அத்தியாவசியத்
தேவைகளின் வரிசையில், இன்டர்நெட்டையும் சேர்க்க வேண்டும் எனுமளவு இணையம்
அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அதிலும், இன்டர்நெட்டை பயன்படுத்தும் பள்ளி
மாணவர் முதல் இன்டர்நெட் மூலம் கோடி, கோடியாக சம்பாதிப்பவர்கள் வரை
அனைவரும் நாடுவது... கூகுள் சேவையைத்தான்! அந்தச் சேவைகளின் பட்டியலும்,
பயன்பாடும் இங்கே..!
கூகுள் மேப், துல்லிய வழிகாட்டி!
தெருவிட்டு தெரு, ஊர்விட்டு ஊர், மாவட்டம் விட்டு
மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் என்று இனி எங்கு செல்ல வேண்டுமென்றாலும்,
வழி சொல்ல நம் கணினியில், கைப்பேசியில் கூடவே வருவார் மிஸ்டர் கூகுள்
மேப். நாம் நிற்கும் புள்ளியில் இருந்து செல்ல வேண்டிய இடத்துக்கான சாலை
வழி மட்டுமல்லாது, அதற்கு அருகே உள்ள லேண்ட் மார்க் உள்ளிட்ட தகவல்களையும்
துல்லியமாக வழங்கவல்லது கூகுள் மேப். https://www.google.co.in/maps/ என்ற வலைதளம் சென்றால், உலகின் எந்தச் சாலைக்கும் வழி தெரிந்துகொள்ளலாம்.

பெர்சனல் பி.ஏ... கூகுள் காலண்டர்!
எந்த நாளில், எந்த நேரத்தில் யாரைப் பார்க்க வேண்டும்,
என்ன செய்ய வேண்டும் என்ற அட்டவணைக் குறிப்பு தொடங்கி, பர்சனல் விஷயங்கள்
வரையான பதிவுக்கு டைரியை மொத்தமாக ரீ-பிளேஸ் செய்கிறது கூகுள் காலண்டர். www.google.com/calendar
உங்களுக்கே உங்களுக்கென ஒரு பக்கம்... உலகம் பார்க்க!
உங்களின் கற்பனையை, கருத்துக்களை, திறமையைப் பதிவேற்ற
உங்களுக்கென சொந்தமாக ஒரு பக்கத்தை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள
வழியமைத்துக் கொடுக்கிறது, கூகுள். https://www.blogger.com’ பக்கத்துக்கு
சென்று, 'பிளாக்கர்’ என்ற கூகுள் சேவையைப் பயன்படுத்தி உங்களுக்கென ஒரு
இலவசப் பக்கத்தை தொடங்கிக்கொள்ளலாம். இதில் பதிவேற்றும் விஷயங்களை
உலகத்தின் பார்வைக்கு வைக்கலாம். 'பிளாக்’-ல் எழுத ஆரம்பித்து, புத்தகம்
எழுதும் வரை எழுத்துலகில் இந்தத் தளத்தில் வளர்ந்தவர்கள் பலர் என்பது
குறிப்பிடத்தக்கது.
சுடச் சுட நியூஸ்!
ஒரு சம்பவம் நடந்த அடுத்த சில நொடிகளிலேயே அதுகுறித்து
அனைத்து தகவல்களையும், புகைப்படம் மற்றும் வீடியோவோடு இன்டர்நெட் மூலமாக
தெரிந்துகொள்ளும் அளவுக்கு இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
அதிலும் சிறப்புப் பெறும் விதமாக, https://news.google.co.in/
கூகுள் நியூஸ் பக்கத்தில் தமிழ் தினசரி தொடங்கி, ஆங்கில செய்தித்தாள்கள்
வரை ஒவ்வொரு நிமிடத்துக்கு இடைப்பட்ட செய்திகளையும் உடனுக்குடன்
தெரிந்துகொள்ளலாம்.
சா.வடிவரசு
No comments:
Post a Comment