போக்குவரத்து நெரிசலும், பெட்ரோல் விலை உயர்வும்
செய்தியாகும்போது எல்லாம், இப்படி ஓர் எண்ணம் தோன்றும்: 'ஏன் இதுவரை யாரும்
நான்கு பேர் பயணிக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பான ஒரு மோட்டார் பைக்கை
வடிவமைக்கவில்லை?’
இந்த எண்ணம் இங்கிலாந்தின் ஸ்டேம்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த காலின்
ஃபர்ஸ்ருக்கும் இருந்திருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில் 25 பேர்
பயணிக்கத் தக்க ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறார் காலின். பிளம்பரான காலின்,
தன்னுடைய 125 சிசி ஸ்கூட்டரின் பின்பக்கத்தைப் பாதி அளவுக்கு வெட்டி
எடுத்து, 22 மீட்டர் நீளம் கொண்ட அலுமினிய சேஸியுடன் இணைத்து உருவாக்கி
இருக்கும் ஸ்கூட்டர்தான்... இப்போது உலகின் நீளமான ஸ்கூட்டர். சமீபத்தில்
கின்னஸ் சாதனைக்காக தன்னுடைய ஸ்கூட்டரில் 23 பேரை உட்கார வைத்து ஓட்டிக்
காட்டினார் காலின். இதற்கு முன்பு, ரஷ்யாவின் ஒலெக் லெஷி ரகோ என்பவர் 9.57
மீட்டர் நீளத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் செய்து இருக்கிறார். 16 பேர்
பயணிக்கதக்க மோட்டார் சைக்கிள் அது!இதுபோன்ற நீளமான 25 பேர், 16 பேர் பயணிக்கத்தக்க சாதனை வாகனங்கள், அன்றாட
நடைமுறை வாழ்க்கைக்கு உதவாதவையாக இருக்கலாம். ஆனால், நான்கு பேர் பயணிக்கக்
கூடிய ஒரு ஸ்கூட்டரையோ பைக்கையோ வடிவமைக்க இது நிச்சயம் உந்துகோலாக
இருக்கும்.
நான்கு பேர் பாதுகாப்பாகப் பயணம் செய்யக்கூடிய மோட்டார் சைக்கிளைத் தயாரிப்பது என்பது சவால்தான். ஆனால், சவால்தானே ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்புக்கும் கால்கோள் நாட்டியிருக்கிறது. யார் சாதிக்கிறார்கள் பார்ப்போம்!
விகடன்
No comments:
Post a Comment