Search This Blog

Wednesday, February 15, 2012

கையில் கத்தியைக் கொடுத்தது யார்?

 
முன்னர் எல்லாம் ஆசிரியர் மீதான கோபத்தைத் தனிமையில் திட்டியோ, கழிப்​பிடங்களில் கரிக்கட்டையால் கிறுக்கியோ தணித்துக்கொள்வார்கள் மாணவர்கள். அவர்களே வளர்ந்த பிறகு, அதே ஆசிரியர்களைப் பார்த்து, 'இவங்களாலதான் ஒழுங்காகப் படித்தேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். ஆனால் இன்று, மாணவன் கையில் கத்தியை எடுத்து விட்டான். ஆசிரியை உமாமகேஸ்வரியைக் குத்திக் கொன்று விட்டான். அந்தக் கத்தியை அவன் கையில் கொடுத்தது யார்? அது கடையில் வாங்கியதா? அல்லது நமது கல்விமுறை கொடுத்ததா? இந்தக் கேள்விக்கு விடை சொல்ல பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆலோசனையின் கீழ் இந்தியக் கல்வி முறையை வடிவமைத்த பிரிட்டனின் மெக்காலேதான் வர வேண்டும்! 

ஆரம்பக்கல்வி ஆரோக்கியமாக விதைக்கப்பட வேண்டிய 15 வயது வரை இந்தியக் குழந்தைகள் மந்தமாகவே வளர்கிறது என்கிறது ஓர் ஆய்வு முடிவு. 'இந்தக் குழந்தை படிக்கும், இந்தக் குழந்தை படிக்காது என்பதை ஆசிரியரே தீர்மானித்து விடுவதால், பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி ஆரோக்கியமாக அமையவில்லை’ என்கிறது அந்த ஆய்வை நடத்திய அமைப்பு. இந்தியாவிலேயே மேம்பட்ட கல்விமுறையை தமிழகம், இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள்தான் வழங்குவதாகச் சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்​களைவிட ஒப்பீட்டு அளவில் தமிழகத்தில் மேம்​பட்ட கல்விமுறை இருந்தாலும், உலக அளவில் தரம் தாழ்ந்து அதல பாதாளத்தில்தான் இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ பலத்தில் சீனாவை விஞ்ச வேண்டும் என்பது நமது கனவாக இருக்கிறது. ஆனால் சீனாவோ, அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவில் தமது இளம் தலைமுறையை வளர்த்து வருகின்றனர். ஆம், உலகக் கல்வித்தரத்தில் முதல் இடம் சீனாவுக்கே!  

''ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும்?''
 
''ஒரு மாணவன் எப்படிப்பட்​டவனாக இருக்க வேண்டும் என்பதை அவன் வாழும் சூழல் தீர்மானிக்கிறது. பள்ளிக்கூடம் என்பது அதற்கான ஒரு வழியைத் திறந்து விடுகிறது. வீடு, உறவு, நட்பு, விளையாட்டு போன்ற குழந்தைகளின் வேறுபட்ட பல உலகங்களில் பள்ளிக்கூடம் பிரதானமான ஒன்றாகஇருக்​கலாம். ஆனால், நமது பெற்றோர்களும் ஆசிரியர்களும், 'பள்ளிக்கூடம் மட்டுமே உலகம்’ என்று தீர்மானிக்கிறார்கள்.  மதிப்பெண்களின் முன்னால் மண்டியிட வைக்கும்கல்வி முறையே, ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடையே இடை​வெளியை உருவாக்குகிறது. இது, போட்டி- பொறாமையை உருவாக்குகிறது. எனவே, அந்த மாணவன், கல்வி கற்பவனாக இல்லாமல் போட்டிக்குத் தயார் ஆகுபவனாகவே எப்​போதும் இருக்கிறான். அப்ப​டியே வளர்கிறான். இந்தச் சூழ்நிலைதான்மாணவன் கையில் கத்தியைக் கொடுக்கிறது!''
பெற்றோர் தங்களது பிள்ளைகளைக் குழந்தைகளாகப் பார்ப்பது இல்லை. பிறக்கும்போதே டாக்டர்களாக, பொறியாளராக, கலெக்டராகப் பார்க்கிறார்கள். ஐந்தாம் வகுப்பில் ஒரு பாடம் ஃபெயில் ஆனாலே, அவனது எதிர்காலம் போய்விட்டது என்று கத்துகிறார்கள். தாங்கள் இளம் பிராயத்தில் செய்யத் தவறியதை தங்களது பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பேராசைப்​படுகிறார்கள். தங்கள் மனதுக்குள் ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு அதே​போல் பிள்ளை வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவைதான் சிக்கலுக்குக் காரணம்!''
 
பேராசிரியர் கல்விமணி
விகடன்

1 comment:

  1. அருமைப் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete