Search This Blog

Thursday, June 09, 2011

கூடா நட்பு கேடாய் முடியும் -திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் இனத்துக்கே கேடாய் முடிந்தது-பழ. நெடுமாறன்


'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என திமுக தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியோடு திமுக கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரேயானால் அந்தத் தவறை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது.

காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி திமுக ஆகும். அண்ணா, காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து 1967-ம் ஆண்டில் காங்கிரûஸ வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார்.ஆனால், அண்ணா மறைந்த உடனேயே காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையும் அவருடனேயே புதைத்தார் கருணாநிதி. 1969-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியை எதிர்த்துப் பிரதமர் இந்திராவால் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரியை ஆதரித்து வெற்றிபெற வைத்ததில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு.இத்தேர்தலில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு தருமாறு பெரியார் விடுத்த வேண்டுகோளை கருணாநிதி புறக்கணித்தபோது இந்திராவின் நட்பு கூடா நட்பாகத் தெரியவில்லை.அந்தத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு மாறி இருக்குமேயானால் இந்தியாவின் அரசியலே மாறி இருக்கும். பின்னாளில் நேர்ந்த நெருக்கடிநிலைப் பிரகடனம்,"மிசா' கொடுமைகள் போன்றவை நடந்திராது.


ஆனாலும், கருணாநிதி தனது தவறைப் பிடிவாதமாகத் தொடர்ந்தார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரúஸôடு கூட்டுச்சேர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தன. 1975-ம் ஆண்டு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் சாயல் படர்ந்தது. முரசொலி மாறன், ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுகவினர் "மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர். முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருட்டிணன் போன்றவர்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பல கொடுமைகள் அரங்கேறின. இதெல்லாம் தனது கூடாநட்பினால் விளைந்த கொடுமைகள் என்பதை உணர்ந்து கருணாநிதி திருந்தினாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

1980-ம் ஆண்டில், ""நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக'' என்ற பதாகையைத் துôக்கிப் பிடித்து மீண்டும் காங்கிரúஸôடு கூட்டுச் சேர்ந்தவர் கருணாநிதி. சிட்டிபாபு போன்றவர்களின் மரணத்துக்குக் காரணமான காங்கிரúஸôடு கூடாநட்புக் கொள்ளலாமா என்பது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை.கடந்த முப்பதாண்டு காலத்துக்கு மேலாக காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவகௌடா தமிழர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றவர்.காவிரி நடுவர் குழுவின் தலைவராக இருந்த சித்ததோஷ் முகர்ஜி மீது தவறான வழக்குத் தொடர்ந்து அவர் தானாக பதவி விலகும்படி செய்தவர் தேவகௌடா.நேர்மையானவரான முகர்ஜி பதவி விலக நேர்ந்ததால் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அதே தேவகௌடாவை இந்தியாவின் பிரதமராக்குவதில் முன் நின்றவர் கருணாநிதி. தேவகௌடாவுடன் தனது கூடாநட்பு தமிழக விவசாயிகளுக்குக் கேடாய் முடிந்ததைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை கருணாநிதி. 


2003-ம் ஆண்டு காங்கிரúஸôடு இவர் கொண்ட கூடாநட்பு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது.இலங்கை ராணுவத்தினரில் 63 சதவிகித அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டது, ஆயுதங்களும் அள்ளித் தரப்பட்டன. ஆனால், இவற்றைத் தடுத்து நிறுத்த கருணாநிதி சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. 2009-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்த இவர் முன்வரவில்லை. திமுக-வின் ஆதரவோடு மட்டுமே மன்மோகன் அரசு பதவியில் நீடித்த காலம் அது, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படாவிடில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என இவர் உறுதியான முடிவு எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்.ஆனால், அதைவிட கூடா நட்பே மேலானது என இவர் நினைத்தது தமிழ் இனத்துக்கே கேடாய் முடிந்தது. 
 

 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கிற்று. தங்கள் ஆட்சியைத் தொடர திமுக-வின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் நிலை இல்லை.எனவேதான் மகனுக்கும், மகளுக்கும் பேரனுக்கும் பதவி கேட்டு தில்லியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாநட்பினால் விளைந்த கேடு இது என்பதை அவர் அப்போதும் உணரவில்லை.தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கறை படிந்த ராசபட்சவின் கரங்களைக் குலுக்குவதற்குத் தனது மகள் உள்படத் தூதுக்குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக, உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்ததற்கு ராசபட்சவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே காரணம் என அவர் இன்னமும் உணரவில்லை.


தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கறை படிந்த ராசபட்சவின் கரங்களைக் குலுக்குவதற்குத் தனது மகள் உள்படத் தூதுக்குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக, உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்ததற்கு ராசபட்சவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே காரணம் என அவர் இன்னமும் உணரவில்லை. தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளையோ, மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்புதல், சேதுக்கால்வாய் போன்றவற்றையோ, ஈழத்தமிர் பிரச்னையையோ தீர்ப்பதற்கு கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய அவரால் இயலவில்லை.

 இந்த நாற்பதாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பும் மத்திய ஆட்சியில் இருந்த செல்வாக்கும் மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க கொஞ்சமும் உதவவில்லை. மாறாக, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் தனது குடும்பத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. கூடா நட்பின் விளைந்த பயன் இது ஒன்றுதான். 

 கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப்போல கெட்டபின் ஞானி ஆவது அவருக்கும் பயன் தராது குடும்பத்துக்கும் பயன் தராது, நாட்டுக்கும் பயன் தராது. 

  பழ. நெடுமாறன்

No comments:

Post a Comment