தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில்
இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள்.
இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்தவர்களுக்கே
அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி
தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான
தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

வீட்டை சுத்தப்படுத்தும் போது மூக்கை துணியால் கட்டிக்கொள்ள வேண்டும்.

தூசி படியும் பொருட்களைப் படுக்கை அறையில் வைக்காதீர்கள்.

வெளியே செல்லும்போது, முகத்தில் மாஸ்க் அல்லது துணி கட்டிச் செல்வதை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

தினமும் காலை மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் தும்மலைத் தூர விரட்டலாம்.

வாரம் இரு முறை ஆவி பிடிக்கலாம்.

கை நகங்களை வெட்டி சுத்தமாக வைக்கலாம்.

அதிக
எண்ணெய் ஆகாரங்கள், கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
ஏனெனில் அதிக எடை காரணமாக, தொண்டை மற்றும் மூச்சுப்பகுதியில் உள்ள
சதைப்பற்று தடிமனாகலாம். இது சுவாசப் பிரச்னைக்கும், தும்மலின்போது அதிக
சிரமத்துக்கும் வழிவகுக்கும்.
No comments:
Post a Comment