Search This Blog

Friday, November 26, 2010

1 மாத மின்கட்டணம் 70 லட்சம்

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் புதிதாக குடியேறிய வீட்டின் முதல் மாத மின் கட்டணம் ரூ.70 லட்சம் வந்துள்ளதாம். 

மும்பையில், 27 மாடிகளுடன் கூடிய வீட்டைக் கட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. உலகிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக இது வர்ணிக்கப்படுகிறது. பெரும் பணக்காரரான பில் கேட்ஸுக்குக் கூட இப்படி ஒரு வீடு இல்லையாம். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் முகேஷ். 

புது வீட்டுக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த மாபெரும் வீட்டுக்கு சமீபத்தில்தான் குடி புகுந்தார் முகேஷ் அம்பானி. இப்போது இந்த வீட்டின் முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 வந்துள்ளதாம். ஒரு வீட்டுக்கு இவ்வளவு அதிக கட்டணம் வந்திருப்பது மும்பை வரலாற்றில் இதுவே முதல் முறையாம். ஒரு மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் அனைத்து மின்சார சாதனப் பொருட்களின் பயன்பாட்டையும் கூட்டிப் பார்த்தால் சராசரியாக 300 யூனிட் வரை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன விசேஷம் என்றால், கட்டணத்தை சரியாக கட்டியதால் முகேஷ் அம்பானிக்கு பில்லில், ரூ. 48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இதைக் கழித்து விட்டுத்தான் இந்த 70 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டியுள்ளாராம் முகேஷ் அம்பானி..

முகேஷ் அம்பானி கட்டியுள்ள இந்த ஒரு மாத பில் கட்டணம், 7000 வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்திற்கு சமம் என்கிறார்கள். 


2 comments:

  1. விடுங்கப்பா இர(ரு)க்கிறவன் அனுபவிக்கிறான்..

    ReplyDelete
  2. இருக்குறவன் அனுபவிக்கிறான் என்பது சரிதான். ஆனால் இப்படியே போனால் பணம் மட்டும்தான் இருக்கும் அனுபவிக்க மின்சாரமோ, எரிபொருளோ இருக்காது.

    ReplyDelete