*நீர்யானை, காட்டுப்பன்றி, வால்ரஸ் இவற்றுக்கும் யானைபோல் தந்தம் உள்ளது.
*தேவாங்கு சாப்பாட்டைத் தண்ணீரில் கழுவிய பின்பே சாப்பிடும்.
*நத்தைக்கு ஒரு மைல் கடக்க மூன்று வாரங்கள் ஆகும்.
*நாம் ஓர் அடி எடுத்து வைக்க 200 தசைகள் வேலை செய்ய வேண்டும்.
*ஒரு பெண்ணின் இதயம் ஆணின் இதயத்தைவிட அதிகமாகத் துடிக்கும்.
நாம் உண்ணும் உணவு வாயிலிருந்து வயிற்றுக்குச் செல்ல சுமார் 7 நொடிகள் ஆகும்.
*நம் உடலில் உள்ள ஒரு சிவப்பணு (RBC) உடல் முழுவதும் சுற்றி வர 20 வினாடிகள் ஆகும்.
*நண்டின் ஓட்டிலிருந்து கெய்டி என்ற செயற்கை நூலிழை தயாரிக்கப்படுகிறது.
இது அறுவை சிகிச்சையின் போது தைக்கப்படும் நூலாகப் பயன்படுகிறது.
*நீலத் திமிங்கிலம் பிறக்கும்போது அதன் எடை சுமார் 3000 கிலோ. ஆனால்
பிறந்து இரண்டு வருடங்களில் குட்டி நீலத் திமிங்கிலம் அடையும் எடை
சுமார் 26,000 கிலோ.
*வாடிகன் நகரில் போப்பாண்டவர் அணியும் மோதிரத்தின் பெயர் பிஷ்ஷர்
மேன்ஸ்ரிங். முதலாம் போப் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவராதலால் இந்தப்
பெயர் ஏற்பட்டது.
*உலகிலேயே மிகப்பெரிய அணை பாகிஸ்தானில் உள்ளது. டர்பெலா என்ற இந்த அணை இண்டஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 480 அடி. அகலம் 9000 அடி.
*‘”லாக்டோஸ்’ எனப்படுவது பாலில் உள்ள சர்க்கரை அளவு
.
*‘”டாக்சிகாலஜி’ எனப்படும் படிப்பு விஷமுறிவு தொடர்பானது.
*தாவரவியல் ஆய்வுமையம் அமைந்துள்ள இடம் லக்னோ.
*‘”ரெட் ஆர்மி’ என்பது ரஷ்ய ராணுவத்தின் பழைய பெயர்.
*இந்தியாவில் சர்க்கரை தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கான்பூர்
*உலகில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் அதிக சொற்களை உடைய மொழி ஆங்கிலம்தான். இதில் கிட்டத்தட்ட 8 லட்சம் வார்த்தைகள் உள்ளன.
*ஆக்டோபஸ் கண்களை டெலஸ் கோப் போல முன்னும், பின்னும்
அசைக்கும். தூரத்துக்குத் தகுந்தாற் போல, தன் பார்வையைச் சரி செய்துகொள்ளும்.
*ஒருவர் தும்மும்போது 2000 முதல் 5000 நீர் அணுத்துளிகள் வெடித்துச் சிதறுகின்றன. தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ.
*ஒவ்வோர் உயிரியின் உடல் அமைப்பிலும் ஓர் உயிரியல் கடிகாரம் (பயாலஜிகல்
கிளாக்) உள்ளது. இதன் இயங்கு தன்மைகேற்ப ஒரு லயம் (தம்) ஒவ்வோர்
உயிரியிலும்
உண்டு. சேவல் குறிப்பிட்ட நேரத்தில் கூவுவதும் இதனால்தான்.
*மிளகாயிலுள்ள காப்சாசின் என்ற காரச்சத்து நாக்கில் உள்ள நரம்பு முனைகளைத் தூண்டிவிடுவதால் வாய்ப்பகுதியில் எரிச்சல் உண்டாகிறது.
*அமெரிக்க வானவியலாளர் எட்வின் ஹப்புள் (1889-1953) பிரபஞ்சம் விரிவடைந்து
வருவதாகக் கூறினார். ஒரு பார் செக் வினாடிக்கு பிரபஞ்சம் 550 கி.மீ.
விரிவடைவதாக ஹப்புள் கூறினார்.
No comments:
Post a Comment