ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.அதில் 3
காஷ்மீரிலும் 2 ஜம்முவிலும் ஒன்று லடாக்கிலும் உள்ளது. மொத்தம் 87
சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் 46 காஷ்மீரிலும் 37
ஜம்முவிலும் 4 லடாக்கிலும் இருக்கின்றன.
ஜம்முவின் பகுதியின் மொத்தப் பரப்பளவு 26,000 ச.கி.மீ. 2002 வருட மக்கள்
தொகைக் கணக்கெடுப்பின்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 30,59,986 ஆகும். ஆனால்
அங்கு இருப்பதோ 37 சட்டமன்றம் 2 நாடாளுமன்றத் தொகுதிகள்.காஷ்மீர் சமவெளி என்பது வெறும் 15,953 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்டது.
அங்குள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 29 லட்சம். ஆனால் 3 நாடாளுமன்றம் 46
சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. லடாக்கில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. கார்கில் மற்றும் லே பகுதிகளில்
தலா 2 தொகுதிகள் வீதம் மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. மொத்த
வாக்காளர்கள் 1,52,339.ஜம்முவில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரி 84,270 வாக்காளர்கள்
இருக்கின்றனர். காஷ்மீரில் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கு 62,673 வாக்காளர்கள்
மட்டுமே இருக்கின்றனர். ஜம்முவில் 710.6 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது ஒரு
சட்ட மன்றத் தொகுதி. ஆனால் காஷ்மீரில் வெறும் 346 ச.கி.மீ. பரப்பளவிற்கு
ஒரு தொகுதி இருக்கிறது.ஜம்முவில் ஒரு நாடாளுமன்றத்திற்கு 15.29 லட்சம் வாக்காளர்கள்
இருக்கின்றனர். ஆனால் காஷ்மீரில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 9.61 லட்சம்
வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஜம்முவில் ஒரு மாவட்டம் என்பது சராசரி 2629 ச.கி.மீ. பரப்பளவைக்
கொண்டுள்ளது. ஆனால் காஷ்மீரிலோ 1,594 ச.கி.மீ. பரப்பளவிற்கு ஒரு மாவட்டம்
பிரிக்கப்பட்டுள்ளது.ஜம்முவில் 4,571 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை வசதி இருக்கிறது. காஷ்மீரில் 7,129 கிலோமீட்டருக்கு சாலை போடப் பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் ஜம்முவைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை1.25
லட்சம். காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும்.
தலைமைச் செயலகத்தில் ஜம்முவை சேர்ந்தவர்கள் 462 பேர் காஷ்மீரைச்
சேர்ந்தவர்கள் 1,329 பேர் பணிபுரிகின்றனர்.மத்திய பல்கலைக் கழகம் (Central University), தேசிய தொழில் நுட்பக்கல்லூரி
(National Institute of Technology) உட்பட மத்திய அரசின் அனைத்து உயர்
கல்வி நிறுவனங்கள் இருப்பது காஷ்மீர்ப் பகுதியில். ஜம்முவில் எதுவும்
இல்லை. மாநில பட்ஜெட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற
நிதியில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஜம்முவிற்கு 85 சதவிகிதம்
காஷ்மீருக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலாப்பயணிகள் அதிக
எண்ணிக்கையில் வருவது ஜம்மு பகுதிக்குத்தான். கடந்த 2009 ஆம் ஆண்டில் ஜம்மு
பகுதிக்கு 85 லட்சம் பேரும் காஷ்மீர் பகுதிக்கு வெறும் 8 லட்சம் பேரும்
வந்து சென்றுள்ளனர். 2001 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் படி காஷ்மீர் சமவெளிப்
பகுதியின் மக்கள்தொகை 54,76,970. அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 29 லட்சம்
ஆகும். ஜம்முவின் மக்கள் தொகை 44,30,191. அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை
30.59 லட்சமாகும். ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளோ காஷ்மீரை விடக்
குறைவு. தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருவதால் பெரும்பாலான கல்வி
நிறுவனங்கள் காஷ்மீரில் முறையாக செயல்படவில்லை. கிட்டத்தட்ட முற்றிலும்
குலைந்து போய்விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அங்கு போட்டித் தேர்வுகளில்
வெற்றி பெறுபவர்களின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்
ரகசியம் என்னவென்பது தெரியவில்லை.
தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருவதால் பெரும்பாலான கல்வி
நிறுவனங்கள் காஷ்மீரில் முறையாக செயல்படவில்லை. கிட்டத்தட்ட முற்றிலும்
குலைந்து போய்விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அங்கு போட்டித் தேர்வுகளில்
வெற்றி பெறுபவர்களின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்
ரகசியம் என்னவென்பது தெரியவில்லை. லடாக் பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு மிக அதிகமாக
புறக்கணிக்கப்பட்ட பகுதி லடாக். அடிப்படை வசதிகள் கூட இம்மக்களுக்கு
செய்து தரப்படவில்லை. மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்பகுதி இருந்து
வருகிறது. மக்களின் போராடத்திற்குப் பிறகு கூர்க்காலாந்து போன்று
இங்கும் மேம்பாட்டுக் கவுன்சில் அமைக்கப்பட்டது. அதனால் பெரும் பயன்
எதுவும் ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்து வந்துள்ள ஆட்சிகள்
அனைத்தும் காஷ்மீர் சமவெளியை மட்டும் கவனித்துக் கொண்டனவே தவிர ஜம்மு
மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளையும் தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளன.
அதில் லடாக்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்பகுதியில் இருந்து
நான்கே நான்கு நபர்கள் மட்டுமே இதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். அந்த நான்கு பேர் கூட முஸ்லிம்கள் ஆவர். பௌத்த சமயத்தை
சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநில அரசுப் பணித் தேர்வுக் குழு சார்பில் 1997-98 ஆம்
வருடம் காஷ்மீர் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை சேவைகளுக்காக தேர்வு
நடத்தப்பட்டது. அதில் ஒரு கிறிஸ்துவர் மூன்று முஸ்லிம்கள் மற்றும் 23
பௌத்தர்கள் தேர்வாகினர். அதில் 1 கிறிஸ்தவர் மற்றும் 3 முஸ்லிம்களுக்கு
அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரேயொரு பௌத்தருக்கு மட்டும் வேலை
வழங்கப்பட்டுள்ளது.
லடாக்கிலிருந்து காஷ்மீர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 22 பேருக்கு இதுவரை
எந்த ஒரு வேலையும் வழங்கப்படவில்லை. ஜம்மு&காஷ்மீர் அரசு எப்படி
பாகுபாடு காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஒரு உதாரணமே
போதுமானது. ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைமை செயலகப் பணிக்காகவென தனியான தேர்வு நடைபெற்று
வருகிறது. தற்போது அங்கு 3,500 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவர்
கூட லடாக் பகுதியைச் சேர்ந்த புத்தமதத்தினர் இல்லை. கடந்த 52 வருடத்தில்
நான்காம் நிலை ஊழியராகக் கூட லடாக் புத்தமதத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு
செய்யப்பட்டதில்லை. 1996 இல் 2.54 லட்சம் பேர் மாநில அரசுப் பணிகளில் இருந்து வந்தனர். அது
3.58 லட்சமாக 2000 வருடம் உயர்த்தப்பட்டது. அதில் 1.04 லட்சம் பேர் பாரூக்
அப்துல்லா முதல்வராக இருந்தபோது தேர்வு செய்யப்பட்டவர்கள். அதில் வெறும்
319 பேர் மட்டுமே லடாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒரு
சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே லடாக்கியர்கள். மாநிலத்தில் இருக்கின்ற 9 பொதுத் துறை நிறுவனங்களில் மொத்தம் 21.286 பேர்
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் லடாக்கை சேர்ந்த 3 பேருக்கு மட்டும்
அரசுப் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள எந்த
பொதுத் துறை நிறுவனத்திலும் அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்பட்டது
இல்லை. இதைப் போன்றே கிராம அதிகாரிகளாக 1997இல் 24 பேர் தேர்வு
செய்யப்பட்டனர். அதில் ஒரேயொரு லடாக் புத்த மதத்தவருக்கு
மட்டுமே இவ்வேலை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 40 பேர் மாநில
கல்வித்துறையில் கடைநிலை ஊழியராக பணியாற்றிட தேர்வு செய்யப்பட்டனர். அதில்
39 பேர் காஷ்மீர் முஸ்லிம்கள் ஆவர். ஒரேயொரு புத்தமதத்தினர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதிகளில் மரணம் அடையும்
புத்தமதத்தவர்கள் அங்கு இறுதிச் சடங்குகளை செய்திட முஸ்லிம்கள்
அனுமதிப்பதில்லை. உடல்கள் அங்கிருந்து புத்தமதத்தவர்கள் அதிகமாக வசித்து
வருகின்ற பகுதிக்கு எடுத்து வரப்பட்டு அங்குதான் இறுதிச் சடங்குகள்
நடத்திட முடியும். லடாக் மற்றும் லே பகுதிகளை சுற்றுலாத் தளமாக பிரசாரம்
செய்து வருகிறது அம்மாநில அரசு. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் ஈர்த்திடும்
வகையில் எவ்வித முயற்சியும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. லடாக் புத்த கலாசாரம், பண்பாடு, கலைகள், கைவினைப் பொருட்கள் பற்றி
சிறிது கூட கவலைப்படாமல் வெறும் விளம்பரம் மட்டும் செய்து வருகிறது.
