நம் நாட்டில் சர்க்கரை
நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின்
மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான்
பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது
என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், 'அரிசியை
மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்' என்பதும் முக்கியமாக
பேசப்படுகிறது!
ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு 'கிளைசீமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index)என்று பெயர். சுருக்கமாக 'ஜிஐ' (GI). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் 'ஜிஐ' 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள்.
100-70 வரை 'ஜிஐ' உள்ள உணவுகளை, 'அதிக ஜிஐ' என்றும், 70-55 வரையிலான உணவுகளை 'நடுத்தர ஜிஐ' என்றும், 55-க்கு கீழே உள்ள உணவுகளை, 'குறைந்த ஜிஐ' என்றும் அழைக்கிறோம்.
அதிக 'ஜிஐ’ உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த 'ஜிஐ’ உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகின்றன. ஆகவே, 70-க்கும் மேல் 'ஜிஐ' உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55-க்குக் கீழ் உள்ள உணவுகளே பாதுகாப்பானவை.
அப்படியானால், நாம் உண்ணும் உணவின் 'ஜிஐ' எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதானே!
அதற்கான பட்டியலை மேலே கொடுத்திருக்கிறேன்... பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் கவரிலும் 'ஜிஐ' அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது - கைக்குத்தல் அரிசியின் ஜிஐ, 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் 'ஜிஐ' அளவு மிகவும் அதிகம் - 75.
நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) 'ஜிஐ' இடைப்பட்ட ரகம்: 56 - 58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும் நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்! இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் 'பொன்னி அரிசிதான் வேண்டும்' என்கிற உங்களின் பிடிவாதம் சரியா... இல்லையா... என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
'சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் 'ஜிஐ' மட்டுமல்லாமல்... சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity)கூட கணக்கிடப்படுவது முக்கியம்' என்கிற கருத்தும் உண்டு. இதை 'கிளைசீமிக் லோடு' (Glycemic Load)என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக 'ஜிஎல்' (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில் மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய 'குளுக்கோஸ் சுமை’ அதிகம்தானே? அதிக 'ஜிஐ' இருக்கும்போது, அதிக 'ஜிஎல்'லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?
மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான 'அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகம்' (American Diabetes Association)'எந்த மாவுப்பொருளைச் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமில்லை - எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதுதான் உலகெங்கும் உள்ள டாக்டர்கள், 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடி சம்பந்தமில்லை’ என்று சமீப காலம் வரை அடித்துச் சொன்னதற்குக் காரணம்.
இதை உடைத்துப் போட்டிருப்பது... அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் கடந்த 22 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி முடிவு. அதென்ன முடிவு?
அருமை. பல பதிவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
ReplyDeleteஎன் அனுபவங்களை இந்த பதிவுகளில் எழுதி உள்ளேன். தங்களுக்கு முடிந்தால், தயவு செய்து, கடித்து தங்கள் கருத்துகளை எழுதுமாறு, கோருகிறேன். நன்றி.
http://vetrimagal.blogspot.in/2012_05_01_archive.html
http://vetrimagal.blogspot.in/2012_06_01_archive.html
ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும் - 3 http://vetrimagal.blogspot.in/2012/08/3.html
அருமையான விழிப்புணர்வு பதிவு! தகவல்கள் மிகவும் சிறப்பு!
ReplyDeleteplease let us know, which rice we can go for eating
ReplyDelete