Search This Blog

Sunday, November 14, 2010

உத்தம புத்திரன் & வல்லக்கோட்டை விமர்சனம்

யாரடி நீ மோகினி மற்றும்  குட்டி ஆகிய படங்களை இயக்கிய  ஜவகரும் அதில் நடித்த தனுஷும் இணைந்து பணியாற்றி இருக்கும் படம் தான் உத்தம புத்திரன். முந்தைய இரண்டு படங்களை போல இதுவும் தெலுகு படத்தின் தழுவல் தான்.  தெலிங்கில் சூப்பர் ஹிட் ஆனா ரெடிபடம் தான் தமிழில் உத்தம புத்திரன்.

தனுஷ் நண்பனுக்காக திருமண மண்டபத்தில் பெண்ணைக் கடத்தப் போய் மாற்றி வெறொரு பெண்ணான ஜெனிலியாவைக்கடத்திவருகிறார். வழக்கம்போல ஒரு கும்பல் துரத்துகிறது.இருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் செய்யும் உதவிகள் முலமாக இருவருக்கும் காதல் பிறக்கிறது. தன்னுடைய வீட்டிற்கே ஜெனிலியாவை அனுப்பி வைக்க - அங்கு அவர் நல்லபெயர் எடுக்கிறார் .தனுஷீக்குத் திருமணம் முடிக்க அந்தப்பெரிய குடும்பத்தில் முடிவெடுக்கும்போது ஜெனிலியாவைக் கடத்துகிறார்கள் அவருடைய உறவினர்கள்.  ஜெனிலியா குடும்பத்தில் விவேக்கைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்து தன்னுடைய குடும்பத்தினரை வெளிநாட்டிலிருந்து வருபவர்களாக நடிக்க வைத்து  அவர்களை ஏமாற்றி தங்களுடைய திருமணத்தை முடித்து பிரிந்துகிடந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்குள் - எப்போது படம் முடியும் என மண்டை காய்ந்து விடுகிறது.

முதல் பாதி முழுவதும் எதோ ஒரு மெகா சீரியல் பார்க்கும் ஞாபகம் வருவது நிஜம். இன்னும் எத்தன படத்தில் தன் இது போல் பாசகார குடும்பத்தை கட்டி நம்ம பொறுமையை சோதிப்பார்கள். இரண்டாம் பத்தியில் விவேக் வரும் பொது கொஞ்சம் லேசான நைச்சுவை கத்திகளால் படத்தை கொண்டு செல்கிறார்கள். அனைத்து காட்சியையும் முதல் ரீலில் இருந்து கணிக்க முடிவதால் படத்தின் சுவாரசியம் கம்மி ஆகிறது.

கூடிய விரைவில் எதாவது ஒரு தொலைகாட்சியில் இந்த படம் வெளியிடபடுவது நிஜம். ஒரு வேலை நான் ஏற்கனவே ரெடி படம் பார்த்தால்  இந்த படம் என்னக்கு பிடிக்க வில்லையோ . மூன்று மணி நேரம் பொழுது போக வில்லை என்றால் இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்.

வல்லக்கோட்டை :


இதுவும் முதக் படத்தை போல ஒரு ரீமேக் படம் தன் . மம்மூட்டி, கோபிகா நடிச்ச  மலையாள  "மாயாவி" படம் தான் தமிழில் வல்லக்கோட்டை.

 சிறையில் இருக்கும் அர்ஜூன், அங்கு சந்திக்கும் ஒரு கைதியின் தம்பிக்கு உயிர் சிகிச்சை அளிக்க பணம் புரட்டித்தர ஒப்புக் கொள்கிறார். அதன்படி அதிர்ஷ்டவசமாக சிறையில் இருந்து ரீலிஸ் ஆகும் அர்ஜூன், வல்லக்கோட்டைக்கு வருகிறார். அங்கு நடக்க இருக்கும் ஒரு கொலையை தான் செய்ததாக ஒப்புக் கொண்டு மீண்டும் ஜெயிலுக்கு போக சம்மதிக்கிறார். அதற்காக வரும் லட்சக்கணக்கான பணத்தில் தன் சிறை நண்பனின் தம்பிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடும் அர்ஜூன், பெண் (நாயகி) ஒருவரால் சந்திக்கும் பிரச்னைகளும், அதற்கு வாயுபுத்ரனாக அளிக்கும் தீர்வுகளும்தான் வல்லக்கோட்டை படத்தின் மொத்த கதையும்.

சுரேஷைக் கொன்னுட்டு அந்தக் கொலைப்பழியை அர்ஜுன் மேல போட்டுட்டு தப்பிக்கணும்னு  பிளான் பண்றாங்க ஆசிஸ் & கோ . ஆனா அர்ஜுன் மனசு மாறி ஊர் மக்களுக்கு உதவ ஆரம்பிக்கிறாரு, வாயு புத்திரன் என்ற பெயரில் ... நடுவுல சுரேஷோட வீட்டுல வேலை பாக்குற ஹரிப்ரியா கூட காதல். 

அடிக்கடி மாறுவேடத்தில் வரும் அர்ஜூனை நமக்கு அ‌டையாளம் தெரிவதும், எதிராளிகளுக்கு தெரியாததும் காமெடி!!  படத்தோட முதல் நாற்பது நிமிஷம்  ஒண்ணோட ஒண்ணு ஒட்டாத காட்சிகள்.   ”மண்ணானாலும் திருச்செந்தூரில்”பட்டை தினா சுட்டு  கொடுத்து உள்ளார்

“வல்லக்கோட்டை”. . கொடுமைடாNo comments:

Post a Comment