பழைமையான புத்த மடாலயங்கள் , விஹாரங்கள் சரியான பராமரிப்பு இன்றி சிதைந்து
வருகின்றன. அதுவுமின்றி லடாக்கில் அதிகரித்து வருகின்ற முஸ்லிம்களின்
குடியேற்றத்தினால் புத்த மதத்தவர்கள் பல புதிய பிரச்சனைகளை சந்தித்து
வருகின்றனர். காஷ்மீர் சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே மாநிலத்தின் அனைத்து
பிரச்சனைகளையும் கையாளுகின்றனர். முடிவுகளும் அங்கிருக்கின்ற அதிகாரிகள்,
மந்திரிகளே எடுத்து வருவதால் தொடர்ந்து ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள்
பாதிக்கப்பட்டு வருகின்றன. சரியான தீர்வும் நியாயமும் அம்மக்களுக்கு
கிடைப்பதில்லை. லடாக் மொழி, கலாச்சாரம், பாரம்பரியமான பழக்க வழக்கங்கள்
பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. அவைகளின் மேம்பாட்டிற்காக அரசு
எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. லடாக்கில் இருந்து வருகின்ற
போதி மொழி மிகத் தொன்மையானது. காலத்தால் கணிக்க முடியாத பல சம்ஸ்க்ருத
படைப்புகள் அழிந்து விட்டன. ஆனால் இன்றும் கூட அவைகள் போதி மொழியில்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உருது மொழிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் சிறிது
கூடக் கிடையாது. ஆனால் மாநில அரசு உருது மொழியை அரசு அலுவல் மொழியாக
அறிவித்து அதை மக்கள் மீது திணித்து வருகிறது. லடாக் பகுதிக்கு சிறிதும்
தொடர்பில்லாத உருது மொழியை பாடத் திட்டத்தில் புகுத்தி அப்பகுதி மாணவர்கள்
மீது உருது மொழியை திணித்து வருகிறது.மாநில அரசு போதி மொழியை அழித்திடவே
விரும்புகிறது. தொன்மையான போதி மொழியைக் காப்பாற்றிட வேண்டுமெனில்
அம்மொழியை நமது அரசியல் சாசன சட்டத்தில் அட்டவணை 14 இல் சேர்த்திட
வேண்டும்.
1600 கிலோமீட்டருக்கு நமது நாட்டின் எல்லைப் பகுதிகள் லடாக்கில் இருந்து
வருகிறது. நமது நாட்டினை காப்பாற்றிட எல்லையைக் காப்பாற்றிட வேண்டியது
இன்றியமையாததாகும். ஆனால் நமது மத்திய மாநில அரசுகளோ அதைப் பற்றி சிறிதும்
அக்கறை கொண்டதாகத் தெரிய வில்லை. ராணுவ முக்கியத்துவம் உள்ள பகுதியை
காத்திட அங்குள்ள மக்களின் நன்மதிப்பினைப் முதலில் பெற்றிருக்க வேண்டும்.
லடாக் மக்களின் மொழி இலக்கியம் மதம், பண்பாடு கலைகள் போன்றவற்றினைக்
காப்பாற்றிடவும், அப்பகுதியைக் சர்வதேச ஆதிக்கக் கும்பல் மற்றும் சீனாவின்
ஆக்கிரமிப்பு வெறியிலிருந்து காப்பாற்றிடவும் தனி யூனியன் பகுதியாக
லடாக்கினை அறிவித்திட வேண்டும்.
நா.சடகோபன்
No comments:
Post a Comment