Search This Blog

Monday, September 20, 2010

இரண்டு முகம், சிந்து சமவெளி - பட விமர்சனம்

இரண்டு முகம்- பட விமர்சனம்

ஊமை விழிகள், உழவன் மகன் என்கிற இரண்டு நல்லா திரைபடத்தை இயக்கிய அரவிந்த ராஜ் நீட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் திரைப்படம் இரண்டு முகம்.
 



சமையல்காரர் மகன் கரண். அரசியலில் குதித்து மந்திரியாக கனவு காண்கிறார். ஒரு அரசியல் நிகழ்சியில் அவர் பல குரலில் அவர் பேச அதனை பார்த்து அவருக்கு ஒரு பதவி தர, அதன் மூலம் அவர் இளை‌ஞரணி‌ செ‌யலா‌ளரா‌க செ‌ல்‌வா‌க்‌கு அடை‌யு‌ம்‌ கரண்‌, நா‌சரி‌ன்‌ ஆசி‌யை‌யு‌ம்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ண்‌டு கட்‌சி‌ வே‌லை‌யை‌ தி‌றம்‌பட செ‌ய்‌கி‌றா‌ர்‌. அரவி‌ந்‌தரா‌ஜை‌ கூலி‌ படை‌யை‌ வை‌த்‌து கொ‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ நா‌சர்‌, இடை‌த்‌ தே‌ர்‌தலி‌ல்‌ அவரே‌ நி‌ற்‌க முயல்‌கி‌றா‌ர்‌. ஆனா‌ல்‌ அவருக்‌கு பதி‌ல்‌ வே‌றுயா‌ருக்‌கா‌வது சீ‌ட்‌‌ கொ‌டுக்‌க முடி‌வு‌ செ‌ய்‌கி‌றது தலை‌மை‌. அதனா‌ல்‌ தன்‌ பே‌ச்‌சை‌ கே‌ட்‌கும்‌ கரணை‌ தே‌ர்‌தலி‌ல்‌ நி‌ற்‌க வை‌த்‌து, வெ‌ற்‌றி‌ பெ‌ற வை‌த்‌து, மந்‌தி‌ரி‌ பதவி‌யு‌ம்‌ பெ‌றுகி‌றா‌ர்‌ நா‌சர்‌. நாசரின் பேச்சை கேட்டு எதனையும் யோசிக்காமல் கையெழுத்து போட்டு ஊழல் செய்கிறார்கள்.

இதைப் பார்த்து மனம் பொறுக்காத சத்யராஜ், அவரை நேர்மையான வழிக்குக் கொண்டுவர ஒரு பொய் சொல்லி அதாவது கரனின் உயிருக்கு ஆபத்து என்றும், இதனால் கரன் தான் சாவதற்கு முன்பு சில நல்லா விசயங்களை மக்களுக்கு செய்வதாக சொல்லி திருந்த முயற்சி பண்ணுவதும், இதனால் நாசர் கோபம் கொண்டு அரசை கவிழ்க்க முயல்வதும், கடைசியில் நடந்தது என்ன என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
 

ஏமா‌ற்‌று அரசி‌யல்‌ வா‌தி‌ வே‌டத்‌தி‌ல்‌ பல அரசி‌யல்‌வா‌தி‌களை‌ ஞா‌பகப்‌படுத்‌துகி‌றா‌ர்‌ நா‌சர்‌.
எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ சி‌ரி‌க்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌. அவர்‌ பே‌சும்‌ போ‌தெ‌ல்‌லா‌ம்‌ மாடு பத்தி பேசுவது கலக்கள்..
 


போ‌லி‌ அரசி‌யல்‌வா‌தி‌களை‌ பு‌ரட்‌டி‌ எடுக்‌கும்‌ பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ சத்‌யரா‌ஜ்‌. சும்மா புகுந்து விளையாடி இருக்காரு.. சுருக்கமா சொன்ன, தற்பொழுது இருக்கும் அரசியல் வாதி இவர் பேசிய வாசனைகளை கேட்டல் மனம் உள்ளவர்களாக இருந்தால் தூக்கில் தொங்க வேண்டும் .

