Search This Blog

Thursday, November 04, 2010

இந்த தீபாவளிக்கு .உத்தம புத்திரன், மைனா, வ குவாட்டர் கட்டிங்,வல்லக்கோட்டை

உத்தம புத்திரன்
Uthamaputhiran
 மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியிருக்கும் ரீமேக் படம். தெலுங்கில் ரெடி என்ற பெயரில் வெளியாகி ஆந்திராவையே அதிர வைத்த படம். சிரியா சிரிச்சு சின்னாபின்னமாகுற அளவுக்கு காமெடி பண்ணியிருக்கிறார்களாம் இதில். எல்லா பிரேம்களிலும் ஒரே கூட்டம் கூட்டமாக ஆர்ட்டிஸ்டுகள். தனுஷ§க்கு மாமாவாக நடித்திருக்கிறார் விவேக். எல்லா படத்திலும் அட்வைஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று வளவளக்கும் விவேக், இந்த படத்தில் பேசாமலே நடித்திருக்கிறாராம்.  இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஜெனிலியாவுக்கு இது ரெண்டாவது டேக். ஆமாம். தெலுங்கு ரெடியிலும் இவர்தான் ஹீரோயின். வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று மனதாலும் யோசிக்கவில்லையாம் மித்ரன். அந்தளவுக்கு இந்த கேரக்டரோடு அவங்க கலந்திட்டாங்க என்கிறார் அவர். சன் பிக்சர்ஸ் கேட்டும் கொடுக்காமல் ரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளர் ரமேஷ் பாபு. அப்படின்னா யோசிச்சுக்க வேண்டியதுதான்.

நான் ரெடி படத்தை  ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்தேன்.. நகைச்சுவை தான் பிரதானம். ஆனால் இரண்டாவது பத்தி இழுவை. கண்டிப்பா போட்ட பணம்  எடுக்கும் ..

மைனா- பெரிய நடிகர்கள் இல்லை. பெரிய இயக்குனரும் இல்லை. முதலில் Mynaaபடத்தை தயாரிக்க துவங்கியது பெரிய கம்பெனியும் இல்லை. ஆனால் இதெல்லாம் நடந்துருமோன்னு நம்பிக்கையா இருக்கு! கோடம்பாக்கத்தில் எங்கு திரும்பினாலும் இந்த படம் பற்றிய பேச்சுதான். பெட்டி டெலிவரி ஆகிற வரைக்கும் படத்தை யாருக்கும் காட்டவே மாட்டார்கள். வெளியே போய் வேறு மாதிரி பரப்பி விடுவார்கள் என்ற பயம்தான். ஆனால் கோடம்பாக்கத்தில் விவிஐபி என்று சொல்லப்படுகிற அத்தனை பேருக்கும் மைனா திரையிடப்பட்டுவிட்டது. ஒருவர் மற்றவருக்கு சொல்லி, அவர் வேறொருவருக்கு சொல்லி காற்றுவாக்கில் கம்பீரமாக சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது மைனா! விதார்த், அமலா நடித்திருக்கும் இந்த படத்தில் தம்பி ராமைய்யாவுக்கு மிக முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கிறார் டைரக்டர் பிரபுசாலமன். கடைசியில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி 'காதல்' பட க்ளைமாக்ஸ் போல நாலு நாளைக்கு யாரையும் து£ங்க விடாது என்கிறார்கள். பணம் போட்டவங்க நிம்மதியா து£ங்கினா சரி.

இன்னொரு பருத்தி வீரன் இல்லை காதலில் விழுந்தேன் !!!!!! கண்டிப்பா அமலா பால் ஆகா இந்த படம் பார்க்கலாம் .

வ குவாட்டர் கட்டிங் - சென்னை 28, தமிழ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து Va Quarter Cuttingதனி ரூட் போட்டுக் கொண்டிருக்கும் சிவா ஹீரோவாக நடிக்க, ஓரம்போ பட இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கியிருக்கும் படம். சவுதிக்கு போக இருக்கும் சிவா  ஒரு குவாட்டருக்காக நள்ளிரவில் தெரு தெருவாக அலைந்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வதுதான் கதை என்கிறார்கள். தலைப்பும் பிரச்சனையாகி வரிவிலக்கு இல்லை என்கிற அளவுக்கு போயிருக்கிறது. பட விளம்பரங்களில் ஒரு குவாட்டர் பாட்டில் இருந்தது முன்பு. இப்போது லேபிள் மட்டும்தான் இருக்கிறது. அப்படி ஒரு விமர்சனத்தை சந்தித்தாலும் உற்சாகம் குறையாமல் இருக்கிறார்கள் யூனிட்டில். காரணம் இது இக்கால இளைஞர்களுக்கான சினிமா. கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று பாட்டிலுக்கு அடியில் தட்டி சத்தியம் செய்கிறார்கள். சிவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் லேகா வாஷிங்டன். இன்னொரு முக்கிய கேரக்டரில் எஸ்.பி.பி.சரணும் நடித்திருக்கிறார். வசனங்கள் ரொம்பவே ஆபாசம் என்று இப்பவே ஒரு வதந்தி பரவிக்கிடக்கிறது.

பாடல்கள் எல்லாம் ஓகே தான்..ஹிட் ஆகும்னு சொல்ல முடியாது.. ஆனால் பிளாப் ஆகாது..

வல்லக்கோட்டை- அருண் விஜய்க்கே ஒரு வெற்றியை கொடுத்த இயக்குனர் Vallakottaiஏ.வெங்கடடேஷ் அர்ஜுன் கிடைத்தால் விடுவாரா? தனது வழக்கமான மசாலாவை அர்ஜுன் மேல் தடவி ஆல் கிளாஸ் அப்ளாஸ் நோக்கத்தோடு எடுத்திருக்கிறாராம் இந்த படத்தை. வல்லக்கோட்டை பற்றி கேள்விப்படுகிற விஷயங்களில் ரொம்பவே நிம்மதி தருகிற ஒரு விஷயம் இந்த படத்தில் அர்ஜூன் போலீஸ் அதிகாரி இல்லை. இவருக்கு ஜோடியாக ஹரி ப்ரியா நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் அர்ஜுன் ரிஸ்க் எடுத்திருக்கிறார். அதே ரிஸ்க்கை காதல் காட்சிகளில் ஹரிப்ரியா எடுத்திருக்கிறார். பொதுவாகவே அர்ஜுனுக்கு காமெடி சென்ஸ் அதிகம். அவருடன் விவேக்கோ, வடிவேலுவோ இருந்தால் படம் பட்டைய கிளப்பும் என்பது முன் அனுபவம். இந்த படத்தில் இருவருமே இல்லை. சத்யன் இருக்கிறார் இருவருக்கும் பதிலாக. அதுதான் கொஞ்சம் ஜெர்க் அடிக்க வைக்கிறது.

எதாவது தியேட்டர்ல மேல குரிய மூணு படத்திற்கு டிக்கெட் கிடைக்காட்டி இதை பாக்கலாம். இது போக இந்த மதம் மந்திர புன்னகை மற்றும் தல மிஸ்கினின் நந்தலாலா வருகிறது. முதல் பதினைத்து நாள் என்ன வசூலோ அது தான் மேலே குரிய திரை படைகளின் வெற்றியை குறிக்கும்.

நன்றி : தமிழ் சினிமா  

No comments:

Post a Comment