Search This Blog

Thursday, September 16, 2010

"ஜெயலலிதா விஜயகாந்த் கூட்டணி அமையலாம்!" - சோவுடன் ஒரு சந்திப்பு...

விகடனில் வந்த சோ அவர்களின் பேட்டி

"2011 தமிழக சட்டசபைத் தேர்தலின் 'நிர்ணய சக்தி'களாக எவை இருக்கும்?"
 
"ஆளும் தி.மு.க. அரசின் மீதான அதிருப்திதான் மிக முக்கியக் காரணியாக இருக்கும். அபாரமாக அதிகரித்திருக்கும் விலைவாசி ஒரு காரணம். இதற்கு மத்திய அரசு மட்டுமே முழுக் காரணம் என்று பழி போட்டு மாநில அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துத் தப்பிவிட முடியாது. மத்திய அரசில் பல பதவிகள், பொறுப்புகளைக் கேட்டுப் பெற்ற தி.மு.க. அரசுக்கு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளிலும் அதே ஆர்வத்தைக் காட்ட வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. விலைவாசியைத் தவிர்த்துப் பார்த்தால், கலைஞர் குடும்பத்தினரின் ஆதிக்கம், அனைத்துத் தரப்பிலும் மிகப் பரவலான அதிருப்தியைவிளைவித்து இருக்கிறது. 

திரைப்படத் துறையை முழுக்கவே ஜீரணம் செய்தாகிவிட்டது. ரியல் எஸ்டேட் பாதி விழுங்கப்பட்டு விட்டது. சேட்டிலைட் சேனல், கேபிள் டி.வி-க்கள்பற்றிச் சொல்லவே வேண்டாம். 'எங்கெங்கு காணினும்வாரிசு களடா!' என்ற நிலையால், மக்கள் எரிச்சலில் இருக் கிறார்கள். தவிர, மாநிலத்தின் பெரிய பிரச்னைகள் எதையும் இந்த அரசு தீர்த்ததாகத் தெரியவில்லை. இலவசங்களைத் தங்கள் சாதனைகள் என்று இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ள முடியாது. 

குஜராத் தேர்தலில் என்ன நடந்தது? தி.மு.க. பாணியில் காங்கிரஸ் 'சகலமும் இலவசம்' என்று அறிவித்தது. ஆனால், நரேந்திர மோடி, 'மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்களிடம் நான் கண்டிப்புடன் அதை வசூலிப்பேன்' என்று சொன்னார். அவர்தான் வென்றார். அங்கு மட்டும்தான் மக்களிடம் தெளிவு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே நிலை இங்கும் வந்தால் நிச்சயம் தி.மு.க-வின் நிலை திண்டாட்டம்தான். ஆனால், கூட்டணிக் கணக்குகள் எத்தகைய நிலையிலும் மாற்றத்தை உண்டாக்கலாம்... பார்ப்போம்!" 


 'ஆறாவது முறையாகவும் கலைஞர்தான் முதல்வர்' என்ற ஸ்டாலினின் பேச்சு..."
(கேள்வியை முடிக்கும் முன்னரே, குறுக்கிடுகிறார்) "இது உங்களுக்காகவோ, எனக்காகவோ ஸ்டாலின் சொல்லவில்லை. இது அழகிரிக்காக அவர் சொல்லிஇருக்கிற விஷயம். இதில் நாம் அநாவசியமாகத் தலையிடக் கூடாது. இது குடும்ப சமாசாரம்! மாநிலமோ, கட்சியோ சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல! அழகிரிக்கு அவர் ஓர் உத்தரவாதம் தந்திருக்கிறார். அவ்வளவுதான். இது கட்சி நிர்வாக எல்லைக்குள்கூட வராது. இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்புவதும் நான் பதில் சொல்வதும் அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கும்!" 

"அ.தி.மு.க - தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுமா?" 

"வாய்ப்புகள் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், அ.தி.மு.க-வுக்கு உடனடித் தேவை ஒரு நல்ல கூட்டணித் தோழன். தனித்தனியாக நின்றால், அ.தி.மு.க-வுக்கு தி.மு.க-வைவிட அதிக வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், தி.மு.க. வலுவான கூட்டணியுடன் தேர்தல் களம் காணும். ஆகவே, அதுபோன்ற வலுவான ஒரு கூட்டணி அ.தி.மு.க-வுக்கும் வேண்டும். விஜயகாந்த்தைப் பொறுத்தவரை தே.மு.தி.க. வேட்பாளர் கள் கடந்த தேர்தல்களில் பற்பல இடங்களில் டெபாசிட்டை இழந்தனர். திடீர் வளர்ச்சி காண்பதற் கான வாய்ப்பும் அவர்கள் கட்சிக்கு இல்லை. இந்தச் சூழலை விஜயகாந்த்தும் உணர்ந்தே இருப்பார். இரு தரப்பினரின் இந்த தேவையைக் கருத்தில்கொண்டால், அவர்களுக்கு இடையில் ஒரு கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இருக் கிறது!" 

