Search This Blog

Wednesday, October 19, 2011

தலைவர் - தளபதி மோதலில் பரிதி பலியாகிவிட்டார்


தி.மு.க.வில் மேலும் ஒரு சலசலப்பு, உட்கட்சி ஜனநாயகத்தை விமர்சனம் செய்து துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் பரிதி இளம்வழுதி.சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் 200 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றார் பரிதி. இதற்கு உள்ளடி வேலை செய்த சில கட்சிக்காரர்களே காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கடிதம் கொடுத்தார். நடவடிக்கை இல்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதே கட்சிக்காரர்கள், கட்சி வேட்பாளர்களை எதிர்த்தே சில இடங்களில் சுயேச்சைகளை நிறுத்தியிருக்கிறார்கள். மறுபடியும் இந்தப் பிரச்னையைக் குறிப்பிட்டு பரிதியே ஆதாரத்துடன் கடிதம் எழுதி, தலைவரிடம், அதன் நகல் தளபதிக்கும் கொடுக்கப்பட்டது.

அப்புறம் என்ன நடந்தது?


தலைவர், இந்த நடவடிக்கை எடுத்த போது தளபதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தார். ‘எனக்குத் தெரியாமல் கட்சிக்காரர்களை நீக்குவதா?’ என்ற ஈகோ தளபதியைத் தாக்கிவிட்டது. இத்தனைக்கும் மருத்துவமனைக்கும், பின்னர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு வீட்டுக்கும் சென்று தளபதியைச் சந்தித்து விளக்க முற்பட்டார் பரிதி. ஆனால் காக்க வைக்கப்பட்டாரே தவிர, தளபதி அவரைச் சந்திக்கவில்லை. கடைசியில் மறுபடியும் சம்பந்தப்பட்டவர்களின் கட்சி விரோதச் செயல்களைப் பட்டியலிட்டு, சி.டி. ஆதாரத்துடன் தளபதியின் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், பரிதியைக் கூப்பிட்டு விசாரிக்காமலேயே, நீக்கியவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்த்திருக்கிறார் தளபதி. இது துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பில் இருப்பவருக்கு அவமானம் இல்லையா?" 

1980களில் தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது ஸ்டாலினை அமைப்பாளர் பொறுப்புக்கு ப்ரபோஸ் செய்தவர் பரிதி. அதன் பிறகு இருவரும் பலமுறை தமிழகம் முழுவதும் சென்று இளைஞரணியைக் கட்டமைத்தார்கள்.  1991-96ல் ஜெ.வின் அடக்குமுறைக்குப் பயப்படாமல் ஒற்றை மனிதனாக, சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடி, கழகத்துக்கு பலம் சேர்த்தவர் பரிதி. அதையெல்லாம் மறந்து அலட்சியப்படுத்தினால் விசுவாசமிக்க ஒரு தொண்டரைக் கழகம் இழக்கும்,

 

No comments:

Post a Comment