வெள்ளைக்கார தேசங்களிலும் Nature Poets என்று இயற்கை அழகில் முழுகியே ஈச்வரத்வத்தைக் கண்டவர்கள் இருக்கிறார்கள். ரவீந்த்ரநாத் டாகூர் ஸௌந்தர்ய அனுபவத்தாலேயே ஸாக்ஷாத்காரம் என்கிற அபிப்ராயத்தில் எழுதியிருக்கிறார். ஸத்-சித்-ஆனந்தம் என்கிறபோது ஸத்யத்தோடு அபின்னமாக (பிரிவில்லாமல்) ஞானமும் ஆனந்தமும் இருக்கிறாற் போலவே நல்லதும் அழகானதும் கூட ஸத்யத்தோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற தத்வங்களாகும் என்பதே டாகூர் அபிமானித்த ப்ரம்ம ஸமாஜிகளின் கொள்கை. அதனால்தான் அவர்கள் ஸத் - சித் - ஆனந்தம் என்கிற மாதிரியே ஸத்யம் - சிவம் - ஸுந்தரம் என்றும் சேர்த்துச் சொல்வது. ‘சிவம்’ என்றால் இங்கே ‘நல்லது’. ‘ஸுந்தரம்’ அழகு என்று எல்லாருக்கும் தெரியும். அதாவது பரப்ரஹ்ம தத்வத்திலேயே அங்கமாக இருப்பது அழகு என்று தாத்பர்யம். ஆனபடியால் அழகை சரியானபடி, பூர்ணமாக அனுபவிப்பதே ப்ரஹ்மாநுபவ ஆனந்தத்தைத் தரும் என்பது தாத்பர்யம்.
ஆனால் அந்த ‘சரியானபடி’ என்னவென்றே நம்மில் ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை. நம் மனஸை அப்படியே பூர்ணமாக அழகுக்குக் கொடுத்து அனுபவிக்க நமக்குத் தெரியவில்லை. அழகிலேயே ஈச்வரத்வத்தை அனுபவிக்கும் பக்குவம் நம் எல்லாருக்கும் ஸித்திக்கக் கூடியதில்லை. ஏதோ அழகாயிருக்கிறது என்று கொஞ்ச நாழி ரஸித்து ஸந்தோஷப்படுவதற்கு அதிகமாக அதை மோகேஷாபாய மான உபாஸனையாக ஆக்கிக் கொள்ள நம்மில் எல்லோராலும் முடியவில்லை.
நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும் படியாக ஒன்று இருந்தால் அது அழகு என்று அர்த்தம்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment