Search This Blog

Monday, November 01, 2010

சிங்கம்- மசாலா அதிகம்

பொதுவாக ஒரு நடிகர் 25 , 50 மற்றும் 100 வது படம் வெளிவரும் பொது எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். சில படங்கள் மட்டுமே அது மாதரியான எதிர்பார்ப்பை பூர்த்திசெயும். சிங்கம் போல...... வழக்கமாய் யாராவது வேண்டாம் என்று ரிஜெக்ட் ஆன ப்ராஜெக்டை இவர் எடுத்து நடித்தால் அது ஹிட்டாகிவிடும்.  இது விஜயால் நிராகரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் என கேள்விபட்டேன்!!!!!    


கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஹரி..

படத்தின் கதை:
சென்னையில் பெரிய தாதாவாக பிரகாஷ்ராஜ் ஆள்கடத்தல்,மற்றும் புதிதாய் பில்டிங் கட்டுபவர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் வேலை. தூத்துக்குடி நல்லூரில் நம்ம சூர்யா எஸ்.ஐ. அவரின் சொந்த ஊர் அது. பிரகாஷ்ராஜ் சென்னையில் நடக்கும் ஒரு கேஸ் நிபந்தனை ஜாமீன் விஷயமாக நல்லூரில் வந்து கையெழுத்து போட வேண்டுமாம். அங்கே சூர்யாவுக்கும் பிரகாஸ்ராஜ்க்கும் மோதல் ஸ்டார்ட் ஆகிறது. உடனே பிரகாஷ்
தன் பவர் மூலம் சூர்யாவை தன் கோட்டையான சென்னைக்க மாற்றுகிறார்.....பின்பு என்ன என்பதே கதை திரைக்கதை அனைத்துமே..

- பிரகாஷ்ராஜ் அறிமுகம் அமர்க்களம். இழுக்காமல் ஒரே நிமிஷத்தில் அவரை பற்றி குரியது அருமை. 
- கோவில் நகையை திருடும் சமயம் சூர்யாவின் அறிமுகம், தடியன்களை அடிக்கும் பொது சுமோ டாப் ப்ளடே பறக்றது...
- அடுத்து விவேக் அறிமுகம் ஒரு மொக்க..
- அப்புறம் நாயகி... நல்ல cute !!!!!

வழக்கமான திரைக்கதை...ஆனால் அதை கொடுத்த விதத்தில் சற்றே வித்தியாசபடுத்தி 2மணி நேரத்துக்கு மேல் நம்மை உட்கார வைக்கின்றார்...விவேக் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றார்...படத்தின் ரிலிப்இவர்தான்..

சூர்யா செம மாஸ் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் என் பயமெல்லாம் எங்கே இவரும் கூடிய விரைவில் விஜய்,விஷால் லிஸ்ட்இல் சேர்ந்து விடுவரோ என்பது தான்.

முதல் பாதி கொஞ்சம் கலகலப்பா போச்சு,ரெண்டாவது பாதியும் வேகமா தான் போச்சு ஆனா எனக்கு கிளைமாக்ஸ்ல கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிடுச்சு ....அப்புறம் பல யூகிக்க முடிந்த திருப்பங்கள் என்றாலும் ஓகே.

சிங்கம்- மசாலா அதிகம்.

எனக்கு என்ன தோன்றுகிறதுன ஒரு அருமையான மசாலா படத்தை மிஸ் பண்ணிடீங்க விஜய்... ஆனால் ஏன் நண்பன் சொன்னான் " நல்ல வேளை விஜய் இப்படத்தை ஒத்து கொள்ளவில்லை.அப்படியிருந்தால் அவரை போலீஸ் வேஷத்தில் பார்த்து தொலைத்திருக்க வேண்டியிருக்கும்." :)

1 comment: