Search This Blog

Wednesday, May 01, 2013

உண்மையில் எது ஸ்மார்ட் போன்?

சச்சின் டெண்டுல்கர், லியோனல் மெஸ்ஸி போன்ற தலை சிறந்த விளையாட்டு வீரர்களின் டி-ஷர்ட் எண் 10. அதேபோல், போனிலும் மிகச் சிறந்த போன் Z10’ என்ற விளம்பரத்துடன் பிளாக்பெர்ரி, Z10 போனை வெளியிட்டது. ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை HH10  ஆப்ரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது பிளாக்பெர்ரி. ஸ்கிரீன் சைஸ் 4.2 இன்ச் என்பதால், ஆப்பிள் ஐ-போனைவிட பெரியது. ஆனால், சாம்ஸங் கேலக்ஸி எஸ்-3 போனைக் காட்டிலும் 0.6 இன்ச் சிறியது. 
 
எந்த ஸ்மார்ட் போன் ஆக இருந்தாலும், பவர்ஃபுல் பிராசஸர் இருந்தால்தான் வேகமாக இயங்கும். அந்த வகையில் பவர்ஃபுல் பிராசஸரைக் கொண்டுள்ளது பிளாக்பெர்ரி Z10. ஐ-போனில் 1.3GHZ பிராசஸர் மட்டுமே இருக்க, பிளாக்பெர்ரி மற்றும் சாம்ஸங் கேலக்ஸியில் 1.5GHz பிராசஸரும் இடம் பிடித்து இருக்கின்றன. ஆனால், சாம்ஸங் கேலக்ஸி, பிளாக்பெர்ரியைவிட பெரிய போன் என்பதால், வேகம் குறைவாகத்தான் இருக்கும்.

 

போனின் செயல்பாடுகள் பாதிக்காமல், நிறைய அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்வதற்கு பெரிய 'ரேம்’ இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையிலும் ஐ-போன்-5 பின்தங்கி விடுகிறது. ஐ-போனில் 1 ஜிபி ரேம் மட்டுமே இருக்க, பிளாக்பெர்ரி மற்றும் சாம்ஸங்கில் 2 ஜிபி ரேம் பொருத்தப்பட்டு உள்ளது.  

3 போன்களிலுமே பின் பக்கம் 8 மெகா பிக்ஸல் கேமரா. முன் பக்கம் பிளாக்பெர்ரி 2 மெகாபிக்ஸல் கேமரா கொண்டிருக்க... ஐபோன்-5, 1.9 மெகா பிக்ஸல் கேமராவும், சாம்ஸங் கேலக்ஸி 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொண்டுள்ளது. கேமரா குவாலிட்டியைப் பொறுத்தவரை, சாம்ஸங் கேலக்ஸியில் படங்களின் நிறம் ஒரிஜினலாக இல்லை. ஐ-போன் மற்றும் பிளாக்பெர்ரியின் கேமரா குறை சொல்லும்படி இல்லை.

பிளாக்பெர்ரியில் 32 ஜிபி வரைதான் மெமரி கார்டு ஆப்ஷன். ஆனால், ஆப்பிள் ஐபோன்-5 மற்றும் சாம்ஸங் கேலக்ஸில் 64 ஜிபி வரை மெமரி கார்டு வசதி உண்டு. ஐ-போன் மற்றும் சாம்ஸங் கேலக்ஸியில் 8 மணி நேரம்தான் பேட்டரி லைஃப். பிளாக்பெர்ரி 2 மணி நேரம் அதிகமாக, 10 மணி நேரம் பேட்டரி தாங்கும்.

அப்ளிகேஷன்களைப் பொறுத்தவரை ஆப்பிள் தான் டாப். 10 லட்சத்துக்கும் அதிகமான அப்ளிகேஷன்கள் இருப்பதால், எந்த அப்ளிகேஷனைத் தேடினாலும் ஆப்பிள் ஐட்யூன்ஸில் கிடைத்துவிடுகிறது. ஆனால், பிளாக்பெர்ரியில் அப்ளிகேஷன்கள் மிகவும் குறைவு. ஆண்ட்ராய்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட சாம்ஸங்கிலும் 7 லட்சம் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அப்ளிகேஷன்களைப் பொறுத்தவரை ஆப்பிள்தான் பெஸ்ட்.விலையைப் பொறுத்தவரை சாம்ஸங் கேலக்ஸி-3 தான் விலை குறைந்த போன். சென்னையில் 16 ஜிபி மெமரிகொண்ட சாம்ஸங் கேலக்ஸி எஸ்-3 மாடல் 30,950 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 16 ஜிபி மெமரி கொண்ட பிளாக்பெர்ரி Z10 போனின் விலை 43,490 ரூபாய். வழக்கம் போல ஆப்பிள் போனின் விலைதான் அதிகம். சென்னையில் இதன் விலை 45,500 ரூபாய்.

தீர்ப்பு

அப்ளிகேஷன் குறைபாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மூன்று போன்களில் பிளாக்பெர்ரி Z10 மாடல்தான் பெஸ்ட். ஆப்பிள், சாம்ஸங் போன்களைப் பயன்படுத்தி சலித்துவிட்டது என்பவர்களுக்கு மட்டும் அல்ல... உண்மையிலேயே தரமான, அதிக வசதிகள் கொண்ட போனாக இருக்கிறது பிளாக்பெர்ரி Z10. ஆனால், விரைவில் பிளாக்பெர்ரியை வீழ்த்த ஐ-போனில் புதிய மாடல் வரலாம்!

No comments:

Post a Comment