"கோவை, திருச்சி எனச் செல்லும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதாவே எதிர்பார்க்காத கூட்டம் அலைமோதுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?"

"அப்படிப் பிரமாண்டமாகக் கூடும் கூட்டங்களினால் சில பலன்கள் நிச்சயம். முதல் பலன், அ.தி.மு.க. முகாமுக்குத் தெம்பு உண்டாகி இருக் கும். நம்பிக்கை அதிகரித்திருக்கும். இரண்டாவது பலன், கூட்டணிக்கு வர நினைக்கும் கட்சிகளும் 'அ.தி.மு.க-வுக்கும் வாய்ப்பு இருக்கிறது!' என்று நம்பத் தொடங்கும். மூன்றாவது பலன், காங்கிரஸே கூட 'நாம் இருக்கும் இடம் சரிதானா?' என்று கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்திருக்கும். மிக முக்கியமாக, அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கும் சாதாரண மக்கள் உற்சாகமாவார்கள். ஆனால், ஒரு கூட்டத்தை மட்டும் பார்த்து அவை அனைத்தும் வாக்குகளாகக் குவியும் என்று தீர்மானித்துவிட முடியாது!" 

"மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமை தாங்கத் தயார் என்று தானாக அறிவித்திருக்கிறாரே ராமதாஸ்..." 

"ராமதாஸ் அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் அரசியல் அனுபவம் அதிகம் உள்ளவர். இரண்டு கழகங்களுள் நிச்சயம் ஏதேனும் ஒன்றின் பக்கம்தான் சாய்வார். மூன்றாவது அணி என்ற விஷப் பரீட்சையில் அவர் இறங்க மாட்டார். பா.ம.க-வுக்கு எனக் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வலுவான வாக்கு வங்கி இருக்கத்தான் செய்கிறது என்று கழகங்களுக்கும் தெரியும். எப்போதும் தன் கட்சியின் செல்வாக்கைக் காட்டிலும் அதிக இடங்களைத்தான் கேட்பார் ராமதாஸ். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அப்படி வற்புறுத்தும் அளவுக்கு அவருடைய நிலைமை இருக்காது. மற்றபடி, அவர் வேண்டவே வேண்டாம் என்று கழகங்கள் முடிவெடுத்து ஒதுக்கிவிடும் என்று தோன்றவில்லை!" 

"அப்படியானால், ராமதாஸுக்கு இந்தத் தேர்தலில் எந்த நிலைப்பாடு பாதுகாப்பானது அல்லது, குறைவான சேதம் அளிக்கக்கூடியது?"

"சில தொகுதிகளில் அவர் கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மைதான். அவரிடம் ஏதோ ஒரு வலு இருக்கிறது. அது எவ்வளவு என்று யாருக்கும் தெரியவில்லை. அது தெரிந்துவிட்டால், அவருக்கே ஆபத்து. அதற்காகவாவது அவர் கூட்டணி வைத்துக்கொண்டுவிடு வார். அவரைப் பொறுத்தவரை, இரு கழகங்களிடமும் பெரிய வித்தியாசம் பார்க்கத் தேவை இல்லை. யார் அதிக எண்ணிக்கையில் சீட் தருகிறார் என்று தான் பார்க்க வேண்டும். எங்கு அதிக வலு வான கூட்டணி இருக்கிறது என்றுபார்த்து, அதற்கேற்ப அவர் தனது நடவடிக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்!" 

"அ.தி.மு.க - விஜயகாந்த், தி.மு.க - விஜயகாந்த்... இதில் எது விஜயகாந்த்துக்கு மிக அதிக லாபம்?" 

