பில் வார்னர் என யூ-ட்யூபில் டைப் செய்து பாருங்கள். உங்கள் நெட்
கனெக்ஷன் நார்மல் ஸ்பீடை விட கொஞ்சம் அதிகமாக லோடு ஆகும். காரணம்,
இப்போதைக்கு வார்னர்தான் வேர்ல்டு ஃபாஸ்டஸ்ட் பைக்கர்! கடந்த சில
மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லாரிங் விமான தளத்தில் வார்னர்,
தானே டியூன் செய்த ஹயயூஸா மாடல் பைக்கில், விரட்டித் தொட்ட வேகம் மணிக்கு
505 கி.மீ (311 மைல்)!
இவரின் பைக் மெத்தனால் எரிபொருளில் இயங்குகிறது. 1299 சிசி இன்ஜின் கொண்ட இது 1000 தீலீஜீ சக்தியை வாரி வழங்குகிறது.
''எல்லாரும் பைக்கை அணுகும் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது பில்
வார்னரின் அணுகுமுறை. ஒரு விஞ்ஞானியின் மனநிலையில்தான் அவர் பைக்கைத்
தொடுவார். இந்த பைக்கை தயார் செய்ய அவரிடம் இருந்த பணம் மிகக் குறைவு.
ஆனால், தன்னம்பிக்கையும் அறிவும் மிக மிக அதிகம். இன்னும் ஐந்து
ஆண்டுகளுக்கு அவரது சாதனையை யாராலும் நெருங்கக்கூட முடியாது'' என
பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர் அவரது ரசிகர்கள். மணிக்கு 278 மைல்
வேகத்தில் பைக் ஓட்டியதுதான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. இந்த
முந்தைய சாதனைக்குச் சொந்தக்காரரும் பில் வார்னரே!
கூகுள்
No comments:
Post a Comment