மதுரையின் பின்னணில் அடுத்த படம். சரி ஊரை பற்றி உயர்வா சொல்லுவங்கனு பார்த்தா வழக்கம் போல கொலை , சண்டை தான் இந்த தூங்கா நகரம்.
நாலு நண்பர்களின் கடந்தகால வாழ்க்கை ,ஒருத்தன் பயந்தான்கொள்ளி எலெக்ட்ரிசியன் ,இன்னொருவன் காதலில் அலையும் ஊமை,அடுத்தவன் வீடியோ எடுக்கிறவன்,மற்றவன் மின்சார இடுகாடு பராமரிப்பாளன் என வடிவேலுவின் வாய்ஸ் உடன் படம் ஆரம்பம். அவர்கள் எப்படி நண்பர்கள் ஆகிறார்கள் என்பதை மிகவும் சிரம பட்டு டைரக்டர் சொல்லி இருக்கிறார். அதுவும் பெயர் பெற்ற வைகை பாரில்...
அஞ்சலி தெருவோர த்ரிசா டிவி யில் ராதா என்கிற அறிவிப்பாளராக வந்து போகிறார். விமல் இவரை பார்த்தா உடன் அடையலாம் தெரிந்து கொள்கிறார்.இதற்க்கு ஒரு நீண்ட பிளாஷ் பேக். தலை எழுத்து.. புதுசா யோசிங்க !!
நண்பர்கள் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனாவசியமாக குறுக்கிடுகிறார் அய்யர் ஒருவர். எம்பொண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு எம்எம்எஸ் என்று அவர் அலற, விபரம் கேட்கிற விமல் புறப்படுகிறார் ஆவேசத்தோடு. விஷயம் இதுதான். ஜவளிக் கடைக்கும் துணி எடுக்க வரும் பெண்களை உடை மாற்றும் அறையில் ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழிக்கிறார்கள் இரு இளைஞர்கள். அவர்களிடமிருந்துதான் இப்படி ஒரு எம்எம்எஸ். அப்பாவிப் பெண்ணுக்கு லோக்கல் பிரமுகரின் மகனால் நடக்கவிருக்கும் அநீதியைத் தட்டிக் கேட்கப் போக, நால்வருக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
அந்த லோக்கல் பிரமுகரின் கையில் நண்பர்களில் ஒருவர் சிக்க, அவர் மூலமாகவே பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார்.அடுத்து நடந்தது என்ன என்பதை இடைவேளைக்குப் பிறகு வரும் படம் சொல்கிறது.
விமலிடம் முந்தைய படங்களில் பார்த்த அதே உற்சாகம் கரைபுரண்டு ஒடுகிறது. சிரிக்க வைப்பதற்கு சிங்கம்புலி செய்யும் முயற்சிகளை விட அந்த இரண்டு பாட்டிகளும் செய்யும் அட்டகாசம் ரசிக்கவைக்கிறது.
ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு உதவி செய்யச் செல்லும் காட்சியில் இருந்துதான் கதைக்குள் வேகம் கிடைக்கிறது.படத்தில் வரும் எல்லோருமே தங்கள் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ரேணிகுண்டா நிஷாந்த் இயக்குனர் உபயோகிக்கா வில்லை.கமலா தியேட்டரின் முதலாளி வி.என். சிதம்பரம் வில்லன் வேடத்தில் ஆச்சரியப்படுத்துகிறார்.
நாம் எதிர்ப்பார்த்த முழுமையான மதுரை மேப்பில் மட்டுமே இருந்தது.படத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமே.மற்றபடி படம் பார்க்கலாம் ரகம்!
தூங்கா நகரம் - முதல் பாதி தூக்கம்,இரண்டாம் பாதி வேகம்.
No comments:
Post a Comment