அந்‌நி‌ய நா‌ட்‌டு வி‌தை‌களா‌ல்‌ ஆபத்‌தும்‌  இருக்‌கி‌றது என்‌ற அழுத்‌தமா‌ன கதை‌யை‌ சொ‌ல்‌ல வந்‌த இயக்‌குநர்‌ அரவி‌ந்‌தரா‌ஜ்‌, தி‌ரை‌க்‌கதை‌யி‌ல்‌ சுவரா‌ஸ்‌யமா‌ன கா‌ட்‌சி‌களை‌ சொ‌ல்‌லா‌மல்‌ வி‌ட்‌டுவி‌ட்‌டா‌ர்‌. எல்லா விசயத்தையும் மேலோட்டமாக சொல்லி சறுக்கி இருக்கிறார் .


சிந்து சமவெளி - பட விமர்சனம்
 

இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுவதா வேண்டாமா என்று ரொம்ப நாள் யோசித்து சரி எழுதலாம் என்று நினைத்தேன் இன்று. நல்ல கதை, மற்றும் நல்ல படத்தை மட்டுமே பார்பேன் என சொல்ல்பவர்கள் அடுத்து வரும்  புகைபடத்தை பார்த்து இதற்க்கு மேல் படிக்காமல் செல்லவும்.
 
 
உயிர்,  மிருகம் என இரண்டு அதிரடி திரை படத்தை தந்த மிரட்டல் இயக்குனர் சாமியின் முன்றாவது திரை காவியம் சிந்து சமவெளி. இவர் இயக்கம் படம் வந்த உடன் அந்த படத்தின் மீது சர்ச்சையும் சேர்த்து வந்து அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ந்து விடும். இந்த படத்தில் நடந்தது அதுவே..
 
பொதுவாகவே நடக்கும் கள்ள உறவை பற்றிய கதை களம். ராணுவத்தில் வேலைபார்க்கும் கணவன். கிராமத்தில் அடக்கமான ஆசிரியை. ப்ளஸ் டூவில் முதல் மாணவனாக வரும்அவர்களின் பையன். அந்த ஸ்கூலில் படிக்கும் சக வகுப்பு தோழி யை காதலிக்கும் பையன். ஒரு சிறு விபத்தில் அவனின் தந்தை சொந்த ஊர்க்கு விருப்ப ஒய்வு வங்கி கொண்டு வருகிறார். அந்த சமயத்தில் அவனின் தாய் பாம்பு கடித்து இறந்து போகிறார். இந்த சமயத்தில் அவனின் தந்தைக்கு கலீல் அடிபட்டு போகிறது. குடும்பத்தை கவனிக்க ஒரு பொண்ணு வேணும் என்று தான் மகனுக்கு அவன் விரும்பிய பொன்னை திருமணம் செய்து வைக்கிறார். அன்னையின் விருப்பம் போல் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்கிறார். 
 
அவனுடைய இளம் மனைவி வீட்டில் மாமனாருடன் தனித்து இருக்கிறாள். சில சூழ்நிலைகளும்,குடித்த மயக்கமும் அவர்களை நெருக்கமாக்குகின்றன. முதலில் போதை தெளிந்ததும் வருந்துகிறார் மாமனார்.  இதன் பிறகு நடக்கும் விஷயங்கள் அத விட அதிர்ச்சி. மருமகளே ஒரு கட்டத்தின் மாமனாருடன் உறவு கொள்ள, ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ மகன் திரும்பும் போது அவனுக்கு சந்தேகம் வருகிறது.  பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.
 
தினமும் தினசரிகளில் நாம் பார்க்கிற  முறை தவறுகிற உறவுகளை பற்றியும் நாம் படிக்கும், நடக்கும் விஷயங்களை தான். ஆனால், அதை சொன்ன விதம் தான் சரி இல்லை.


எங்கோ -எப்போதோ இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்திருக்கலாம். ஏற்கனவே ஜெயகாந்தனின் - சிலநேரங்களில் சில மனிதர்களில் வரும் கதாநாயகி இதே மாதிரி விபத்து மாதிரி நடக்கும் பாலியல் அனுபவத்தை எதிர்ப்பின்றி ஏற்கிறாள் என்பதை அன்றே குறினார். அதனை திரையில் பார்க்கும் போது மனது பதறுகிறது.

வட இந்தியாவிலும் இது போன்ற படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் நம் மக்கள் இங்கு இதனை ஒத்து கொள்ள மாட்டார்கள்..இவர்கள் செய்யும் சர்சையே படத்தை வெற்றி பெற உதவுகிறது.

No comments:

Post a Comment