Search This Blog

Wednesday, February 16, 2011

கோ - விமர்சனம்

முதலில் 'கோ’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்தனர். அவருக்கு இணையான ஒரு கேரக்டரில் 'அஞ்சாதே’ அஜ்மல் நடிக்கிறார் என்று தகவல் கசியவே, நைஸாக நழுவினார் சிம்பு. அதன் பிறகுதான் கதாநாயகன் ஆனார் ஜீவா.

கே.வி.ஆனந்த் இயக்கும் அந்தப் படத்தின் கதை இதுதான்...

 ஜீவாவும், அஜ்மலும் கால்சட்டை பிராயத்து ஃப்ரெண்ட்ஸ். வெள்ளுடை வேந்தர்களாய் சைரன் காரில் சலசலக்கும் அரசியல்வாதிகளைப் பார்த்து அமைச்சராகும் ஆசை அஜ்மலுக்குத் துளிர்விடுகிறது. சாதாரண அரசியல் கட்சியில் துக்கடா பொறுப்பில் இருக்கும் அஜ்மலை, தனக்குள்ள தொடர்புகள் மூலம் உச்சத்துக்கு உயர்த்துகிறார் பத்திரிகை போட்டோகிராபர் ஜீவா.


இந்நிலையில் ஜீவாவுடன் பணியாற்றும் பெண் நிருபர் பியாவின் அழகு அஜ்மலை அலைக்கழிக்கிறது. ஒரு கட்டத்தில் பியாவைக் கற்பழித்துக் கொலையும் செய்கிறார். நடந்த கோரத்தைக் கேள்விப்பட்டு அஜ்மலிடம் ஆவேசப்படுகிறார் ஜீவா. ''அவளைப் பார்த்ததும் ஆசையா இருந்துச்சு... கெடுத்துட்டேன். உயிரோட விட்டா உண்மையச் சொல்லிடுவாள்னு தெரிஞ்சதும், கொன்னுட்டேன்...'' என்று கூலாகச் சொல்கிறார் அஜ்மல். 

''உன்னை எப்படி பெரிய அரசியல்வாதி ஆக்கினேனோ, அதைப் போலவே உன்னை ஒண்ணுமில்லாத அனாதையா நடுத்தெருவுல நிறுத்திக் காட்டுறேன் பார்...'' என்று 'அண்ணாமலை’ ரஜினி ஸ்டைலில் ஜீவா சவால் விடுகிறார். அவ்வப்போது ரிலாக்ஸாக ராதா மகள் கார்த்திகாவுடன் டூயட் பாடுகிறார். இறுதியில் எப்படி சபதத்தை நிறைவேற்றினார் என்பதையும் சொல்லிவிட்டால் சாமி கண்ணைக் குத்திவிடும்.

இந்த கதையைப் படித்ததுமே உங்களுக்கு, சத்யராஜ் நடித்த 'மக்கள் என் பக்கம்’ படத்தின் கதை ஞாபகத்துக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. வழக்கமாக இங்கிலீஷ், கொரியன் படங்களைத்தான் நம்ம படைப்பாளிகள் ரீ-மேக் செய்வார்கள். ஒரு சேஞ்சுக்காக பழைய தமிழ்ப் படத்தை உல்டா செய்தால் தப்பா என்ன?

நன்றி : விகடன் 

2 comments:

  1. படம் வந்துருச்சா....??? நல்லா இருக்கா .....

    ReplyDelete
  2. படம் வரல.. கதை விகடன்ல வந்தது..

    ReplyDelete