சம்பளத்துக்காக இந்திய ஹாக்கி வீரர்கள் போராடிய அவலமெல்லாம் இனி
இருக்காது. சர்தார், சந்தீப் சிங்குகள் பி.எம்.டபிள்யூ. கார்
வாங்கிவிட்டார்கள். இளம் வீரர்கள் பங்களா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம்,
எச்.ஐ.எல். என்கிற ஹாக்கி இந்தியன் லீக் போட்டி நிகழ்த்திய மாயம்.
கிரிக்கெட் வீரர்கள்போல ஹாக்கி வீரர்களின் கையிலும் பணம் விளையாடுகிறது.
ஐ.பி.எல். மாதிரி ஹாக்கிக்கும் ஒரு லீக் அமைய வேண்டும் என்று
ஆரம்பிக்கப்பட்டது, எச்.ஐ.எல். லலித் மோடி ஐ.பி.எல்-ன் சூத்திரதாரியாக
இருந்தது போல எச்.ஐ.எல்-ன் மூளை, இதயம் எல்லாமே நரிந்தர் பத்ராதான்.
ஹாக்கி
இந்தியா அமைப்பின் பொதுச் செயலர். கடுமையாக உழைத்து இந்திய ஹாக்கியை
அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்று விட்டார். இந்த வருட எச்.ஐ.எல்-லில்,
தில்லி, மும்பை, பஞ்சாப், ராஞ்சி, உத்தர பிரதேசம்
என ஐந்து அணிகள் விளையாடின. (அடுத்த வருடம் சென்னையும் பெங்களூருவும்
இணையலாம்) ஒவ்வொரு அணியிலும் 24 பேர். 14 இந்தியர்கள். 10 வெளிநாட்டவர்கள்.
இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவம் கொன்றதைத் தொடர்ந்து
எழுந்த எதிர்ப்பால் பாகிஸ்தான் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஆனால், பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு வந்திருந்த பாகிஸ்தான் மகளிர்
அணியினர் பாதுகாப்பாக கடைசிவரை ஆடினார்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி ஏலத்தில் இந்திய கேப்டன் சர்தார்
சிங் அதிகபட்சமாக ரூ. 43 லட்சத்துக்கும் ரகுநாத் ரூ. 42 லட்சத்துக்கும்
சந்தீப் சிங் ரூ. 35 லட்சத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘இந்திய
ஹாக்கி வீரர்கள் உரிய
வசதிகள் இல்லாமல் நடத்தப்பட்டது மிகவும் உறுத்தியது. இனிமேல் அவர்களுக்கு
எந்தக் குறையும் இருக்காது. விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம்,’
என்று பெருமிதம் கொள்கிறார் பத்ரா.
போட்டியை வென்ற ராஞ்சி அணிக்கு 2.5 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. இறுதிப்
போட்டி ராஞ்சியில் நடந்தபோது கிரிக்கெட் மேட்சுக்கு நிகரான எழுச்சியை
ரசிகர்களிடம் காணமுடிந்தது. இதன் வெற்றியால், இந்தியாவில் அடுத்த
நான்கு ஆண்டுகளுக்கு நடக்கவுள்ள சர்வதேசப் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்ய ஹீரோ
நிறுவனம் முன்வருகிறது.
ஹாக்கியில் எதுவுமே சாதிக்காமல் இரண்டு தலைமுறை கடந்துவிட்டது. கடந்த
இரண்டு ஒலிம்பிக்ஸில் பெரிய அவமானம் ஏற்பட்டாலும் சமீபத்தில் நடந்த
சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த நான்காம் இடம், எச்.ஐ.எல்-இன் வெற்றி,
வீரர்கள் - ரசிகர்களின்
உற்சாகம் போன்றவை இந்திய ஹாக்கி இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது
என்பதை நிரூபித்துள்ளன.
Such a good post with so much information , written in a nutshell. Thanks you sir. I am glad Hockey is getting its due atlast. I translated the post and discussed with people who do not understand Tamizh. :-)
ReplyDelete