இந்தியாவின் ‘மிளகாய் நகரம்’ என ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர்
அழைக்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட
மிளகாய்,
ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது. இந்தியாவில்,
மிகவும் அதிக அளவிலும் நிறைந்த தரம் மற்றும் அதிகக் காரத்துடனும்,
விதவிதமான
வகைகளிலும் மிளகாய் விளைவதால்தான், ‘மிளகாய் நகரம்’ என்ற சிறப்புப் பெயர்
குண்டூருக்குக் கிடைத்துள்ளது.கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள குண்டூர் மாவட்டம்
முழுவதும், கிருஷ்ணா நதியின் கால்வாய்களால் அதிக அளவில் மிளகாய் விளைச்சல்
நடைபெறுகிறது.நம் நாட்டில் ஜெய்ப்பூரில் சாம்பர் ஏரி உள்ளது. இதன் பரப்பளவு 80 சதுர
மைல். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மே வரை உள்ள எட்டு மாதங்களில் இந்த
ஏரியின் நீர்
உப்பாக இருக்கிறது. மீதியுள்ள நான்கு மாதங்களில் இந்த ஏரியின் நீரில்
உப்புத்தன்மை மாறி, பருகுவதற்குச் சுவையான இனிப்பான நீராக மாறிவிடுகிறது.
இந்த விசேஷமான
அமைப்பு வேறு எந்த ஏரியிலும் இல்லை.
உலகிலேயே மிகச்சிறிய குரங்கு, தென் அமெரிக்க நாடுகளில் உள்ள காட்டுப்
பகுதிகளில் காணப்படுகிறது. ‘பிக்மி மார்மோ செட்’ என்றழைக்கப்படும் இந்தக்
குரங்கு
12 சென்டிமீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இதன் எடை 70 கிராம் மட்டுமே.இந்தியாவின் மிகப்பெரிய மசூதி, தலைநகர் தில்லியில் உள்ள ‘ஜும்மா’
மசூதிதான். பதினேழாம் நூற்றாண்டில், இதை 5 ஆயிரம்பேர் சேர்ந்து கட்டி
முடித்தார்கள்.
கோகோ மரத்தின் கொட்டைகள் தான் சாக்லேட்டுக்கான மூலப்பொருள். கோகோ கொட்டைகளை
அரைத்து,
சர்க்கரையும் கலந்து கோகோ பானம் கண்டவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.திரவப்
பொருளாக இருந்த சாக்லேட்டைத் திட வடிவிலாக மாற்றியவர்கள் ஜெர்மானியர்.
சாக்லேட்டுக்கு
பட்டர் பேப்பர் மற்றும் ஜிகினா உறை அணிவித்தவர்கள் சீனர்கள். சாக்லேட்டை
நடுவில் வைத்து இரண்டுப் புறமும் உறைகளை முறுக்கிவிட்டு அழகுபடுத்தியவர்கள்
ஜப்பானியர்கள்.
சாக்லேட்டில் கொழுப்பு 50 சதவிகிதம்; புரோட்டீன் 24 சதவிகிதம்;
கார்போஹைடிரேட் 26 சதவிகிதம் உள்ளன.
இரண்டாம் நூற்றாண்டில் ரோம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு அவ்வளவாக
அறியப்படாத கைக்குட்டைகள், 15-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் பரவலாக
உபயோகப்படுத்தப்பட்டன.
இத்தாலியர்கள் மூக்கு துடைக்க பயன்படுத்தும் கைக்குட்டைகளை பாக்கெட்டிலும்,
முகத்தைத் துடைக்க பயன்படுத்தும் கைக்குட்டைகளைக் கையிலும்
வைத்துக்கொண்டனர்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது
நமக்குத் தெரியும். அப்படிச்
சுற்றி வரும்போது செங்குத்தாக அது சுற்றி வருவதில்லை. 23 டிகிரி சாய்ந்த
அச்சில்தான் சுற்றி வருகிறது. அதனால் பருவ மாற்றம் உண்டாகிறது.ஜூன் மாதம் பூமியின் வட துருவம் சூரியனை நோக்கி 23 டிகிரி சாய்ந்து
இருப்பதால் பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கோடைகாலம்
ஏற்படுகிறது.
ஆறு மாதங்கள் கழித்து டிசம்பரில் தென் துருவம் சூரியனை நோக்கிச் சாய்வதால்,
தென் பகுதிகளில் அப்போது கோடைகாலமாகிறது.
No comments:
Post a Comment