Search This Blog

Sunday, February 20, 2011

பயணம் & தம்பிக்கோட்டை - விமர்சனம்

பயணம்

அழகிய தீயே, மொழி & அபியும் நானும் என நல்ல தரமான படங்களை மட்டுமே இயக்கிவந்த ராதா மோகன் என்ற இயக்குனரின் படம் தான் இந்த பயணம். பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி இந்த படத்தையும் வழங்கி உள்ளனர். எதார்த்த சினிமாவை காட்டுவதாக சொல்லி சில இடங்களில் சறுக்கி உள்ளார், தன் முந்தைய படத்தை ஒப்பிட்டு பார்க்கையில்...


கதை 


சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்லும் பயணிகள் விமானம் கடத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்குப் செல்ல வேண்டிய விமானம் அவசரவசரமாக திருப்பதி ஏர்போட்டில் தரையிறக்கப்படுகிறது. தீவிரவாதிகளின் தலைவன் யூசுப் கானையும், 100 கோடி ரூபாய் பணமும் கேட்டு தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர்.
உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட கமோண்டோ படைத்தலைவர் நாகார்ஜுனாவும் அழைக்கப்படுகிறார். தீவிரவாதியை விடுவித்தார்களா ? பயணிகள் என்ன ஆனார்கள் ? என்பதே மீதி கதை..

 

இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண், துறுதுறுப்பான டாக்டர், ஒரு பாதிரியார், ஒரு நடிகன், அவனுடைய ரசிகன், ஜோதிட சிகாமணி, கார்ல்மார்க்ஸ் வழி நடக்கும் பட்டதாரி இளைஞன், ஒரு மாஜி மிலிட்டரி மற்றும் ஒரு அரசியல்வாதி. இவர்களுடன் மதத்திற்கு கட்டுப்பட்ட, பண்பாடுகளை மதிக்கிற, பெரியோர்களை போற்றுகிற, குழந்தைகளையும் நேசிக்கும் மனம் கொண்ட நான்கைந்து  தீவிரவாதி என அதற்கான ஆட்களை அருமையாக தேர்வு செய்து  திரைக்கதை தொகுத்து உள்ளார் ராதா மோகன் .

 

 'சைனிங் ஸ்டார்' சந்திரகாந்த் ரோலில் வரும் பப்லுவை காமெடி நடிகர் சாம்ஸ் நக்கல் அடிக்கும் வசனங்கள் அட போடா வைக்கிறது .

 

கடைசி இருபது நிமிடங்கள் நல்ல விறு விறுப்பாக போகிறது. 

 

தம்பிக்கோட்டை

 இந்த போட்டோ பார்த்து தான் படம் பார்க்க முடிவு பண்ணி பல்பு வாங்கினேன் .

 

 காலேஜ் படிக்கற ஹீரோ கல்லூரி தொண்டு காரணமாக தன் அக்காவை   விட்டு தம்பி கோட்டை என்ற  ஒரு ஊருக்கு போறாரு .ஹீரோயினை பார்க்கறாரு. லவ் பண்றப்ப ஹீரோயின் அப்பா ஒரு தாதா ,தாதாவோட மகள்  (அக்கா) என  இரண்டு  பேரையும் சமாளிச்சு என்ன பண்ணுறாரு என்பதே இந்த படத்தின் கதை சுருக்கம். 

 

அக்கா கேரக்டர்ல மீனா தம்பியாக நரேன்.  ஹீரோயின் பூனம் பஜ்வா. சங்கீதா மற்றும் நான் கடவுள் படத்தில் வருபவர் தான் வில்லன். சந்தானம் காமெடி ஓரளவுக்கு சிரிப்பை வர வைக்கிறது . வேற எதுவும் சொல்லி கொள்வது  போல இல்லை..

No comments:

Post a Comment