Search This Blog

Sunday, March 20, 2011

பவானி & பதினாறு - சினிமா விமர்சனம்

பவானி


சினேகா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்துள்ள படம். கிச்சாஸ் இயக்கி இருக்கும் படம். முதல்ல இது வைஜேந்தி ஐ பி ஸ் ரீமேக் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால், இது வேற கதை. அந்த படத்தின் இருந்து சில காட்சிகளை எடுத்து இந்த படத்தை வழங்கி உள்ளனர்.

கதை 

அரசியல்வாதிக்கும் போலீஸ் அதிகாரிக்குமான மோதல்தான் கதை.
மந்திரி கோட்டா சீனிவாசராவ். அந்த சீமையில் அவர் தான் மிக பெரிய ஆள். அவர் வைத்தது தான் சட்டம் .அங்கு மாற்றலாகி வருகிறார் போலீஸ் அதிகாரி சினேகா. அவர்கள் இருவருக்கும் நடக்கும் போராட்டமே இந்த பவானி படத்தின் கதை.

மந்திரி  மற்றும் மகன் செய்யும் அநியாயத்தை தட்டி கேட்கிறார். அதனால் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்து, மற்றும் தன் பணி புரியும் இடத்தில் வேலையையும் இழந்து , நீண்ட போராட்டத்திற்கு பிறகு வில்லனை எப்படி பலி வாங்குகிறார் என்பதே இந்த பவானி படத்தின் கதை .

சினேகா 

அஜித் போல படம் முழுக்க நடக்கிறார் . அச்டின் கட்சியில் தோய்வில்லாமல் நடித்து உள்ளார். இது மாதரியான படத்தில் நடிப்பதை விட வேற படங்களில் நடித்தால் நல்லது.

சம்பத்

தெலுங்கு படத்தின் நாயகன் போல பாடலுடன் அறிமுகம். ஒரு வெட்டி கிளை கதை வேற...

கோட்டா

வெறி குட் ஆக்டிங். ஆனால், சாமி படத்தில் அவர் நடித்ததை போலே செய்து உள்ளார்.

 பவானி - சினேகாவுக்கு ஆகா பார்க்கலாம்.

பதினாறு
காதல் அற்புதமான உணர்வு. காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்த படம் தான் பதினாறு. எஸ்.டி.சபா ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியவர். படம் பெயர் தெரியவில்லை .


 கதை 

கல்லூரியில் படிக்கிற சக இளைஞன் சிவாவுடன் காதல் வயப்படுகிறார் மது ஷாலினி. ஷாலினி அம்மா சிவாவை தான் வீட்டுக்கு வர சொல்லி காதலர்களிடம் புத்தகம் ஒன்றையும் கொடுத்து அவர் படிக்கச் சொல்ல, பிளாஷ்பேக்காக விரிகிறது மதுஷாலினியின் அப்பாவுடைய காதல். அவரால் காதலிக்கப்பட்ட இளவரசி என்ற பெண் என்ன ஆனார் என்பதை நீட்டி சொல்லி இருக்கிறார் சபா.

கிராமம், நகரம் என்று எல்லா திசைகளிலும் நமது கையை பிடித்துக் கொண்டு நடக்கிறது யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை.  

எப்படியோ வந்து இருக்க வேண்டிய இந்த படத்தை, ஒரு படத்தை எப்படி எல்லாமோ இயக்க கூடாதோ அந்த மாத்ரி இந்த படத்தை இயக்கி உள்ளார் சபா.

 பதினாறு - நல்லா தூக்கம் வந்தாலும் இந்த படத்தை  பார்த்தால் தலைவலி  நிச்சயம் 


2 comments:

  1. பதினாறு படம் நல்ல தான் பாஸ் இருக்கு..இயக்கமும் ஒ.கே...எனக்கு புடிச்சிருந்தது...
    என்னது பவனை படத்தை பத்தி கருத்தா? ஐ ஆம் சாரி

    ReplyDelete
  2. இரண்டு படங்களும் செம மொக்க..

    ReplyDelete