ஒரு
குக்கிராமத்தின் மண் ரோட்டில் வயல்கள், எலுமிச் சைத் தோட்டங்களைத் தாண்டி
இருக்கிறது ஒரு சிறு குடிசை. அதன் பின்புறத்தில் விவசாய வேலை பார்க்கும்
ஒரு பெரிய வரைக் காட்டி, 'இவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி’ என்றால் எப்படி
உணர்வீர்கள்?
'உலகின் ஏழை ஜனாதிபதி’ என்று அழைக்கப்படும், உருகுவே
நாட்டு ஜனாதிபதி ஜோஸ் முஜிகாதான் இப்படி வாழ்பவர். இவருக்குச் சொந்தமாக
இருப்பது பழைய வோல்ஸ்வோகன் கார் மட்டும்தான். தவிர, தன் மாதச் சம்பளத்தின்
90 சதவிகிதப் பணத்தை ஏழைகளுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் கொடுத்து
விடுகிறார்.
தன் ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர், சிறு வயதில்
வறுமையை விரட்ட சைக்கிளிங் கிளப்புகளில் சேர்ந்து, சைக்கிள் ஓட்டிப்
பிழைப்பு நடத்தினார். 'உழைத்தால் மட்டுமே சோறு’ என்ற நிலைமையில் கொஞ்சம்
கொஞ்ச மாகத் தேசிய அரசியலில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதார
வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவம்தான் காரணம்
என்று, வீதிகளில் முழங்கியவர், அதை எதிர்க்கும் 'டுபாமராஸ்’ கெரில்லாப்
படையில் இணைந்து, அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். ஒரு
தாக்குதலில் ராணுவம் இவரைச் சுட்டுப் பிடித்து, 14 ஆண்டு கடுங்காவல் சிறைத்
தண்டனை தந்தது. 1985-ல் ஜோஸ் விடுதலையானபோது நாடு மக்களாட்சிக்கு மாறியது.
மக்களாட்சி சமூகம் புது ரத்தம் பாய்ச்ச... மீண்டும் தீவிர அரசியலில் இயங்க
ஆரம்பித்தார். கடந்த 2009-ம் ஆண்டு வரை பல ஆண்டுகள் செனட்
உறுப்பினராகவும், விவசாயத் துறை, மீன்வளத் துறை அமைச்சராக வும் இருந்தார்.
ஜோஸின் எளிமை மக்களுக்குப் பிடித்துப்போக, அவரை
ஜனாதிபதி ஆக்கினார்கள். அரசு அளித்த ஜனாதிபதி மாளிகையை உதறிவிட்டு,
தன்னுடைய சிறிய குடிசையில் வாழ்கிறார். 'நான் ஒன்றும் ஏழை கிடையாது.
அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக்கொண்டு. 'போதாது... போதாது’ என
அலைபவர்கள்தான் உண்மையான ஏழைகள்!''- இது ஜோஸின் ஸ்டேட்மென்ட்.
Wow! Great post.
ReplyDelete'நான் ஒன்றும் ஏழை கிடையாது. அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக்கொண்டு. 'போதாது... போதாது’ என அலைபவர்கள்தான் உண்மையான ஏழைகள்!''- இது ஜோஸின் ஸ்டேட்மென்ட்.// அருமையான வரிகள்! உண்மையும் கூட பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete