Search This Blog

Wednesday, May 14, 2014

டிராவல் இன்ஷூரன்ஸ்...

டிராவல் இன்ஷூரன்ஸ்... சுற்றுலா செல்லும்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்து, திருட்டு, பயண ரத்து போன்றவற்றில் இருந்து, பொருளாதார ரீதியாக காக்கக்கூடிய ஆபத்பாந்தவன்!

'வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். ஆனால், உள்நாட்டு சுற்றுலாவுக்கு கட்டாயம் இல்லை. என்றாலும், பாலிசி எடுப்பதுதான் பாதுகாப்பானது. இதற்கான பிரீமியம், நாட்களின் அடிப்படையில் இருக்கும். 6 மாத குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை எடுக்க முடியும். அனைத்து ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் மூலமாகவும் இதை எடுக்கலாம்.


 நெருங்கிய உறவினர் இறந்துபோவது, நாம் விபத்தில் சிக்குவது போன்ற தவிர்க்க முடியாத காரணங்களினால் சுற்றுலாவை ரத்து செய்தால், டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும். விமானம் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஆகும்போது, வெளியில் அறை எடுத்து தங்கினால், க்ளைம் செய்ய முடியும். போராட்டம் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் ரயில், விமான நிலையத்தை அடைய முடியவில்லை என்றாலும், டிக்கெட் தொகையை க்ளைம் செய்யமுடியும். போட்டிங், ரைடிங், ஃப்ளையிங் என விளையாட்டு மற்றும் சாகசங்களை நிகழ்த்தும்போது... விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவச் செலவுகளுக்கும் க்ளைம் பெற முடியும். இன்னும் சில இனங்களுக்காகவும் க்ளைம் பெற முடியும்'.



''சுற்றுலாவின்போது எந்த அசம்பாவிதம் நிகழ்ந்தாலும், உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புகொண்டு பதிவு செய்வது அவசியம்'.

- கிருஷ்ணதாசன்,துணைத் தலைவர்இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ்.

இரா.ரூபாவதி

No comments:

Post a Comment