அண்மைக்
காலமாக நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதுப்புது லே-அவுட்கள் தினமும்
முளைக்கின்றன. ஆயிரக்கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது
விற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன ரியல் எஸ்டேட்
நிறுவனங்கள். டிவி துணை நடிகைகளை வைத்து இடத்தின் அருமைபெருமைகளை எடுத்துச்
சொல்வதில் தொடங்கி, 'ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம்
செய்கின்றன. இந்த இடங்களை நீங்கள் வாங்கப் போனால் என்னென்ன விஷயங்களில்
உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந்து
இதை நன்றாகவே தெரிந்துகொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த அனுபவங்களின் தொகுப்பு
இனி:
சொல்வது ஒன்று, காட்டுவது வேறு..!
''வந்தவாசி அருகே அரை கிரவுண்ட் மனை 40,000 ரூபாய் என டிவி-யில் விளம்பரம் பார்த்தேன். ஒரு லட்ச ரூபாயில் இரண்டு மனை வாங்கிப் போடலாம் என்று நினைத்து மனையைப் பார்க்கப் போனேன். அங்கு போனவுடன், '40 ஆயிரம் ரூபாய் பிளாட்கள் எல்லாமே வித்துடுச்சு. நான்கு பிளாட்தான் மிச்சம் இருக்கு’ என்று லே-அவுட்டின் கடைசியில் ஒரு இடத்தைக் காட்டினார்கள். அது எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டவுடன், ''இதைவிட நல்ல இடம் அதோ அங்க இருக்கு! ஆனா, அரை கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்'' என்றார்கள். 'அரை கிரவுண்டு 40 ஆயிரம் ரூபாய்ன்னுதானே சொல்லி கூட்டிக்கிட்டு வந்தீங்க’ன்னு கேட்டால், ''அதைத்தான் காட்டினோமே! உங்களுக்கு வேணுமின்னா அந்த இடத்தையே வாங்கிக்கிங்க!'' என்றார்கள். அவர்களின் மார்க்கெட்டிங் தந்திரத்தைப் புரிந்துகொண்ட நான் இடமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்'' என்றார் கண்ணப்பன்.
பத்திரச் செலவு இலவசம்..!
இலவசங்கள் மூலம் இழுப்பு..!
மந்தமாக இருக்கும் பிளாட்களின் விற்பனையை பரபரப்பாக்கவே இந்த இலவச
இழுப்பு! அண்மையில் நண்பர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாய் தந்து ஒரு மனை
வாங்கினார். அவர் வாங்கிய பிறகு அந்த இடத்தை யாருமே வாங்கவில்லையாம்.
ஆனால், ஒரு பிளாட் வாங்கினால் ஒரு ஸ்கூட்டி இலவசம்! இடத்தின் விலை 2.5 லட்ச
ரூபாய்! என சமீபத்தில் அறிவிக்க, சில நாட்களிலேயே அத்தனை இடங்களும்
விற்றுத் தீர்ந்ததாம். இடத்தின் விலை அநியாயத்துக்கு ஏற்றிவிட்டுத்தான்
இப்படி இலவசங்களைத் தருகிறார்கள் என்பது தெரியாத சில அப்பாவிகள்
லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள்.
பெண்கள் சென்டிமென்ட்..!
சிப்காட் வருது!
இருக்கு..! இல்லை..!
பல இடங்களில் கார்னர் பிளாட்களை ஏஜென்டுகள் அல்லது புரமோட்டர்கள் அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே புக் செய்துவிடுகிறார்கள். நீங்கள் அந்த இடத்தைக் கேட்டால், ஆபீஸில் கேட்டு சொல்கிறேன் என்பார்கள். பிறகு, சார், நீங்க அதிர்ஷ்டசாலி! நீங்க கேட்ட இடமே கிடைச்சுடுச்சு! என்று கொஞ்சம் இழுத்தடித்துவிட்டு தருவார்கள். செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி இடம் விற்கும் முயற்சிதான் இது என்பது தெரியாமல், கார்னர் பிளாட் கிடைச்சுடுச்சு என்று சந்தோஷமாக இடத்தை வாங்கிக்கொண்டு போகிற நல்லவர்களும் பலர் உண்டு.
பிரமாண்டத்தைப் பார்த்து ஏமாறாதீர்கள்..!
பஞ்சாயத்து அப்ரூவலா, உஷார்..!
காய்கறியைக் கூறுபோட்டு விற்கிற மாதிரி இடத்தை துண்டாக்கி
விற்பதுதான் பஞ்சாயத்து மனை அப்ரூவல் என்றாகிவிட்டது. இதற்கு
முன் பஞ்சாயத்து பகுதியில் லே-அவுட் போட வேண்டும் என்றால்
சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர், இந்த இடத்தைப் பிரித்து லே-அவுட்
போட ஆட்சேபனை இல்லை என எழுதித் தரவேண்டும். இப்போது அந்த விதிமுறை இல்லை
என்பதால் பெரும்பாலான பஞ்சாயத்து லே-அவுட்களில் பஞ்சாயத்து தலைவரின் அனுமதி
இல்லாமலே லே-அவுட் போடப்படுகின்றன. பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
போட்டு லே-அவுட் போட அனுமதி கொடுக்கவில்லை அல்லது சம்பந்தப்பட்ட
லே-அவுட்டில் சாலைகள் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனில்
பிற்காலத்தில் வீடு கட்டும்போது சிக்கல்தான்!
சாப்பாட்டுக்கு காசு கொடு!
போலீஸில் புகார் செய்தால்..?
விரிவான, விளக்கமான தகவல்...
ReplyDeleteநன்றி... தொடர வாழ்த்துக்கள்...
Good information..
ReplyDelete