கொல்கத்தாவில்தான் முதன் முதலில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1984-ம் ஆண்டிலேயே இந்த ரயில் பாதை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டாலும், 1995-ல் தான் கொல்கத்தா மெட்ரோ ரயில் செயல்படத் தொடங்கியது. முதலில் 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ரயில். இதன் மூலம் கொல்கத்தாவின் போக்குவரத்து நெருக்கடி மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறதாம். கிட்டத்தட்ட 4,874 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. செலவு செய்ததற்கேற்ப இந்த ரயில் சேவை பல நூறு கோடி ரூபாய் வருமானத்தையும் தருகிறது .
கொல்கத்தாவுக்கு அடுத்து டெல்லியில் இப்போது வலம் வருகிறது இந்த மெட்ரோ ரயில். 1998-ல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2002-ல் வெற்றிகரமாக சேவை தொடங் கப்பட்டது. ரெட்லைன் 2002, எல்லோ லைன் 2004, புளூ லைன் 2005-2009, கிரீன் லைன் 2010 என ஐந்து தடங்களில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடர்கிறது. 189 கிலோ மீட்டரில் 142 நிறுத்தங்கள் கொண்ட இந்த மெட்ரோ ரயில் திட்டம் 10,571 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. 2008-ல் 305 கோடியும் 2009-ல் 723 கோடியும் வருமானம் ஈட்டிக் கொடுத்தது டெல்லி மெட்ரோ ரயில்.
டெல்லியைத் தொடர்ந்து இப்போது, சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை நகரங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன.
கிட்டத்தட்ட 14,600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது சென்னை மெட்ரோ ரயில் திட்டம். மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது இந்த மெட்ரோ ரயில் பாதை. வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலிலிருந்து மவுன்ட் வரையும் அமைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் 2015-ம் ஆண்டுவாக்கில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்கள் நீளமானவை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், நீளமான ரயில் நிலையம் எது, நீளமான ரயில் பாதை எது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகிலேயே மிக நீளமான ரயில் பிளாட்பாரம் இந்தியாவில்தான் இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலையம்தான் அது. இங்குள்ள பிளாட்பாரத்தின் நீளம் 1072 மீட்டர். பிளாட்பாரம் இத்தனை நீளமிருந்தும் இங்குள்ள மக்கள் ரயிலேற ஒரே தள்ளுமுள்ளு தான்.
No comments:
Post a Comment