Search This Blog

Sunday, February 26, 2012

பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!


பவர்கட், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வாக மாறி இருக்கின்றன பசுமை வீடுகள். பசுமை வீடுகளா.. அப்படி என்றால்? அதனால் என்ன பயன்? சாதாரண வீடுகளுக்கும் பசுமை வீடுகளுக்கும் என்ன வித்தியாசம்?

இயற்கை வீடு!

''இயற்கைக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சூரிய வெளிச்சம், மழை நீர் மற்றும் காற்று போன்ற விஷயங்களை அதிகமாகப் பயன்படுத்திக் கட்டப்படும் வீடுகளே பசுமை வீடுகள். சாதாரண வீடுகளைக் காட்டிலும், பசுமை வீடு கட்ட கொஞ்சம் அதிகம் செலவாகும்.  ஆனால், ஓரிரு வருடங்களில் வீடு கட்ட ஆன அதிக செலவை நம்மால் திரும்ப எடுத்துவிட முடியும்'' .

நோ பவர் கட்!

'சூரிய வெளிச்சம், காற்று என இயற்கை நமக்கு அள்ளித் தருவதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஃபேன், ஏ.சி. லைட்னு தேவையில்லாமல் மின்சக்தியை வீணடிக்கிறோம். இப்படி இல்லாமல் சூரிய வெளிச்சம் வீடு முழுக்க கிடைக்கிற மாதிரி வீடுகளைக் கட்ட வேண்டும். வீடு கட்டும்போது எல்லா பக்கமும் சுவர்களால் அடைக்காமல் அதிகமான ஜன்னல்களுடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செங்கல்லுக்கும் நடுவில் இடைவெளி விட்டு கட்டுவதன் மூலம் வீடு குளுகுளுவென்று இருக்கும்.  வெளிச்சமும் வீடு முழுக்க பரவும். இதனால் பகல் நேரங்களில் விளக்கோ, ஃபேனோ மற்றும் ஏ.சி.யோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

தண்ணீர் பஞ்சமிருக்காது!

இன்றைக்கு தண்ணீருக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கிறோம். பசுமை வீடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய மழைநீரை மாடியில் ஒரு தொட்டி கட்டி சேமித்து வைத்து, அதை சுத்தப்படுத்தி குடிக்கவும்,  நம் வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

கரன்ட் பில் ரூ.௭௦

இந்தியா முழுக்க பல பசுமைக் கட்டடங்கள் இருந்தாலும், இரண்டே இரண்டு வீடுகளை மட்டும் பசுமை வீடுகளாக அறிவித்து, சான்றிதழ் அளித்திருக்கிறது ஹைதராபாத்தில் உள்ள 'இந்தியன் கிரீன் கவுன்சில்’. அந்த வீடுகளில் ஒன்று சென்னை, மடிப்பாக்கத்தில் இருக்கிறது.

தீபா 
இ.என்.த்ரீ கன்சல்டன்ட் 

விகடன் 

No comments:

Post a Comment