அரபு நாடுகளில் வேலை என்றவுடன் நம்மூர்க்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது ஏன் தெரியுமா? அதிக சம்பளம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று பலரும் நினைப்பார்கள். அதுதான் தவறு! அங்கு வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்துக்கு அங்கே வரி கட்ட வேண்டியதே இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணம்.
அரபு நாடுகளில் சம்பாதிக்கப் படும் மொத்தத் தொகைக்கும் முழு வரி விலக்கு உண்டு. இதன் காரணமாகத்தான் இந்த நாடுகளுக்கு வேலை தேடி படையெடுத்துக் கொண்டு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சரி, சம்பாதிக்கிற நாட்டில் வரி கட்ட வேண்டாம். ஆனால், அந்தப் பணத்தை எந்த நாட்டுக்கு அனுப்புகிறோமோ, அந்த நாட்டுக்கு வரி கட்டித்தானே ஆகவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒரு அரபு நாடு வேறு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த நாட்டுக்கு பணத்தை எடுத்துக் கொண்டு போனால் அங்கும் வரி கட்ட வேண்டியதில்லை. உதாரண மாக, அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இப்படி ஓர் ஒப்பந்தம் இருப்பதால், அந்த நாட்டில் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு எடுத்து வரும்போது வரி கட்டத் தேவை யில்லை!
இது தனி நபர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பொருந்தும். வியாபாரிகளின் நகரம் என்று சொல்லப்படும் துபாயில் செயல்படும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி கிடையாது. இங்கு கிடைக்கும் எண்ணெய் வளத்தைக் கொண்டே மற்ற வியாபாரங்களை ஊக்குவிக்க நினைத்தது துபாய் அரசு. அதனால்தான் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் துபாயில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment