Search This Blog

Monday, November 15, 2010

மரியாதை ராமண்ணா (Maryada Ramana )


மரியாதை ராமண்ணா (Maryada Ramana ):

இந்த  படம் பார்க்கணும் ரொம்ப நாளா ஆசை பட்டு கொண்டே இருந்தேன் . அதற்க்கு இன்று தான் வழி பிறந்தது. அதுவும் புத்தம் புதிய காப்பி  ஆங்கில துணை எழுத்துகளுடன்.... தெலுங்கு பட உலகின் வெற்றி பட இயக்குனர் ராஜ்மெளலி. மகதீரா என்ற மாபெரும் ஹிட் கொடுத்தவர். இந்த படத்தை நான்  பார்க்க காரணம்  படத்தின் நாயகன் சுனில்.

கதை 1982 இல் துவங்குகறது.. ராமனின் அப்பா ஊர் தகராறில் கொல்லப்பட, அச்சமயம் அவர் தன்னை தாக்கா வந்த எதிரியும் கொள்கிறார். இதனை கண்ட எதிரியின் குடும்பம் அவன் தந்தையின் அனைத்தும் சொந்தங்கள்  கொல்ல சத்தியம் செய்கிறார்கள்.  அவன் தை ராமனை தூக்கி கொண்டு ஹைதராபாத் வருகிறாள் .அடுத்த ரீலில் பதினெட்டு வருடங்களக்கு பிறகு என்று தொடங்கு கிறது..

முதல் கட்சியில் ராமன் சைக்கிள் ஒட்டி கடைகளில் மூட்டை போட்டு சம்பதிபதாக கட்டுகிறார்கள்.. ஆனால், அவனிடம் உள்ள சைக்கிள் மிகவும் பழமை ஆனது. அதனால், அவனால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் அவனுடைய வேலை போகிறது. இரண்டு லட்சம் இருந்தால் ஒரு ஆட்டோ வாங்கலாம் தன்று முடிவு பண்ணு கிறான். அச்சமயத்தில்  கிராமத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வருகிறது 5 ஏக்கர் நிலத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி வர, தான் இடம் இருந்த சைக்கிளை வெள்ளத்தால் பதித்த மக்களுக்கு தானமாக  தூக்கி கொடுத்து விட்டு ரயில்  ஏறுகிறான்.. நிகை அங்கு சந்திக்கிறான். அவன் செய்யும் கோமாளித்தனம் நாயகியை கவர் செய்கிறது. அட நமலையும் சேர்த்து தாங்க.. நாயகிக்கு படம் வரைவது பொழுது போக்கான விஷயம்..

 ராமனின் அப்பாதான் நாயகியின் தந்தையின் தம்பியை கொன்றது .அதற்கு பழி வாங்க காத்திருக்கிறார் நாயகி தந்தை. ஊருக்குள் வந்து  நாயகி விட்டுப் போன புத்தகத்தை கொடுப்பதற்காக அவளின் வீட்டிற்கு வரும் ராமனுக்கு தெரிய வருகிறது தன்னை அவளுடய அப்பா கொல்ல காத்திருக்கிறார் என்று. அவருக்கு ஒரு பழக்கம் தன் வீட்டிற்கு விருந்தாளியாய் வந்தவர்களை எக்காரணம் கொண்டு வீட்டில்  மனவருத்தம் ஏற்படக்கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததும், அவனை வெட்ட ஏற்பாடு செய்திருக்க.. இது தெரிந்த ராமன் வீட்டை விட்டு வெளியேறாமல் பிரச்சனைகளை பெரிதாக்குகிறான். அவன் தப்பித்தானா? அவனுக்கும்,  நாயகிக்குமான காதல் என்னாயிற்று என்பதை சிரிக்க சிந்திக்க  சொல்லியிருக்கிறார் ராஜ்மெளலி.

எனக்கு  பிடித்த காட்சிகள் :

  • ஓடும் ரயிலில் ஏற நாயகி  ஓடிவர, அவரை கைபிடித்து தூக்குகிறேன் என்று கைநீட்டி ராமன் பிளாட்பாரத்தில் கீழே விழும் காட்சி.
  • எதையும் கிண்டல் செய்யும் எதிர் சீட்டுக்காரன், அவனிடம் ராமன் வம்புக்கு போகும் காட்சி அனைத்தும் சூப்பர் ..
  • இளநீர் வாங்குகிறேன் என்று ரயில் கிளம்பும் சமயம் வரையில் பேரம் பேசிவிட்டு இளநீரை வாங்க, ஜன்னலுக்கு வெளீயே இளநீர் மாட்டிக் கொள்ள, நாயகி பார்க்காமல் சமயம் அது அவன் கையில் வரும் அந்த சீன்..
  • படம் நெடுக கூட வரும் அந்த சைக்கிள் :)

நாயகி வீட்டிற்க்கு சென்றவுடன் படம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டுகிறது. இதற்க்கு மேல் கதை சொன்னால் சுவாரசியம் குறைந்து போய் விடும்.


மரியாதையை ரமணா (Maryada Ramana ): A good screen Play Movie. Don't Miss It..

2 comments:

  1. உங்களுக்கு விமர்சனம் நன்றாக வருகிறது புதுப்படங்களை சுட சுட விமர்சனம் பண்ணுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பா. நான் படிக்கும் இடம் கான்பூரில் உள்ளது.. இன்டர்நெட்டில் படம் பார்த்து தான் விமர்சனம் எழுத வேண்டி உள்ளது.. என்னால் உடனே விமர்சனம் தர முடியாது.. மன்னிக்கவும்

    ReplyDelete