Search This Blog

Thursday, November 11, 2010

ஒபாமா, மிஷேல் ஒபாமா, அஃப்சின் இராணி....

செய்தி ஒன்று! 
ந்த ஆண்டு இந்தியர்களோடு இணைந்து தீபாவளியைக் கொண்டாட ஒபாமா தம்பதியர் வந்திருந்தார்கள்.
செய்தி இரண்டு!
ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிக்க 34 போர்க் கப்பல்கள் மும்பைக்கு அருகில் நடுக் கடலில் நங்கூரமிட்டு இருந்தன. விமானம் விமானமாக ஆயுதங்கள் வந்து இறங்கின. 

இது போன்ற அத்தனை செய்திகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் மிஷேல் ஒபாமா!  (ஒபாமா துணைவியார் ). 

ஒபாமா அமெரிக்க அதிபரானதில் இருந்து, அவருக்கு நிகராகக் கவனம் ஈர்த்தவர் அவரது மனைவி மிஷேல் ஒபாமா. காரணம், அவரது 'டிரெஸ்ஸிங் சென்ஸ்'!

மும்பையில் `45 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க விமானங்களையும், மின் உற்பத்தி சாதனங்களையும் இந்தியாவுக்கு விற்பதில் கணவர் மும்முரமாக இருக்க... மிஷேல், ஆதரவற்ற சிறுவர்களோடு  விளையாடினார். அவர்களோடு கை கோத்துக்கொண்டு 'ரங் தே பஸந்தி' சினிமா பாடலுக்கு நளினமாக நடனம்ஆடினார். மறுநாள், கல்லூரியின் திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில், சுட்டெரிக்கும் வெயிலில் ஒபாமா தம்பதியர் இளைஞர்களைச் சந்தித்தனர். 'சிகாகோவின் சாதாரண குடியிருப்பில் வளர்ந்தவள் நான். எனக்கும் என் சகோதரனுக்கும் கார், பங்களா என்று என் பெற்றோர்களால் எதையும் வழங்க முடியவில்லை. ஆனால் உழைப்பு, படிப்பு ஆகியவற்றின் மதிப்பைக் கற்றுக்கொடுத்தார்கள்!' என்று நெகிழ்ச்சியாகப் பேசிவிட்டு, 'ஆகவே இளைஞர்களே... நீங்கள் உங்களுக்காக மட்டும் கனவு காணாதீர்கள். உங்கள் நாட்டுக்காக மட்டும் கனவு காணாதீர்கள். மொத்த உலகத்துக்காகவும் கனவு காணுங் கள். உலகம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்னை களை உங்களால்தான் தீர்க்க முடியும். அதனால்தான் என்னுடைய கணவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாட்டின் தலைவர்களை மட்டும் சந்திக்காமல் உங்களைப் போன்ற இளைஞர்களைச் சந்திப்பதிலும் உறுதியாக இருக்கிறார்!' என்று உணர்ச்சிகரமாக முடித்தார் மிஷேல்.



 அடுத்தது புனித சவேரியர் கல்லூரியில் மாணவ - மாணவிகளுடன் அவர் கலந்துரையாட லில் கலந்துகொண்டது. அஃப்சின் இராணி என்ற மாணவி கேட்ட கேள்வியில் ஒபாமா திணறி விட்டார் , பதில் சொல்ல முடியாமல் . இவர் மும்பை கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு நிர்வாகவியல் பயில்கிறார்! 

ஒபாமாவின் துணைவி மிஷேல் இந்தக் கலந்துரையாடலைத் தொடங்கிவைத்து, ''என் கணவரும் அமெரிக்காவின் ஜனாதிபதியுமான ஒபாமா இங்கே பேச வருகிறார். அவரிடம் கடினமான கேள்விகளை முன்வைத்துத் திணறடியுங்கள்...'' என்று முன்னுரை கொடுத்தார். அடுத்து ஒபாமா வும், ''பொதுவாக என் மனைவி மிஷேல் பேசிய பிறகு நான் பேசுவதில்லை. காரணம், என் பேச்சு எடுபடுமா என்பதுதான்...'' என சூழ்நிலையை கலகலப்பாக  ஆக்கினார். 

 மாணவி இராணி கேட்ட கேள்வி , ''பாகிஸ்தான் ஏன் அமெரிக்காவின் முக்கியக் கூட்டணி நாடாக இருக்கிறது? அதை அமெரிக்கா ஏன் தீவிரவாத நாடாகக் கருதவில்லை?'' என்று கேட்டார். இந்தக் கேள்வி சற்று தூக்கிப் போட்டிருக்கும் அவருக்கு.  
ஒபாமாவும், ''இது மிகச் சிறந்த கேள்வி. நானும் இதை எதிர்பார்த்தேன்... பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நாடு வளங்கள் நிரம்பியது. அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் பயன்பட வேண்டும். அங்கு தீவிரவாதிகள் உருவாகிவிட்டனர். அது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் அமைதியான நாடாக வேண்டும். அது, அங்கு உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ராணுவரீதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சில முன்னேற்றங்களும் நடந்திருக்கின்றன. 

பயங்கரவாதிகளை ஒழிப்பது என்பது ஒரே இரவில் நடந்துவிடாது. படிப்படியாக நடக்கும். பாகிஸ்தான் வளர்ச்சியில் இந்தியாவுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. பாகிஸ் தானில் ஒரு ஸ்திரத் தன்மை ஏற்பட்டால்தான் இந்தியா வுக்கும் நல்லது. இல்லையென்றால், இரு நாடுகளும் பாதிக் கும். இரண்டு நாடுகளின் வளர்ச்சியில் அமெரிக்கா பங்கேற்கும். அதே சமயத்தில், எந்த ஒரு நாட்டையும் அமெரிக்கா நிர்ப்பந்திக்காது...'' என்று விரிவாக பதில் சொன்னார். 

 அமெரிக்காவின் ராஜதந்திரத்தை அறிந்த இந்திய அரசியல்வாதிகளோ, ஏன் பத்திரிகையாளர்களோகூட அமெரிக்க அதிபரிடம் இப்படியரு கேள்வியைக் கேட்டு இருப்பார்களா? பாகிஸ்தானுக்கும் இந்தக் கேள்வியின் தீவிரம் 'நச்' என உறைத்திருக்கும்!

பயங்கரவாதத்துக்கு எதிரான குரலை ஒபாமா அதிகம் உச்சரித்தாலும் ''ஆசிய நாடுகளுடனான கொடுக்கல் - வாங்கல் உறவை சமநிலைப்படுத்தும் முயற்சியில் குதித்து, ஒரு பிசினஸ்மேனாகவும் அவர் இங்கே வந்து திரும்பினார்.

No comments:

Post a Comment