Search This Blog

Monday, September 13, 2010

எந்திரன் - ஒரு அலசல்

இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடு கோலாகலமாக நடந்து விட்டது. அப்படத்தின் ட்ரெய்லர் நம்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டதா!!!

தியேட்டர்களில் வெடி வெடித்துக்கொண்டிருந்ததையும், ரஜினிக்கு ப்ளெக்ஸ் பேனரில் பால் ஊத்திக்கொண்டிருந்ததையும், சன் டிவியின் உழியர்கள்அனைவரும் அனைவரையும் வற்புறுத்தி படத்தை பற்றி பேச வைப்பதை பார்த்தேன். அனைவரும் யாரையும் பகைத்து கொள்ள விரும்பாமல்  மிகவும் பாராட்டி விட்டு சென்றார்கள்.. ( ஒரு வேலை ஆள் வைத்து எழுதி குடுத்து படிக்கச் சொல்லி இருப்பார்கள் என் ஐய படுகிறேன்..)

கர்நாடகாவில் கிட்டத்தட்ட பத்துக்கோடிக்கும், ஆந்திராவில் 33 கோடிக்கும் மற்றும் மதுரை ஏரியாவை சுமார் பதிமுனு கோடிக்கும் படத்தை விற்றதாக செய்திகள் வந்திருந்தன. கண்டிப்பாக டிக்கெட் விலை சுமார் இருநூறில் இருந்து ஆயிரம் வரை விற்க படும். நம் மக்களும் தலைவர் படம், ஷங்கர் படம் என்று சொல்லி கொண்டு பார்க்க போகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்! ஒரு சிறு அல்ப சந்தோசம் நானும் முதல் நாள் பார்த்து விட்டேன் என்று...

அபிராமி ராமநாதன் சொன்னார் சென்னையில் மற்றும் சுமார் 30 நல்ல தியேட்டரில் படம் வெளியாக உள்ளது. இதில் நான் திருவான்மியூர், அம்பத்தூர் போன்ற ஏரியா சேர்க்க வில்லை. ஒரு நாளைக்கு சுமார் இருபது ஆயிரம் பேர் படத்தை  பார்ப்பார்கள். சென்னை மொத்தம் ஒரு கோடி பேர் இருபதாக அவர் சொன்னார். ஆனால், இதில் எத்தனை பேர் 120 ருபாய் குடுத்து படம் பார்ப்பார்கள் என தெரியவில்லை..

சரி  ட்ரெய்லர்க்கு வருவோம்..

தொழில் நுட்பம், பிரமாண்டம்,  உலக அழகி மற்றும் மேக்கப்புகளில் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி ரொம்ப அழகா இருக்கிறார் .ஆனால் இது போல ஒரு மொக்க ட்ரெய்லர் ஷங்கரிடம் இருந்து எதிர்பார்கவில்லை. இது முழுக்க முழுக்க என் தனிப்பட கருத்து. ட்ரெய்லர் பார்த்த அனைவரும் இது சில பல ஆங்கில படத்தின் காட்சி   தழுவல் என சொன்னார்கள்.. இருந்துட்டு போகட்டுமே, ரஜினி என்ற காந்த சக்தியால் இந்த படம் போட்ட பணத்தை விட லாபம் கொழிக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஒரு நடு நிலை ரசிகனுக்கு தேவையான எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லர் பூர்த்தி செய்ததால் என்றால் இல்லை என்றே பதில்..  இந்த  ட்ரெய்லர் பார்த்து என் நண்பன் ராஜீவ் கைதட்டி சிரித்து கொண்டு இருந்தார் நேற்று இரவு சுமார் 11 .30 க்கு.. ரொம்ப நல்லா வந்தற்காக இல்லை என்பதை இங்கே தெரிவித்து கொள்ள விரும்பிகிறேன்.

எனக்கு  ரஜினி பிடிக்கும். அவர் நடித்த பாபா திரைபடத்தை நான் ஈரோடு அபிராமியில் முதல் நாள்  பார்த்து நொந்து வெந்து பொய் ஒரு வருடமும் எந்த தமிழ் படமும் பார்க்காமல் இருந்தேன். ஏன் இவ்வாறு நடந்தது என்றால், அந்த பாபா படத்திற்கு அவுங்க குடுத்த விளம்பரம். இப்பொழுது சன் குரூப் அதே போல் தான் விஷ பரிட்சையை நடத்தி கொண்டு இருக்கிறது. இதெல்லாம் ரஜினிக்கு தெரியாமல் இருக்குமா, இல்லை வழக்கம் போல் தெரிந்தும் பேசாமல் இருப்பாரோ?  ஒரு காலத்தில் மிக சொற்ப  படத்தை மட்டுமே பார்த்த நான் இன்று அனைத்து மொக்கை படத்தையும் பார்கிறேன்..

என் ஆதங்கம்   இவ்வளவு பெரிய புகழ், பணம் சேர்ந்த பின்னாடியும் நடிப்புக்கு தீனி போடற படங்களை செய்யாம என் இது போல நடிக்க ஓகே சொல்லுரருனு தெரில..அவர் சொன்னது போல், நான் எந்த படத்திலும் நடிக்க ரெடி ஆனால்  யோசித்து கதை எழுதி சொல்லுங்க.. நான் எந்த அளவுக்கு முடியுமோ அவ்வளவு சிறப்பாக நடித்து கொடுக்கிறேன்.. எல்லோரையும் எல்லா விசயத்திலும் திருப்தி படுத்த முடியாது.  என நம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...ஒத்துகொள்கிறேன் ...

இன்னும் இரண்டு வாரத்தில் படம் வந்து விடும்.. பார்க்கலாம் எப்படி இருக்கிறது என்று...

3 comments:

 1. appadiya youtube trailer link kodutha nalla irukkumm...manoj

  ReplyDelete
 2. enthiran is nothing but a mixer of all part of terminator. when you compare all the films of shanker it might not had a good story and screen play. He used rahman for three to four hit songs and decorate streets and lorry with producer's money. use kandravy graphics that is all. in between some stories some fights and sexual dialogues. he knows how to play with others money.
  i respect his film company not his films.

  ReplyDelete
 3. @ Manoj,

  Machi Don't know how to add links in Blog.. Also, Now things r moving hectic here m not able to get time to write big blog stories..

  @ S.T

  100% correct sir.. Yesterday in television prog Rajini told in a Democratic Country media should be more Power ful.. Now a days People watching all kind of movies ( Holl, Bolly, tolly & so-on). Lets see sir, with out Sujatha how this Robot dialogues Came..

  ReplyDelete