இது... கல்லூரி
நேரம்! பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அடுத்த கட்டமாக என்ன
மாதிரியான கல்லூரிப் படிப்பு வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன என்கிற
தேடலில் இருக்கிறார்கள்.
'பொதுவாக பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள் என்று தன்னைச் சுற்றி
இருப்பவர்கள் சொல்வதையே... எதிர்கால கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுப்பதற்கான
வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இவர்களின்
ஆலோசனைகளுடன், ஒரு மாணவனின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் இன்றுள்ள பலவகையான
படிப்புகளைப் பற்றிய அவன் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில்தான் தனக்கான
படிப்பை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் உயர்கல்வியில் பலவகையான மாற்றங்கள்
நடந்துகொண்டு இருக்கின்றன. மத்திய அரசாங்கம் எந்தெந்த துறைகளில் மனிதவளம்
குறைவாக இருக்கிறது என கண்காணித்து, அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு கவனம்
கொடுத்து வருகிறது. உதாரணமாக, சோஷியல் சயின்ஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட்,
ஹாஸ்பிட்டாலிட்டி, மேனேஜ்மென்ட், ஃபுட் புராஸஸிங் போன்ற அதிக கவனம்
கிடைக்காத, எண்ணற்ற துறைகளில், போட்டியில்லாத... செழிப்பான வேலைவாய்ப்புகள்
கொட்டிக்கிடக்கின்ற துறை சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.பள்ளித் தேர்வை முடித்ததோடு, கல்லூரியில் அட்மிஷனுக்காக காத்திருக்காமல்,
அகில இந்திய அளவில் பல கல்லூரிகளுக்கும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை
எழுதுவது அவசியம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு, கல்லூரி
சேர்க்கைக்காக, அகில இந்திய அளவில் கிட்டத்தட்ட 60 தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக்
கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறை
என நாட்டில் உள்ள தலைசிறந்த அரசுக் கல்லூரிகளுக்கான தேர்வுகள் இவை.
உதாரணமாக, JEE, AIEEE, BITSAT போன்ற அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி
சேர்க்கைக்காக நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எழுதலாம். எல்லா தேர்வுகளிலும்
இல்லை என்றாலும், அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியும் பயிற்சியும் ஏதாவது
ஒரு தேர்விலாவது நல்ல மதிப்பெண்களை கொண்டுவந்து சேர்க்கும். அதன்
அடிப்படையில் அட்மிஷன் பெறலாம்.அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு என்றவுடன், அது சிபிஎஸ்இ,
ஐசிஎஸ்இ சிலபஸில் படித்த மாணவர்களுக்குதான் சுலபமாக இருக்கும் என, மாநில
பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தயங்கத் தேவையில்லை. தேர்வுக்குத் தேவையான
விஷயங்களை மட்டும் கேள்வி - பதில் வடிவத்தில் படிக்கும் பழக்கத்தை மறந்து,
பாடங்களை முழுக்கவும் படிக்கப் பழகினாலே... நுழைவுத்தேர்வு சுலபமாகிவிடும்.
அகில இந்திய அளவிலான கல்லூரிகளில் சேர்வதற்கு... நுழைவுத்தேர்வுடன்,
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே
போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்
850 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற ஒரு மாணவி, அகில இந்திய பிரீ மெடிக்கல்
தேர்வில், நுழைவுத்தேர்வு வாயிலாக 150-வது ரேங்கில் வெற்றிபெற்று, இன்று
சென்னை, அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அகில
இந்திய அளவில் நுழைவுத்தேர்வு எழுதியதால்தான், அவருக்கு இந்த வாய்ப்புக்
கிடைத்துள்ளது.''14 அரசு சட்டக் கல்லூரிகள் மத்திய அரசு நிர்வாகத்தில் இயங்குகின்றன.
இங்கு படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்புகள் ஏராளம். டாக்டர் அம்பேத்கர்
பல்கலைக்கழகத்தில் சட்டம், அதேநேரத்தில் 'ஐசிஎஸ்ஐ'யில் கம்பெனி
செக்ரெட்டரிஷிப் இரண்டையும் ஒன்றாக முடித்து வெளியில் வரும்போது,
நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துக் கொள்வார்கள்.மும்பையில் உள்ள 'டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’-ல்
படிப்பவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் சமூகநலத் துறையில்
காத்திருக்கின்றன வேலைவாய்ப்புகள். பி.காம், பி.பி.ஏ போன்ற
படிப்புகளுக்கும் எதிர்காலம் விரிந்திருக்கிறது.
கல்வி ஆலோசகர் மற்றும் சமூக ஆர்வலர், நெடுஞ்செழியன்.
http://divyinsurance.webs.com/
ReplyDeleteஐநா சபையில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தூதரகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், நாட்டிற்கே நிதி மேலாண்மை செய்யும் நிதி அமைச்சகத்தில் வேலை செய்பவர் என்ன படித்திருப்பார், தொல்லியல் துறையில் உள்ளவர் என்ன படித்திருப்பார், வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிபவர் என்ன படித்திருப்பார், தடயவியல் துறைக்கு என்ன படிக்க வேண்டும்? வானொலி/தொலைகாட்சி நிலையங்களில் பணியாற்ற என்ன படித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் சட்டம் படித்திருக்க வேண்டுமா? மருத்துவமனையில் பணிசெய்பவர்கள் அனைவரும் மருத்துவம் படித்திருக்க வேண்டுமா?இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை எழுப்பாமல் குருட்டுத் தனமாக அனைவரும் விரும்பும் ஒரு படிப்பை சுயவிருப்பம் இல்லாமல், படித்து முடித்தபின் என்ன வாய்ப்புகள், விளைவுகள் என்று எண்ணாமல் முடிவு எடுக்கக் கூடாது.
ReplyDeletehttp://vaidheeswaran-rightclick.blogspot.in/2012/11/blog-post.html
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...
அன்பின் மழைக் காகிதம் - நெடுஞ்செழியன் - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - என்ன படிக்கலாம் என்பதனைப் பற்றிய ஒரு அருமையான் பதிவு. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன்.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeletehttp://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_18.html