளன. ஒரு கம்பெனிக்கு விளம்பரம் செய்ய ரூ.10-12 கோடிவரை தோனிக்கு வழங்கப்படுகிறது. தோனி, இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக ரூ.20 கோடியைக் கட்டி இருக்கிறார். பீகார் மற்றும் ஜார்கண்ட் மண்டலத்தில் அதிக வருமான வரி கட்டிய தனிநபர்களில் தோனி ஆறாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார். ஆனால், கடந்த வருடத்தை விட 2 கோடி குறைவாகவே வருமானவரி செலுத்தியிருக்கிறார். இதனால் தோனியின் வருமான விகிதம் குறைந்து வருகிறது என்கிற பேச்சு உருவாகியுள்ளது. இந்த நிலையில், சூதாட்ட வழக்கில் தோனியின் பெயர் அடிபடும்வரை விளம்பர வருவா, இமேஜ் போன்றவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுவதைத் தடுக்கமுடியாது.

சி.எஸ்.கே.வினால் ஏன் தோனி அவமானப்பட வேண்டும், இந்திய கேப்டனுக்குரிய மதிப்பை இழக்கலாமா என்கிற விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. தோனி, சி.எஸ்.கே.வை விட்டு வெளியேறவேண்டும் என்கிற குரல் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறது. சமீபத்திய பிரச்னைகளால், தோனி சி.எஸ்.கே.வை விட்டு விலக முடிவெடுத்தார் என்று சில வாரங்களுக்கு முன்பு எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியானதும் இதன் தொடர்ச்சிதான். உச்ச நீதிமன்றத்தில் சி.எஸ்.கே., ஸ்ரீனிவாசனுக்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறதோ அதை வைத்து சி.எஸ்.கே.வில் நீடிக்கலாமா வேண்டாமா என்று தோனி முடிவெடுப்பார். தோனி இல்லாத சி.எஸ்.கே.வை சி.எஸ்.கே. 

ரசிகர்களால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. ஆனால் இதுவரை நடந்தவை எதுவும் சி.எஸ்.கே.வுக்குச் சாதகமாக இருப்பது போலத் தெரியவில்லை.

கதவு திறக்குமா?

2015 உலகக் கோப்பைப் போட்டி, அடுத்த வருடம் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடக்கவுள்ளது. தோனி, இப்போதுள்ள ஒருநாள் அணியில் பெரிதாக மாற்றம் செய்ய விரும்பவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே வாப்பிருக்கிறது. இந்த ஐ.பி.எல்.லில் சிறப்பாக ஆடி, நிரூபித்துக் காட்ட ஒரு பெரிய கூட்டமே முயற்சியில் இறங்கியிருக்கிறது. ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், ஜகீர்கான், யுவ்ராஜ் சிங், யூசுப் பதான், முரளி விஜ, தினேஷ் கார்த்திக், ராகுல் சர்மா, புஜாரா, வினய்குமார், இஷாந்த் சர்மா, ஓஜா, டிண்டா என்று பலரும் 2015 உலகக்கோப்பை அணியில் இடம்பெற ஐ.பி.எல்.தான் நுழைவுச் சீட்டு. ரஞ்சியில் ஆடி கவனம் பெறுவதை விடவும் ஐ.பி.எல். எளிதான வழி. யார் இதில் ஜெயிக்கப்போகிறார்கள்?

இலங்கை வீரர்கள்?

பாகிஸ்தான் வீரர்கள் இந்த ஐ.பி.எல்.லிலும் சேர்க்கப்படவில்லை. டி20 உலகக்கோப்பையை வென்றாலும் இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல்.லில் அதிகம் இல்லை. பெராரா (பஞ்சாப்), முரளிதரன் (ஆர்.சி.பி.), மலிங்கா (மும்பை) ஆகிய இலங்கை வீரர்கள் மட்டுமே ஐ.பி.எல்.லில் ஆடுகிறார்கள். (சங்ககரா ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை, மேத்யூஸ், ஜெயவர்தனே, தில்ஷன் ஆகியோரை ஏலத்தில் யாரும் எடுக்க வில்லை.) இந்த வருடமும் இரண்டு ப்ளே ஆஃப் மேட்சுகள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளன. சென்ற வருடம், தமிழக அரசு இலங்கை வீரர்களுக்குத் தடைபோட்டதால் சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ப்ளே ஆஃப் மேட்சுகள், தில்லிக்கு இடம் மாறின. இந்த முறை தமிழக அரசு எடுக்கும் முடிவில்தான் ப்ளே ஆஃப் மேட்சுகள் சென்னையில் நடக்குமா இல்லையா என்று தெரியவரும். (சி.எஸ். கே.வின் இரண்டு மேட்சுகள் தோனியின் சோந்த ஊரான ராஞ்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.)

புதிய வீரர்கள்!

சஞ்சு சாம்சன், பாபா அபரஜீத், விஜ ஜோல், உன்முக்த் சந்த், ரிஷி தவான், கரன் ஷர்மா போன்ற புதிய வீரர்கள் ரஞ்சியிலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி அடுத்தப் படிக்கு நகர்ந்துவிட்டார்கள். ஐ.பி.எல்.லிலும் நிரூபித்து விட்டால் நேராக இந்திய அணிக்குள் நுழையவேண்டியதுதான். சஞ்சு
சாம்சன் சென்ற ஐ.பி.எல்.லால் கிரிக்கெட் வட்டாரம் முழுக்கப் பிரபலமானார்.

இந்த வருடமும் தம்மை நிரூபித்தால் பெரிய வாய்ப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. பாபா அபரஜீத்தை நம்பி பத்ரிநாத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது சி.எஸ்.கே. பாபா சிறந்த ஆல்ரவுண்டர். அட்டகாசமான ஃபீல்டர். சாம்சன் போல பாபாவும் ஐ.பி.எல்.லால் பலனடையவேண்டிய நேரமிது.

சர்ச்சைகளும் பொழுதுபோக்குமாக ஐ.பி.எல். நகர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற ஐ.பி.எல்.லின் முடிவில், நம்பமுடியாத சம்பவங்கள் எல்லாம் நடந்தன. இந்த ஐ.பி.எல். என்ன மாதிரியான அதிர்ச்சிகளைக் கொண்டுவரப்போகிறதோ? 

No comments:

Post a Comment