புதிய வங்கிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை கடந்த 22-ம்
தேதி அன்று வெளியிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. இந்த அறிவிப்பின்படி வரும்
ஜூலை 1-ம் தேதிக்குள் புதிய வங்கி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்.
பத்தாண்டு வரலாறு, 500 கோடி மூலதனம் கொண்ட நிறுவனங்கள் வங்கி
தொடங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என பல விதிமுறைகளைச் சொல்லி
இருக்கிறது ரிசர்வ் வங்கி.
புதிய வங்கி தொடங்க டாடா, பிர்லா, ரிலையன்ஸ் என பல பெரிய நிறுவனங்கள்கூட பலமாகப் போட்டி போடுகின்றன. இந்நிறுவனங்களுக்குப் பல தொழில்கள் இருந்தாலும், வங்கித் தொழில் இல்லையே என்கிற மனக்குறை. தவிர, வங்கி நடத்துவதன் மூலம் 3 சதவிகித லாபம் எளிதாகக் கிடைக்கும்.
பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் வங்கிகளின் பிஸினஸ் மாடல் அவ்வளவு சுலபமல்ல. இப்போதைக்கு 27 பொதுத் துறை வங்கிகள், 31 தனியார் வங்கிகள், 38 வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 53,000 கிளைகள் இருந்தாலும், புதிய வங்கிகளைக் கொண்டு வரக் காரணம், இந்தியாவில் சுமார் 65% மக்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கவில்லை என்பதே.

வங்கி தொடங்க பல நிறுவனங் களுக்கு விருப்பம் இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருப்பதா கவே தெரிகிறது.புதிய வங்கிகள் வரும்பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் வங்கிகளுக்கு என்ன
பாதிப்பு ஏற்படும் என்பதும் முக்கியமான பிரச்னை. ஆனால், இந்தியா போன்ற
நாடுகளில் வங்கிகளின் சேவை இன்னும் தேவையாகவே இருக்கிறது. புதிய வங்கிகள்
போட்டிக்கு வந்தால்கூட, அது ஆரோக்கியமானதாகவே இருக்கும். உதாரணமாக, இதற்கு
முன்பு வந்த வங்கிகள் டெக்னாலஜியில் நிறைய புதுமையைக் கொண்டுவந்தன. அதை ஒரு
சவாலாக எடுத்துக்கொண்டு எங்களைப் போன்று ஏற்கெனவே இருக்கும் வங்கிகளும்
நிறைய மாற்றங்களைச் செய்தன. அதனால் புதிய வங்கிகள் வருவது யாருக்கும்
பாதிப்பு ஏற்படாது''.
முக்கியமான விதிமுறைகள்:
* 10 வருடங்களுக்கு மேல் செயல்படும் நிறுவனமாகவும், 500 கோடி மூலதனமும் தேவைப்படும்.
* முதல் 5 வருடங்களுக்கு அந்நிய முதலீடு 49 சதவிகிதத்துக்கு மேல் தாண்டக் கூடாது.
* வங்கிகள் ஆரம்பித்த நாள் முதல் மற்ற வங்கிகள் போல 40 சதவிகிதம் முன்னுரிமை கடன் தர வேண்டும்.
* 25 சதவிகித கிளைகள் கிராமப்புற பகுதியில் ஆரம்பிக்கவேண்டும் (9,999 மக்கள் அல்லது இதற்கும் கீழே இருக்கும் மக்கள் தொகை உள்ள ஊர்கள்).
* வங்கியின் போர்டில் தனி இயக்குநர்கள் (independent Directors) அதிகம் இருக்கவேண்டும்.
* வங்கி ஆரம்பித்த மூன்று வருடத்துக்குள் பட்டியலிடப்பட வேண்டும்.

No comments:
Post a Comment