Search This Blog

Tuesday, February 08, 2011

யுத்தம் செய்.


மிஷ்கின் இயக்கத்தில் இந்த வருடத்தில் வரும் இரண்டாவது திரைப்படம் . மிஷ்கின் கதை சொல்லும் அழகே தனி தான். அதுவும் கால்களை காட்டியே கதை சொல்வார்.சேரன் மாறுபட்ட கோணத்தில் நடித்த படம். அஞ்சாதே போல் இருக்குமா என்று தான் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்பதை நிருபித்தது இந்த யுத்தம் செய்.

கதை :
தங்கையை தொலைத்த ஒரு சிபிஐ அதிகாரியாக சேரன், நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைக்கான காரணத்தை கண்டு பிடித்து தன் தங்கையை காப்பாற்றுவதே இந்த யுத்தம் செய். 


சேரன் :

கொஞ்சகூட அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் சேரன். இறுக்கமான முகத்தோடு சுற்றும்போதும் சரி, தங்கையின் குரலைக் கேட்டு பதட்டம் கொள்ளும்போதும் சரி.. பாத்திரம் உணர்ந்து அளவாக நடித்து இருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் :

 டாக்டராக அவர் வரும் காட்சியில் வசனத்தை மிக உன்னிப்பாக கவனித்தால் தான் புரியும் . அவர் சாகும் தருவாயில் பேசும் வசனம் “ஓடிக்கிட்டே இருந்தோம்.. அவனுங்க தொரத்துனானுங்க.. முடியல.. எவ்ளோ தூரம் ஓட.. அதான் இப்ப நாம தொரத்துறோம். அவனுங்க ஓடுறானுங்க..”மற்றும் காட்சி மிக அருமை.  

இசை  :

கே என்ற புது முகம். பின்னணி இசையில் மிரட்டி உள்ளார்.  ஒளிபதிவு மிக அருமை .

ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் லக்ஷ்மி நரசிம்மனின் கதாபாத்திரங்கள்  அருமை. அதுவும் தன் மகளை பார்த்து கதறும் காட்சியில்  நிஜ அம்மாவாக வாழ்ந்து இருக்கிறார் .

மிஷ்கின் :   

படத்தில் இவர் தெரியவில்லை. ஆட அவர் பெயர் கார்டை தான் சொல்லுறேன். தன் பெயரை போடாமல் படம் எடுத்த முதல் இயக்குனர் எனக்கு தெரிந்து.. 

முதல் காட்சியில் இருந்தே படம் ஆரம்பம். மழை. ஆட்டோ.  ரிப்பேர் செய்யும். டிரைவர். அந்த ஆட்டோவை கடந்து பெண்.அதற்கடுத்து வரும் காட்சிகள்.. ஐயோ செம திரைக்கதை ..அஞ்சாதே படத்துக்கு பிறகு மற்றுமொரு அதிரடியான க்ரைம் கதையை கையாண்டு வெற்றியும் கண்டு இருக்கிறார்.படத்தின் ஒவ்வரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது. 

முதல் பாதிவரை படம் கொஞ்சம் மெதுவா போற ஒரு பீலிங் ரெண்டாம் பாதியிலிருந்து ஜெட் வேகம்தான்.

பிடிக்காதது :
 
ஆனா படத்தோட மேகிங் ஸ்டைல் அஞ்சாதே போலவே உள்ளது . முதல் பத்தி கொஞ்சம் மெதுவாக செல்கிறது..

பார்க்க வேண்டிய காரணங்கள்  :
 
பெண்ணை பெற்றவர்கள் பார்க்க வேண்டிய படம். இது நம் நகரத்தில் நடக்கும் கதை தான். மேல் தட்டு பெண்கள் கண்டிப்பா பார்க்கணும். நம் தாய் தங்கைக்கு இது போல் நடந்தா சும்மா இருப்போமா ! இதே ஒரு வசனமாக பாத்தில் வரும்..

இந்த ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.  

இது நல்லபடம்தான் அதனால் ஓடாது!

1 comment: