Search This Blog

Sunday, September 12, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - “நண்பேண்டா”

எனக்கு என்னத்த எழுதுரனே தெரில. ஏன்  என்றால் எதுவுமே ஞாபகத்தில் இல்லை. படம் அந்த மாதரி வேகமா போகிறது. இடைவேளைக்கு அப்புறம் ஒரு சின்ன தொய்வு இருந்தாலும் படம் முடிகையில் கை தட்டி சிரிச்சு மகிழ்தேன்.

உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட் " வெளியீடு. சிவா மனசுல சக்தி என்கிற ஒரு  நல்ல படத்தை  எடுத்த எம்.ராஜேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரித்தவர் ஆர்யானு நினைக்குறேன். படத்தின் டிரைலரிலேயே கொஞ்சம் எதிர்பார்ப்பை எகிற விதம் படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

படத்தோட ஆரம்பத்துல ஆர்யா அரிவால எடுத்துகிட்டு வில்லன தொறத்துவார். அதுக்கு கடைசில ஏன்னு காமிச்சு இருப்பாங்க. சான்சே இல்ல.  

ஆர்யா, நிறைய அரியர்கள் வைத்திருக்கும், வேலைவெட்டியில்லாத, இளைஞன். கல்யாணமாகாத வெட்டினரி டாக்டரான 35 வயது அண்ணன், காம்பியரர் மாடுலேஷனில் பேசி அலையும் தங்கை, மற்றும் அவரின் அம்மா என்கிற மிடில் கிளாஸ் குடும்பம. அவரின் நண்பன் சந்தானம், சலூன் கடை வைத்திருப்பவர். இவருக்கு பார்த்த மாத்திரத்தில் காலேஜ் லெக்சரரான நயன் மேல் காதல் வேறு வந்து தொலைத்துவிடுகிறது.  அவருடைய அண்ணனுக்கும் விஜயலட்சுமிக்கும் கல்யாணம் நடக்கிறது. விஜியின் தங்கை நயன்தாரா, ஏற்கனவே இரண்டு பேருக்கும் நல்ல அறிமுகம்.அண்ணியிடம் பெண் கேட்க சொல்லும் போது, அண்ணி ஒண்ணுமில்லாத வெட்டிபயலுக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது, தன் தங்கை கல்யாணத்தையும்,  தன் காதலையும் ஜெயித்து காட்டிவிட்டுதான் வீட்டிற்கு வருவேன் என்று சவால் விட்டுவிட்டு வெளியேறுகிறார். அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே பாஸ் என்கிற பாஸ்கரன் திரைபடத்தின் கதை சுருக்கம்.

சந்தானம் தான் படத்தை தூக்கி நிறுத்துவது. சந்தானத்தின் ஒவ்வொரு வார்த்தை மற்றும் அவரின் குரல், முக பாவனையை பார்த்தல் ஒரே  சிரிப்பு சிரிப்பா வருகிறது  .  ஆர்யாவை அனைவரும் கிடைக்குற ரீல் முழுவதும் ஒட்டு ஒட்டு என ஒட்டி எடுகிறார்கள் . சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் வந்த மாதிரி, இந்த படத்தில் ஜீவா வருகிறார், கடைசி பத்து நிமிடங்களுக்கு. ஆனால், ஜீவா சூப்பரா பண்ணி இருக்காரு. அதவும் ஒரு சண்டைக்கு தேவையான பில்ட் பண்ணி அதை வேறு விதமா இயக்குனர் கையாண்டு இருக்கிறாரு. அதிலும் அவரே போன் பண்ணி நீ சிறப்பு பாத்திரம் சும்மா சண்டை எல்லாம் போடா கூடாது. அவுங்கள சேர்த்து வையுன்னு சொல்லுற இடம் மிக அருமை.

பரீட்சைக்கு பிட் எழுதுவதும் அந்த பிட்டுக்கெல்லாம் ஒரு மாஸ்டர் டாகுமென்ட் எழுதுவதும் நயனிடம் மாட்டிக் கொள்வதும் என ஆரம்பத்தில் இருந்தே படம் டாப் கியரில் கிளம்புகிறது.நயன் pardon என்று சொல்வதை சந்தானம் அவர் பாடேன் என்ற அர்த்தத்தில் சொல்லுவதாக ஆர்யாவிடம் சொல்ல ஆர்யாவும் அதை நம்பி நயன் அடுத்த முறை pardon என்று சொல்லும்போது ஆர்யா ' தீப்பிடிக்க' பாடலைப் பாடும் இடம் செம ரகளை.

எக்சாம் ஹாலில் ஒரு வயதான நபர் ஆர்யாவிடம் “பாஸ் பண்ணி தொலைச்சிடாதீங்க, தனி மரம் ஆகிடுவேன்,என்பதும் வினாத்தாளை கொத்தாகக்கொடுத்து லெக்சரர் நயன் “பாஸ் பண்ணுங்க” என்றதும் ,”டிரை பண்றேன் மேடம் எனும்போது டைரக்டர் திரைக்கதை வெளி படுகிறது . 

ஆர்யா நடிப்பில் அசத்துகிறார். காமெடியும் இயல்பாய் வருகிறது.ஹீரோயின் நயன்தாரா க்ளோஸ் ஷொட்ல வயதான மாதரி தெரியுது . தலதளபதி" சந்தானம் சொல்லவே இல்ல. படம் முழுக்க நக்கல் பண்ணி சிரிப்பு உண்டு பண்ணி  இருக்காரு. இசை யுவன். "யார் அந்த பெண் தான்" பாட்டு மற்றும் பின்னணி ஓசை ஓகே.



என்னக்கு  நினைவில் உள்ள சில நல்ல காமெடி காட்சிகள் :

 மேடம் ,24 மணி நேரமும் செல்ஃபோன்ல ஃப்ரீயா பேசனும்,அதுக்கு என்ன ஸ்கீம் இருக்கு?
24 மணி நேரமுமா?அதுக்கு நேர்லயே போய் பேசிக்கலாமே? 

அலைபாயுதே மாதவன் மாடுலேஷன்ல பேசச்சொன்னா உன்னை யார் அரண்மனைக்கிளி ராஜ்கிரண் மாதிரி பேசச்சொன்னது? 

மார்க்கட்டிங்க் வேலைக்கு போறியா? அது நாய் பொழைப்புடா மச்சான்.பிழைப்பே இல்லாம தண்டமா இருக்கறதுக்கு நாய்ப்பிழைப்பு எவ்வளவோ மேல்.

கமல், ரஜினி, பரத் எல்லோர் திரை படத்தின் காட்சிகளை தேவை உள்ள இடத்தில நன்றாக பயன்படுத்தி, அதனை திரைகதையில் நல்ல சாமர்த்தியத்தில் கொண்டு வந்து உள்ளார் ராஜேஷ்.

நண்பர்களே, சிவா மனசுல சக்தி பிடிச்சவங்களுக்கு இந்த படமும் பிடிக்கும். லாஜிக், அது இதுன்னு யார் யோசித்தாலும் இந்த படத்தை பார்க்க வேண்டாம்.  எந்த ஒரு ஆபாசம், வன்முறை இல்லாத நல்ல படம்.




2 comments:

  1. படம் முழுவதும் மொக்கை ,காசு கொடுத்து
    சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி

    ReplyDelete
  2. Siva Manasula sakthi nra mokka padatha direct pannavarunra kaaranathunaalaye naa intha padaththa innum paakaama irukken

    ReplyDelete