Search This Blog

Thursday, September 23, 2010

சிலி சோகம் 33 பேரும் உயிரோடுதான் இருக்கிறோம்!

தற்செயலாக இந்த செய்தி இப்பொழுதான் என் நண்பனின் மூலம் கிடைத்தது. இது சென்ற வரம் எதோ ஒரு வார இதழில் வெளிவந்தது என்று தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான 'சிலி'யில் இருக்கிறது 'கோப்பியாப்போ' எனும் நகரம். அங்கே ஒரு செப்பு சுரங்கத்தில், பூமிக்கு அடியில் சுமார் முக்கால் கி.மீ. ஆழத்தில் கடந்த ஆறு வாரங்களாக 33 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்!

 
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு இந்த சுரங்கத்தின் ஒரு பகுதி
பெருத்த சத்தத்தோடு திடீர் என்று சரிய... சுரங்கத்துக்குள் பெரிய பாறைகளும் கற்களும் விழுந்தன. அதனுள் வேலைபார்த்துவந்த 33 தொழிலாளர்கள் வெளியே தப்பி ஓடி வர முயற்சித்தார்கள்.முடியவில்லை.. 

சிக்கியவர்களை மீட்டுவிடும் அவசரத்தில் மீட்புக் குழு ஒரு கனரக வாகனத்துடன் அதிபயங்கர அவசரத்தில் செயல்பட... மிச்சம் இருந்த பாறைகளும் சரிந்துவிழுந்து, காற்றோட்டத்துக்காக வைத்திருந்த வென்ட்டிலேட்டர் பாதை முழுதும் அடைபட்டது.
'பூமிக்கு அடியில் பல கி.மீ. நீளும் சுரங்கத்தில் 33 தொழிலாளர்களும் எந்த இடத்தில் சிக்கி உள்ளனர்' என்பது பிடிபடாமல், மீட்புப் படை திணறியது. இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க, திராட்சைப் பழ விட்டத்துக்கு சுரங்கத்தின் மேலே துவாரம் போட்டு, 'பிரோப்' என்ற கருவியைப் பல நூறு மீட்டர்கள் ஆழத்துக்கு அனுப்பினர். (நம் குடலுக்குள் அல்சர் இருக்கும் இடத்தைக் கண்டறிய அனுப்பும் 'எண்டோஸ்கோப்பி' மாதிரியான ஒரு முறை இது). எந்த பலனும் இல்லை. 'அனைவரும் உயிரோடு சமாதி' என்றே முடிவுக்கு வந்தனர். அடுத்தடுத்த முயற்சியில் நல்ல தகவல் கிடைத்தது.. '33 பேரும் உயிரோடுதான் இருக்கிறோம்!' என்று 'பிரோப்' மூலம் ஒரு துண்டு சீட்டு வந்தது. 

அதைத் தொடர்ந்து, தரையில் இருந்து ஒரு சைக்கிள் சக்கரத்தின் விட்டத்துக்கு முக்கால் கி.மீ. ஆழம் ஓட்டை போட்டுச் சென்று மீட்க முடிவானது. ஆஸ்திரேலிய அதிநவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு, வேலைகள் தொடங்கின. ஆனால், இது நாள் முழுதும் வேலை செய்தாலும் வெறும் ஆறு மீட்டர்கள் மட்டுமே துளை போடும். இது போடும் துளையால், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தில் மணிக்கு அரை டன் பாறைகளும் கற்களும் வீழ்ந்துகொண்டே இருக்கும். இதை எல்லாம் சுரங்கத்தில் சிக்கியவர்கள், அதன் வேறு ஒரு மூலைக்குக் கொண்டுபோய் கொட்டிக்கொண்டே இருக்கவேண்டும். நடுவே எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்காது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. 

இதற்கிடையில், உணவு, மருந்து-மாத்திரைகளை அனுப்ப இன்னொரு 'பிரோப்' பயன்படுத்தப் படுகிறது. இது கீழே செல்ல, ஒரு மணி நேரம் பிடிக்கும். இதேரீதியில் போனால், அவர்களை மீட்க, மூன்று மாதங்கள் தேவைப்படும். ''வெளிச்சம், போதுமான அளவுக்குக் காற்று, வெளியுலகத் தொடர்பு என்று எதுவுமே இல்லாமல் இவர்கள், இருக்கிறார்கள். அவர்களின் மனோதிடமும் ஒற்றுமையும் பிரமிக்க வைக்கிறது, அது அவர்களை நிச்சயம் காப்பாற்றியே தீரும்...'' என்கின்றனர் நம்பிக்கையாக.

இதற்கிடையில், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறக்க... இதை 'பிரோப்' மூலம் அவருக்குத் தெரிவித்தனர். துயரத்திலும் நம்பிக்கை ஒளியாக வந்த இந்தச் செய்தியில் உருகிய அவர், தன் குழந்தைக்கு 'எஸ்பரன்ஸா' என்று பெயரிடும்படி கேட்டுக் கொண்டார். அந்த ஸ்பானிஷ் சொல்லுக்குப் பொருள்... 'நம்பிக்கை'!


No comments:

Post a Comment