தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்
பண்டிகை ஆஃபர்கள் நம் வீட்டின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. முன்பு
கடைகளுக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வழக்க மாகக்
கொண்டிருந்தனர் நம் மக்கள்.
ஆனால், தற்போது வீட்டிலிருந்தபடியே பண்டிகை பர்ச்சேஸை
பக்காவாக முடித்துக்கொள்ளும் வசதியை ஆன்லைன் நிறுவனங்கள்
கொண்டுவந்துவிட்டன. புத்தாடைகள் தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ் என அனைத்துப்
பொருட் களையும் கணினி திரையில் பார்த்தபடி வாங்கிக் குவிக்கிறது இளைஞர்
கூட்டம்.
இதனை நன்றாகப் புரிந்துகொண்ட இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஆஃபர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கி வருகின்றன.
ஒரு நாளைக்கான ஆஃபர், ஒரு மணி நேரத்துக்கான ஆஃபர் என பல
ஆஃபர்களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருவதுடன், இடையிடையே அதிரடி ஆஃபர்களை
வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட செய்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள்.

இதனைச் சமாளிக்க நேரடியாகப் பொருட்களை விற்கும் சில
ரீடெயில் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு ஆஃபர்களை வழங்கத் தொடங்கி விட்டன.
குறிப்பிட்ட தொகைக்கு நீங்கள் பொருட்களை வாங்கினால், மாதந்தோறும்
குறிப்பிட்ட தொகைக்கான பொருட்களை இலவச மாகவே பெறலாம் என்று சொல்லி,
தாங்களும் இந்த ஆஃபர் மழையில் இலவசங்களை கொட்டத் தயார் என்று களத்தில்
குதித்திருக்கின்றன. இந்த ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபரையும்
வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் ரீடெயில் நிறுவனங் களின் வர்த்தகத்தில்
அமைப்பு சார்ந்த ரீடெயில் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.1,76,700 கோடியாக
உள்ளது. அதேசமயம், அமைப்பு சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு
ரூ.13,900 கோடியாக உள்ளது. மொத்த ரீடெயிலுடன் ஒப்பிட்டால், வெறும் 7.9
சதவிகிதத்தையே ஆன்லைன் நிறுவனங்கள் ஆக்கிரமிக் கின்றன என்றாலும் ஆஃபர்களை அள்ளி வழங்குவதில் முதலிடம் பிடிப்பவை ஆன்லைன்
நிறுவனங்களாகவே இருக்கின்றன. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’
என்று அறிவித்து, அன்றைக்கு ஆரவாரமான பம்பர் தள்ளுபடி விற்பனையை
நடத்தியது.
அன்று மட்டும் ஏறக்குறைய ஒரு பில்லியன் முறை (100 கோடி) மக்கள் இந்த
இணையதளத்தை அணுகி பொருட்களைத் தேடியுள்ளனர் என பெருமையோடு சொல்லிக் கொண்டது
ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஒரு ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது
தொடங்கி, பொருளின் விலையில் 90% வரை ஆஃபர் வழங்கும் அதிசயம் அன்று
நடந்ததால், காலை 8 மணி தொடங்கி பலரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து பல
பொருட்களை வாங்கத் தயாரானார்கள்.
இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சாதாரண மாக எல்லா கடைகளிலும்
கிடைப்பது தான். என்றாலும், நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர், அதுவும்
மிகச் சில மணி நேரங்களுக்குத்தான் என்கிற பரபரப்பினால் பலரும் பல பொருட்களை
வாங்க முற்பட்டனர். குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் காலையில் மிகக்
குறைந்த விலையும், நேரம் ஆக ஆக அதிக விலையும் இருந்தது. இருந்தாலும்,
ரீடெயில் கடைகளைவிட விலை குறைவுதான் என்பதால், அதிகமான பொருட்களை மக்கள்
வாங்கிக் குவித்தனர்.
பில்லியன் சொதப்பல்கள்!
‘பிக் பில்லியன் டே’ அன்று ஏறக்குறைய ரூ.600 கோடிக்கு
வியாபாரம் செய்ததாகச் சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஆனால், அன்றைய
தினத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது.
காரணம், இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை விற்பனை
தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு
வந்துவிட்டது.
சில பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஆஃபர் விலை
ஒன்றாகவும், அதனை வாங்கும்போது வேறொரு விலையாகவும் இருந்தது கண்டு பலரும்
அதிர்ந்து போனார்கள். அழகான சுடிதார் 500 ரூபாய் விலையில் கிடைக்கிறதே
என்று ஆசையாக வாங்கப்போனவர்கள், பணம் கட்டும் போது அது 1,200 ரூபாய் என்று
மாறியதைப் பார்த்து அதிர்ந்தனர்.
ஒரு பொருளை வாங்கியவர் அதற்கான பணத்தைக் கட்டிவிட்டு
ஆவலாகக் காத்திருக்க, மறுநாள் காலையில் இந்தப் பொருளைத் தருவதில்
எங்களுக்குச் சிரமம் உள்ளது. அதனால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக்
கொள்ளுங்கள் என்று வந்த மெயிலைப் பார்த்து கடுப்பானவர்கள் பலர்.
பரிசாகத் தரப்பட்ட கூப்பனிலும் பல குளறுபடிகள். ரூ.500
மதிப்புள்ள கூப்பனைத் தந்துவிட்டு, இதனை நீங்கள் பயன்படுத்த 3,000
ரூபாக்குமேல் பொருளை வாங்க வேண்டும் என்று நிபந்தனைப் போட்டதும்
அதிர்ச்சிதான்.
இன்னும் சிலர், சில பொருட்களின் விலையைக் கடந்த மூன்று
மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இப்போது மீண்டும் குறைத்துள்ளனர்.
இதெல்லாம் தள்ளுபடியே கிடையாது என இணையதளங்களில் வெறுப்பு மழை
கொட்டினார்கள்.
பலரும் இப்படி வெறுப்பில் இருப்பதைப் பார்த்து, மறுநாள் காலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.
அடுத்தது அமேசான்!
ஃப்ளிப்கார்ட்டின் இந்த மெகா ஆஃபரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் இதேமாதிரியான
தள்ளுபடி கொண்டாட்டத்துக்குத் தயாரானது. ஏற்கெனவே மிஷன் மார்ஸ் என்கிற
பெயரில் ஆஃபர்களைத் தந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் இழுத்துக்கொண்ட வாடிக்கை
யாளர்களை இப்போது தனது பக்கம் இழுத்துக் கொள்ள தயாராகிவிட்டது.
No comments:
Post a Comment