Search This Blog

Tuesday, March 22, 2011

இன்வெர்ட்டர்...


எப்படி வாங்கினால் லாபம்?
 
'நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது’ என்கிற ரஜினிகாந்த் பஞ்ச் டயலாக் போல நம்மூரில் கரன்ட் எப்ப போகும் எப்ப வரும்னும் யாருக்கும் தெரியாது! பாத்ரூமில் சோப்பு தேய்த்துக் கொண்டிருக்கும் போதே பட்டென்று போய்விடுகிறது; மிக்ஸியில் சட்னி அரைத்துக் கொண்டிருக்கும் போதே கரன்ட் கட் ஆகி காலை நேர டென்ஷனை கூட்டிவிடுகிறது. எல்லாவற்றையும் விட குழந்தைகள் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் போது கரன்ட் போய்விட்டால் போதும்; பதற்றத்தில் படித்ததையெல்லாம் மறந்து விடுகிறார்கள். வருடம் முழுவதும் இதே கதைதான்; அதுவும் கோடைகாலம் வந்துவிட்டால் போதும், கரன்ட்டுக்கு எக்ஸ்ட்ரா ரெஸ்ட் தேவைப்படுகிறது!
 
சரி, கரன்ட் போவதைத் தடுக்க முடியாது. அப்ப என்னதான் செய்யறது..? அந்த காலத்தைப் போல சிம்னி விளக்கையோ, மெழுகுவத்தியையோ ஏத்தி வைக்கறதெல்லாம் இப்போ சாத்தியப்படுமா என்ன? எமெர்ஜென்ஸி லைட்டுகளும் அரைமணி நேரம் ஒரு மணி நேரம்தான் எரியும். அடுத்து,  குறைஞ்சபட்சம் ஒரு ஃபேனாவது ஓடவேண்டாமா? இதுக்கெல்லாம் என்ன பண்றது..?    

கரன்ட் போயிட்டா பெரிய கம்பெனிகளிலும் சினிமா தியேட்டர்களிலும் உடனே ஜெனரேட்டரைப் போட்டு விடுவார்கள். சின்ன கடைகள், ஓட்டல்களில் அதற்குத் தகுந்த குறைந்த கெபாசிட்டி கொண்ட ஜெனரேட்டர்களைப் போட்டு சமாளித்துக் கொள்கிறார்கள்.
 
ஆனால், பொதுவாக ஜெனரேட்டர்களை யூஸ் பண்றதுன்னா பராமரிப்புச் செலவு அதிகம். கூடவே அது போடும் சத்தமும் அதிகம். ஏறுகிற விலைவாசியில் டீசல் வாங்கிப் போடுவதும் கட்டுபடி ஆகாது என்கிறார்கள். அப்படி என்றால் வீடுகளில் எப்படித்தான் சமாளிப்பது?

''யோசிக்காம இன்வெர்ட்டர் வாங்கிப் போடுங்க'' என்று அட்வைஸ் பண்ணுகிறார்கள் எலெக்ட்ரீஷியன்கள் பலரும். கூடவே,  'மின்சாரம் கட் ஆனவுடன் தானாகவே சுவிட்ச் ஆன் ஆகிடும்; அதுபோலவே கரன்ட் வந்தவுடன் தானாகவே ஆஃப் ஆகிடும்; கம்ப்யூட்டருக்கு பயன்படுத்துற யூ.பி.எஸ். போலதான் இது. பராமரிப்புச் செலவும் நேரமும் குறைவு, சத்தமில்லாமலும் இயங்கும்’ என்று டிப்ஸ்களையும் சொல்கிறார்கள். இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்த சிலரிடம் விசாரித்து கிடைத்த இன்னும் சில விஷயங்கள்...

கரன்ட் போயிட்டாலும் வீடுகளில் லைட், ஃபேன், மிக்ஸின்னு எல்லாத்தையுமே இன்வெர்ட்டர் தயவால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மின்சாரத்தைச் சேமித்து வழங்கும் தொழில்நுட்பத்தில் இயங்குவதால்  இன்வெர்ட்டரி லிருந்து செலவாகும் மின்சாரம் நேரடியாகச் செலவாகும் மின்சாரத்தை விட குறைவாகவே இருக்கிறது. எனவே அதிக நேரம் பயன்படுத்த முடியும்.


எல்லாப் பொருட்களைப் போலவே பிராண்டட் இன்வெர்ட்டர்களோடு,  சில லோக்கல் தயாரிப்புகளும் மார்கெட்டில் கிடைக்கிறது. விற்பனையாளர்களே சர்வீஸும் செய்து தருகின்றார்கள்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டிஸ்டில்டு வாட்டர் ஊற்றினால் போதுமானது; பெரிய அளவில் பராமரிப்பு வேலைகள் கிடையாது.

இன்வெர்ட்டரோடு சேர்ந்த  பேட்டரியின் ஆயுட்காலம் மூன்று அல்லது நான்கு வருடங்கள் மட்டுமே; பிறகு வேறொரு பேட்டரி மாற்றிக் கொள்ள வேண்டும்.


இன்வெர்ட்டர்கள் சத்தமில்லாமல் இயங்குவதால் கைக்குழந்தைகள், நோயாளிகள் ஆகியோருக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

யார், எதை வாங்கினால் லாபம்..? 

கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்ற சிறு குடும்பத்திற்கு எனில் 650 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர் போதுமானது. இதில் மூன்று லைட் போடலாம்; மூன்று ஃபேன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை உழைக்கும். இதன் விலை சுமார் 10,000.  ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கப்படுகிறது.
ஆறு பேர் வரை உள்ள குடும்பத்திற்கு  800 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர் தேவைப்படும். விலை சுமார் 13,500 முதல் 21,000 வரை.  இதில் நான்கு ஃபேன், ஐந்து டியூப் லைட் மட்டுமல்லாமல் மிக்ஸி, டிவியும் உபயோகிக்கலாம். ஆனால் எல்.சி.டி. டிவிகளை இந்த வாட்ஸில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

எட்டு பேர் வரை உள்ள கொஞ்சம் பெரிய குடும்பத்திற்கு 1000 வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர் தேவைப்படும். ஆறு லைட், ஆறு ஃபேன், மிக்ஸி, டிவி உபயோகிக்கலாம். இந்த கெபாசிட்டியில் எல்.சி.டி. டிவியையும் பயன்படுத்தலாம்.

டேபிள் டாப் கிரைண்டர் மற்றும் மோட்டார் ஓட வேண்டுமெனில் 1400 வாட்ஸ் இன்வெர்ட்டரை பயன்படுத்த வேண்டும். ஆனால் மோட்டார் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத் தில் பேட்டரி காலியாகிவிடும்.

பொதுவாக இன்வெர்ட்டர் வாங்கும்போது மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம், வாரன்டி காலம் அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதிகரிக்கும்.

பெரிய அளவிலான வணிகத் தேவைகளுக்கு எனில் நான்கு கிலோவாட்டுக்கு மேல் திறன் கொண்ட  இன்வெர்ட்டர்களை வாங்க வேண்டும்.

மார்க்கெட்டில் உள்ள பிராண்டுகள்:    

வி கார்டு, லுமினியஸ், அமர்ராஜா பேட்டரியின் தயாரிப்பான டிரைபால், மைக்ரோடெக், வேர்ல்பூல், ஏ.பி.சி., டாடா ஷீல்டு போன்ற பிராண்டுகள் மார்க்கெட்டில் உள்ளன.



1 comment:

  1. மிக மிக உபயோகமான பதிவு. பெண்கள் புடவை எடுப்பதை குறைத்துக் கொண்டு சேமித்தால் இந்த மாதிரி தன் டென்ஷன் குறைக்கும் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்

    ReplyDelete