Search This Blog

Tuesday, March 29, 2011

குள்ளநரி கூட்டம் - சினிமா விமர்சனம்


பெயரை பார்த்தவுடன்  கண்டிப்பா இது மொக்கை படம்தான் என்று என்னை போல் முடிவு பண்ணி இருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றுங்கள். கதை களம் மதுரை. சரி இரண்டு குத்து பாட்டு, நான்கு நண்பர்கள், வெட்டி அரட்டை, மற்றும் அடிதடி என்று எதிர்பார்த்து போனால் பல்பு வாங்குவது நிச்சயம்.

வெண்ணிலா படக்குழு நாயகன், மற்றும் அப்படத்தில் நடித்த சில நடிகர்களை கொண்டு வெளி வந்துள்ள திரை படம் தன இந்த குள்ளநரி கூட்டம் . என் ரொம்ப நாட்களுக்கு பிறகு நாட்களுக்கு பிறகுவெளிவந்துள்ள  ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம்.


கதை  

போலீஸ் என்றாலே பிடிக்காத அப்பா, முதுநிலை படித்து  வேலை தேடும் நாயகன், அன்பான அண்ணா மற்றும் அம்மாவின் அரவணைப்பில்  அழகான குடும்பம் என முதல் பாதி நகருகிறது. அப்பாவின் நம்பர் ரீ சார்ஜ் பண்ணுவதற்கு பதில் வேறொரு நம்பருக்கு தவறுதலாக பண்ணி, அதன் மூலம் காதல் பண்ணி, அந்த காதல் கல்யாணத்தில் முடிய தன தந்தைக்கு பிடிக்காத போலீஸ் வேளையில் சேர்வதே இந்த குள்ளநரி கூட்டம்.

திரைக்கதை 

இயக்குனர் பெயரை சரியாக கவனிக்க வில்லை. மனுஷன் சும்மா அசால்ட்ட எடுத்து இருக்கிறார் முழு படத்தை. எந்த ஒரு இடத்திலும் சிறு அலுப்பு வர வில்லை. கதையுடன் வரும் நகைசுவையும் அதனை சார்ந்த கட்சி அமைப்பும் படம் முழுக்க மிக அழகாக நம்முடன் பயணம் செய்கிறது. சில positive காட்சிகள், இயல்பான வசனத்தில் நமக்கு தெரியாமல் எட்டி பார்கிறது.காதல் மற்றும் போலீஸ் செலக்‌ஷன் ஸ்டோரி என அனுபவ இயக்குனர் போல எடுத்துள்ளார்.


ஹீரோ விஷ்ணு

அலட்டி கொள்ளாமல் இயல்பாக நடித்து உள்ளார் . அவர் பேசியே சில காட்சியை நகர்த்தி உள்ளார். இவர் முன் பத்தியில் செய்யும் சில விஷயங்கள் பின் பாதியில் கதை உடன் பொருந்து கையில் அட போடா வைக்கிறார்.  

ரம்யா 

நடிப்பு ஓக்கே. படம் முழுக்க வருகிறார் கதையுடன்!!! அவரின் தோழி செம வாய்ஸ்..

பிரண்டு - கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... இது போல இன்னும் நிறைய வசனம் மிக அருமை.

போலீஸ் வேலைக்கு தேர்வு செய்வதை கொஞ்சம் விவரித்து கட்டி உள்ளனர். நாயகனின் தந்தை மற்றும் தாய் மிக நன்றாக நடித்து உள்ளனர்.


க்ளைமேக்ஸ் வழக்கம் போல ,ஆனாலும் ரசிக்க முடிந்தது.  ஒரு யதார்த்தமான படம் பார்த்த திருப்தி.

குள்ளநரி கூட்டம் - A feel Good Family entertainer..

No comments:

Post a Comment