அறிவியல் துறைகளில் புதியவற்றைக் கண்டுபிடிக்கும்
விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு தருவதுபோல, பொருளாதாரத்தில்
புதிய கருத்தாக்கங் களைக் கண்டுபிடிக்கும் பொருளாதார நிபுணர்களுக்கும்
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு தரப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான
பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசைப் பெற்றிருப்பவர் பிரான்ஸ் நாட்டைச்
சேர்ந்த ஜீன் டிரோல்.
ஜீன் டிரோல் 1953-ம் வருடம் பிரான்ஸின் டிரோயிஸ் நகரில்
பிறந்தார். பாரிஸில் தனது தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்ட ஜீன் டிரோல்,
1981-ல் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலயில் (MIT) பொருளாதார
ஆய்வுகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார். இவர் டவ்லஸ் ஸ்கூல் ஆஃப்
எக்கனாமிக்ஸ் மற்றும் எம்ஐடியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
நிறுவனங்களின் மார்க்கெட் அதிகாரம் மற்றும் நெறிமுறை
களுக்கு ஜீன் டிரோல் செய்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக
ராயல் சுவீடீஸ் அகாடமி சொல்லியிருக்கிறது. 1980-களில் இருந்தே டிரோல் தனது
ஆராய்ச்சிகளைத் துவங்கியுள்ளார். மார்க்கெட்டில் நிறுவனங்கள் சந்திக்கும்
தோல்விகள், அதற்கான காரணங்கள் குறித்து தனது ஆராய்ச்சியில் விரிவாக
எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

‘மோனோபொலி’ என்று அழைக்கப் படும் ஏகோபித்த அதிகாரம்
கொண்ட நிறுவனங்கள் தொலை தொடர்பு தொடங்கி வங்கிகள் வரை அனைத்து துறைகளிலும்
இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் வர்த்தகப் போட்டியில் மற்ற
நிறுவனங்களை எப்படி மொத்தமாக அழிக்கின்றன என்பதையும், இதுபோன்ற நிறுவனங்களை
எப்படி நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பதை யும் தனது ஆய்வில் தெளிவாக
எடுத்துச் சொல்லியிருக்கிறார் டிரோல்.
நோபல் பரிசு பெற்ற ஜீன் டிரோல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘அதிக அதிகாரமுள்ள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment