Search This Blog

Wednesday, November 10, 2010

தந்தையின் திவசம்

அன்புள்ள அய்யா !

அய்யா, இது விருது பட்டிக்கே உள்ள பிரசித்து பற்ற தந்தையின் அடை மொழி. 

இன்றுடன் நீங்கள் மறைந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டது. தற்செயலாக என் பள்ளி தோழி உமா போன் பண்ணும் போது நினைவு படுத்தினால் நாலு வருடம் ஓடியதை.. மறந்தால் தான உங்களை பற்றி நினைப்பதற்கு!!!!! நான்கு வருடங்கள் ஓடியது தெரிய வில்லை. நிறைய மாற்றங்கள் நம் குடும்பத்தில் நடத்துள்ளது . மாறாதது என்றும் உங்கள் நினைவில் வாழும் அம்மா.

யாரிடமும் எந்த உதவி மற்றும் கஷ்டம் கொடுக்காமல் ரம்யா திருமணம் முடிந்தது. எல்லோருக்கும் கொடுக்க  வேண்டிய பணம் குடுத்து இன்று நல்ல நிலையில் உள்ளோம் என்று தான் நினைக்குறேன். வீட்டில் என்ன நடக்குதுன்னு எனக்கு முழுவதும் தெரியாது. அம்மா முக்கால் வாசி என்னிடம்  சொல்ல மாட்டார்கள். எதாவது ஆலோசனை கேட்டா நான் சொல்லுவேன். ஆனால், நான் பேசுறத யார் கேட்பார்கள். கடைசியில் ராஜா நீ சொன்னது சரி தான் என்பார்கள். உங்களை போல் நானும் வேண்டா பிள்ளையோ !        

உங்களை பற்றி அதிகமா எனக்கு  தெரியாது. பதினெட்டு வயதில் வியாபாரத்திற்கு வந்து இருபத்தி ஐந்து வயதில் செட்டில் ஆகிய நபர் எனக்கு தெரிந்து நீங்கள் மட்டும் தான். அவ்வ போது அய்யமா சின்ன வயதில் சொல்வார்கள். நானோ அல்லது தம்பி பிறக்கும் போது தான் முதல் இறங்கு காலம் நம்ம குடும்பத்துக்கு. ரம்யா பிறந்ததும் நிலைமை இன்னும் மோசம். ஐந்து இல்லை ஆறு வருடம் சம்பாதித்தை நீங்கள் விட்ட பொற் காலம். ஆனால், அப்போ விழுந்த நம் குடும்பம் இப்போ தான் நிமிர்ந்து இருக்கு. அதுக்கு காரணம் அம்மா. நீங்கள் செய்த அத்தனை தவறுகளையும் பொறுத்து கொண்டு உங்களிடம் இருந்து, உங்களை திருத்தலாம் என்று எண்ணி ஏமாந்து போயி இன்றும் உங்கள் நினைவில் வாழும் அம்மா ! நீகள் இருக்கும் வரை நான் நீங்கள் இருவரும் சண்டை இடவில்லை . உங்கள் மறைவிற்கு பிறகு தான் எங்கள் அனைவர்க்கும் உங்கள் மறு பக்கம் தெரியும்,எதனையும் பிள்ளைகள் இடம் சொல்லாமல் அம்மா இருந்தது.

எந்த கஷ்டம் இருந்தாலும் எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி பொறுப்புள்ள தந்தை ஆக இருந்தீர்கள். நான் கேட்கதா அனைத்தயும் செய்து கொடுத்தீர்கள்.

 ஒன்னு சொல் புத்தி வேண்டும் இல்லை சுய புத்தி வேண்டும். நீங்கள் ஏன் இதை இரண்டையும் உபயோக்கிக்க வில்லை. உங்களை போல் சந்தோசமா வாழ்க்கையை யாரும் வாழ்ந்து இருக்க மாட்டார்கள். இன்னைக்கு நான் எங்க போனாலும் அப்பா என்ன பண்ணுறாரு கேட்குறாங்க! என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இன்றும் நீங்கள் என்னுடன் இருப்பது போல் தான் உணர்கிறேன். 

ஒரு மனுஷன் தான் இறக்க போவதை முன் அறிவித்த நபர் நீங்கள் ஒருவரே.. 2007 பெரிய போட்டோ மாட்டி மாலை போடு அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை. அது நடந்தே விட்டது. உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்கி இன்று அனைவரும் நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள். 

கடந்த ஒரு மாதமாக நான் எதாவது தொழில் பண்ணலாம் ( ஹோட்டல் ) முடிவு  பண்ணி இருக்கேன். ஆனால், நம்ம வீட்ல யாரும் இதற்க்கு ஒத்து கொள்ள மாட்டார்கள். இப்போ நீங்கள் உயிருடன் இருந்தால் எனக்கு நல்ல ஆலோசனை சொல்லி, உதவி செய்து இருப்பீர்கள். உங்க அப்பா நிறைய செல்வம் கொடுத்துட்டு போனார். எனக்கு ஒண்ணுமே குடுக்கலையே! நானே சம்பாதிச்சு, என்னைக்கு தொழில் பண்ணி செட்டில் ஆகுறது! ஹ்ம்ம் .. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு...

கடைசியாக வரலாறு படம் பார்க்க உங்களிடம் நான் பணம் வாங்கி சென்றது.. தீபாவளி முடிந்து ஊருக்கு போகும் போது பேசியது என்று நினைக்குறேன். அதற்க்கு அப்புறம் உங்களிடம் பேசும் பாக்கியம் எனக்கும், தம்பிக்கும் கிடைக்க வில்லை. நீங்கள் நம்ம மில் ல  விடும் குரல் ஓசை வீடு வரை கேட்கும். அம்மா பயந்து போயி வீட்ல இருந்து ஓடி வருவாங்க உங்களை சமாதான படுத்த... அப்படி இருந்த நீங்கள் கடைசியாக பேச முடியாமல் போனதை நினைத்தால் இப்பவும் என் கண்ணில் நீர் முட்டுகிறது. என்னால்  மறக்காமல் இருக்க முடியவில்லை. 

நீங்கள் இறந்த பொழுது அய்யமா  மற்றும் அம்மா அழுதது, இது வரை எதற்குமே கலங்காத அய்யா அழுதது இன்றும் நினைவில் உள்ளது. இன்னைக்கு பிள்ளைகள் அனைவரும் ஒவ்வரு திசையில். அம்மா மற்றும் அய்யமா நம் வீட்ல. இரண்டு நபர்களும் ஒழுங்காக வேளை வேலைக்கு சாப்பிடுவர்கள என்று தெரியாது.

நான் எவளோ பெரிய தப்பு பண்ண பொழுது கோபத்தை என் மேல் செலுத்தாமல், இந்த வயசுல எல்லோரும் பண்ணுறது தான்.. கவலை படாதே மற்றும் மனசுக்கு தப்புன்னு தெரியும் ஆனால் மூளை யோசிக்க விடாது. உனக்கு யாரை கல்யணம் பண்ணனும்னு நீ விரும்பிறியோ அந்த பெண்ணை நீ திருமணம் செய்து சந்தோசமா இரு என்பதை என்னிடம் நீங்கள் சொன்னவை .

இன்னும் சில தினத்தில் நீங்கள் கண்ட கனவு எல்லாம் நினைவாக போகிறது.!!!!!!!! அல்பாயிசில் போய்த் தொலைந்து போயிட்டுகளே  ! இப்போ எங்கள் கூட  மட்டும் இருந்து இருந்தா…? 

நாம ரெண்டு பேரும் ஜாலியா  இரண்டு பரோட்டா  சாப்பிட்டுவிட்டு, ஊர் கதை பேசிட்டு வாழ்க்கையை இனிமையாக கழித்து இருக்கலாம். அய்யா, நான் இன்னும் பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை… இன்னும் என் தேடல் ஓடிக் கொண்டே இருக்கின்றது…என் கஷ்டத்தை போக்கி, எனக்கு நிச்சயம் நல்வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

எப்போதும் நம் சொந்தகளுக்கு வேண்டா பிள்ளையாகியா நான் ....

பிரியங்களுடன்

அன்பு மகன்
ராஜா

இன்னும் எழுத நிறைய இருக்கு.. ஆனால் எனக்கு தூக்கம் வருது. இப்பொழுது வேலை பளுவும் கொஞ்சம் ஜாஸ்தி. ஒரு காலத்தில் ஏன் சும்மா இருக்கிறேன் என்று யோசித்து உள்ளேன். ஆனால், இன்று ஏன் இப்படி வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிய வில்லை. இது வரை நான் படித்த வற்றை என் வலை பூவில் பிரசுரித்து உள்ளேன். எனக்கு தெரிந்து இது நூறாவது பதிவு என்று எண்ணுகிறேன்.. செய்திகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நபர்களுக்கு நன்றி.. நான் எழுதுவதை படித்து என்னை ஊக்க படுத்தும் அனைத்து முகமறியா நண்பர்கள் அனைவருக்கு மிக்க நன்றி .

3 comments:

  1. தந்தை நினைவுகள் அருமை... மனதை உருக்குகிறது. நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி சரவணன்.

    ReplyDelete
  3. In this runing world most of people doesn't give importance to their past life ...the one who keep on remembering of their past footprint will never get a failure ...happy to see such a lovable son!

    ReplyDelete