தமிழ் சினிமா மீண்டும் பழைய டிராக் போய்விடாது என யோசிக்க தோணுது. இது நாள் வரை எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஆனால், கடந்த மூன்று வரம் வெளியான படங்களை பார்க்கும் பொது எல்லாம் புட்டுகுச்சு . ஜீவா இரட்டை வேடம், சந்தானம், மற்றும் கொஞ்சம் மசாலாவா இருக்கும் என எதிர்பார்த்து தான் பார்த்தேன். ஆனால் மரண கடி படம் தான் இந்த சிங்கம் புலி ..
கதை :
ரெண்டு ஜீவா. தமிழ் சினிமா வழக்க படி ஒருத்தர் நல்லவரு ( மீன் காரர் )… இன்னொருத்தர் கெட்டவர் (வக்கீலு). நம்ம S . J சூர்யா ஒரு படத்துல நடித்து போல பெண்களை செட் பண்றதே பொழப்பா வைத்து அலயுறாரு வக்கீல் ஜீவா.வழக்கம் போல தம்பியை நல்லவன்னு நினைச்சு அண்ணன வெறுப்பேத்தற அப்பா, தங்கச்சி, அம்மான்னு போகுது படம் . வக்கீல் ஜீவா ஒரு பொண்ணுக்கு பண்ண அநியாயத்தை நல்ல ஜீவா தட்டி கேக்க, இதனால் அவரை தம்பி கொலை செய்ய தயாராக என்ன நடக்குதுங்கறதுதான் சிங்கம் புலி கதை.
ஜீவா நல்ல தான் நடிப்பாரு.. ஆனால் இந்த படத்தில் கோட்டை விட்டுட்டாரு . சும்மா கத்தி பேசுறாரு.. ரம்யா தமிழ் சினிமாவின் அக்மார்க் நாயகி.. சும்மா வந்துட்டு போவாங்க .. எப்படியோ போய் இருக்க வேண்டிய படத்தை காப்பற்றி தூக்கி நிறுத்துவது சந்தானம் மட்டும் தான். பல சீன்ல பேசாமயே சிரிக்க வைக்கிறாரு… அதுவும் அந்த லேடி போலீஸ்ட்ட அவரு பண்ற ரவுசு சூப்பர்…
முதல் பாதி நல்ல வேகம்… ரெண்டாவது கொஞ்சம் தொய்வு… கிளைமேக்ஸ் இழுவை ஆனா இத்தனையும் தாண்டி படம் தேறுதுன்னா அதுக்கு மிகப்பெரிய பலம் சந்தானம் காமெடி!
பிழைகள்:
ReplyDelete//பொது//
போது
//ஜீவா நல்ல தான் நடிப்பாரு//
ஜீவா நல்லாதான் நடிப்பாரு
பாத்து எழுதுங்க தோழரே!