"எனக்கென்னவோ, தி.மு.க - விஜயகாந்த் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்பட்சத்தில், அங்கே விஜயகாந்த் கட்சிக்கு ஒதுக்க தி.மு.க-விடம் இடம் இருக்காது. விஜயகாந்த்தும் பெரிய ஆசையில் இருக்கிறார். அந்த நிலையில், தி.மு.க-வால் நிச்சயம் அவரது எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியாது. ஒருவேளை, காங்கிரஸே தி.மு.க. கூட்டணியில் இல்லாவிட்டால், அது நிச்சயம் ஒரு பெரிய மாறுதல். அப்போது என்னவெல்லாம் நடக்கும் என்று என்னால் இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது!" 

"இளங்கோவன், தி.மு.க. ஆட்சி மீதும் கருணாநிதி மீதும் நேரடியாக இவ்வளவு சீற்றம் காட்டியும் கருணாநிதி அமைதியாக இருக்கிறாரே?" 

"காங்கிரஸ் தலைமை தன்னுடன் பலமான நட்புடன் இருப்பதாக நினைக்கிறார் கலைஞர். அதனால் இளங்கோவன் பேசுவதற்கு பப்ளிக்காக எதிர்ப்பு காட்டி அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். ஆனாலும், அது அவரை உறுத்தாமல் இல்லை. அதனால்தான், அவ்வப்போது அதுபற்றிப் பேசுகிறார். 'வலிக்கிறது' என்கிறார். சென்ற தேர்தலில் இளங்கோவனை தி.மு.க-தான் தோற்கடித்தது. அதேபோல, காங்கிரஸ் தன்னுடன் இருந்தால், இந்த முறையும் இளங்கோவனைத் தோற்கடித்துவிடலாம் என்ற தீர்மானத்தில் கருணாநிதி அமைதியாக இருப்பார் என்று நினைக்கிறேன்!" 

"எம்.ஜி.ஆர். லேபிளை, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., என அனைத்துக் கட்சிகளும் இப்போது உரிமை கொண்டாடுகின்றன. உண்மையாக எம்.ஜி.ஆர்ரசிகர் கள் யாரை ஆதரிப்பார்கள்?" 

"மக்களைப் பொறுத்தவரை ஜெய லலிதாதான் எம்.ஜி.ஆரின் அரசியல் பிரதிநிதி. கலைஞர் அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரை எப்படியெல்லாம் நடத்தி னார், என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் எம்.ஜி.ஆர். அபிமானிகளைத் தன் பக்கம் திருப்பவே முடியாது. கலைஞர் இப்போது காமராஜரைப் புகழ்கிறார் என்பதற்காக, காங்கிரஸ் வாக்குகளை அவர் கைப்பற்றிவிடுவாரா என்ன? 

விஜயகாந்த் சில சினிமா வசனங்களை வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாணியில் அரசியல் நடத்தலாம் என்று நினைக் கிறார். ஆனால், அதெல்லாம் வேலைக்கு ஆகாது. எம்.ஜி.ஆரை மற்றவர்கள்புகழப் புகழ... அது அ.தி.மு.க-வுக்குத்தான் லாபம்!" 

"தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?" 

"இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றா கவே கடந்திருக்கிறது!" 

"அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?"

"என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம் செழிக்கிறது சார். அது எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்?! மாபெரும் குடும்பம் அது. அதற்குப் பல கிளைகள். அவை அனைத்தும் செழிக்கின்றன. அதை எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்? இதுக்கு மேல் என்ன ப்ளஸ், மைனஸ் அடுக்கி மார்க் போடுறது. போதும் சார்!" 

"கடந்த ஐந்தாண்டு காலம் முழுக்க கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

"அது கலைஞரின் மிக மோசமான பலவீனம். பல சமயம் தன்னைத்தானே புகழ்ந்துக்கிறார். அதுவும் போதாமல், மத்தவங்களையும் புகழச் சொல்லிக் கேட்டு ரசிக்கிறார். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியில் திளைப்பதும் ஆட்சியாளரின் மிக மோசமான பலவீனம். அதுக்கு அவர் தன்னைப் பலி கொடுத்துட்டார்!" 

"கருணாநிதி ஆட்சிக்கு முன் தமிழகம் - கருணாநிதி ஆட்சிக்குப் பின் தமிழகம்... என்ன வித்தியாசம்?" 

"கலைஞர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் 2G இணைப்பு நடந்திருக்கு. ஒரு G காந்தி (சோனியா) குடும்பம்- இன்னொரு G கோபாலபுரக் குடும்பம். இந்த இரண்டு நி இணைப்பு இருக்கிறவரை, தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்காது என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம்!"

No comments:

Post a Comment